மனோவியல்

இன்றைய பொருளாதார நெருக்கடி உலகில் நீரிழிவு, இரத்த அழுத்த நோய், இருதய நோய், புற்றுநோய் ஆகியவைகள் மனிதர்களை அதிகமாய் தாக்குகின்றன. இந்த நோய்களெல்லாம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவம் பார்க்கப்பட்டு வருகின்றன. 

ஆனால் இன்று உலகில் மேற்கண்ட நோய்களுக்கு இணையாக மனநோய் என்ற ஒன்று மனிதர்ளை மிகவும் பாதித்து வருகிறது. மேற்கத்திய நாடுகளில் பொது மருத்துவர்களை விட மன நோய் மருத்துவர்களே அதிகம் பேர்கள் இருக்கிறார்கள். இப்போது அதே நிலை நமது இந்திய நாட்டிலும் ஏற்பட்டு வருகிறது. ஒரு ஆய்வு இந்தியாவில் சுமார் 15 கோடி பேர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம். 

இன்றைய பொருளாதார நெருக்கடி உலகில் நீரிழிவு, இரத்த அழுத்த நோய், இருதய நோய், புற்றுநோய் ஆகியவைகள் மனிதர்களை அதிகமாய் தாக்குகின்றன. இந்த நோய்களெல்லாம்

மேலும் ஒவ்வொரு நிமிடமும் இந்தியா முழுக்க தினமும் 400 பேர்கள் தற்கொலை மூலம் தங்கள் பிரச்சனைகள் தீரும் என்று நினைக்கிறார்கள். கிட்டத்தட்ட 12 கோடி பேர்கள் மனநோயின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறார்கள். நமது அருமை தமிழ்நாட்டில் சுமார் 70 லட்சம் பேர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம். மனநோய் என்ற துயரம் தரும் இந்த நோயைப் பற்றிய ஆய்வுகள் 18 - ம் நூற்றாண்டில்தான் தெரிய வந்தது. அதற்குமுன் உடல் நோய்கள் மட்டுமே பிரதானமாக கண்டுபிடிக்கப்பட்டன. 

ஜெர்மனி மற்றும் ரஷ்யா உடல் செயல் பற்றி ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள் சில நோய்களுக்கு எத்தனை சிறந்த மருந்துகளைக் கொடுத்தாலும் சரியாகாத நிலையில் இந்த நோய்களின் தன்மையை ஆராய்ந்தபோது நோய்க்கான காரணம் உடல் மட்டுமல்ல, கண்ணுக்கு தெரியாத மனமும் ஒரு காரணம் என்பதை உணர்ந்தனர் மருத்துவர்கள். இவர்களுக்கு பிறகு வந்த சிக்மண்ட் பிராய்ட்-தான் மனதில் ஆழ அகலங்கள், கனவுகள், பாலியல் பிரச்சனைகளை தீர ஆராய்ந்து மனதின் விசித்திரங்களை கண்டுபிடித்து உலகை வியக்க வைத்தார்.

 சிக்மண்ட் பிராய்ட் இளமைப் பருவம்:

இன்று ஒவ்வொரு மனிதனின் விசித்திரமான செயல்பாடுகள். நோய்களின் பாதிப்புகள், பாலியல் பாகுபாடுகள், மனித இருட்டறைகள் எவருக்கும் தெரியாமல் நடக்கும் கொந்தளிப்புகள், அடக்கப்படும் தீராத விருப்பங்களால் மனிதர்கள் சமூகத்தில் நடந்து கொள்ளும் தடுமாற்ற செயல்கள், அவனின் கனவுகளில் எழும் அடாத செயல்கள், அவர்களின் கோபதாபங்கள் , குழந்தை வயதிலேயே முளைத்தெழும் பாலியல் எண்ணங்கள், உந்துதல்கள் என மனித மனங்களின் உருமாற்றங்களை பல்வேறு மக்களை வைத்து ஆராய்ந்து மருத்துவ உலகிற்கு புதிய மருத்துவ முறையை அறிமுகப்படுத்தினார். 

மனவியல் துறையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்த சிக்மண்ட் பிராய்ட், ஜோசப் பிராய்டு அமாலியா தம்பதிகளுக்கு  இன்றைய செக்குயாசில் அடங்கியிருப்பதும் முன்பு ஆஸ்திரிய பேரரசில் அமைந்திருந்துதமான மொரேஷியாவில் இருந்த பிரியார் என்ற இடத்தில் தந்தையின் 41 வது வயதில் 1856-ஆம் ஆண்டு. மே 6-ம் தேதி பிறந்தார். ஜோசப் பிராய்டுக்கு இரண்டு மனைவிகள், முதல் மனைவிக்கு இரு பிள்ளைகள், இரண்டாம் மனைவியான அமாலியாவிற்கு எழு பிள்ளைகளில் ஒருவராக பிறந்தார். 

ஜோசப்பிற்கு சரியான வேலை இல்லாததால் குடும்பம் வறுமையில் திளைத்தது. கிபி 1860 - ஆம் ஆண்டு சிக்மண்ட்க்கு நான்கு வயது இருக்கையில் குடும்பம் வியன்னாவில் குடியேறியது. பள்ளியில் சேர்க்கப்பட்ட அவர் குடும்ப வறுமையை மீறி மிகவும் கஷ்டப்பட்டு படித்து வகுப்பில் சிறந்த மாணவராக திகழ்ந்தார். பள்ளியில் படிக்கும்போதே பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். குறிப்பாக இத்தாலி, ஆங்கிலம், ஸ்பானிஷ், ஈப்ரூ, லத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு போன்ற மொழிகளை கற்றார் என்றால் அவருக்கு கல்வியின் மீது எத்தனை ஆர்வம் பாருங்கள்!

அவர் பள்ளியில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை விரும்பி படித்தார் . மனித மனங்களை அதன் குணங்களை மிகச் சிறந்த முறையில் எழுதியிருப்பதாக சிக்மண்ட் அவரை பாராட்டினார் . 1873 - ல் பள்ளிக் கல்வி முடிந்ததும் வியன்னா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1881 - ஆம் ஆண்டு மருத்துவ பட்டம் பெற்று வெளியே வந்த அவர் மனிதர்களின் உடலியல், நரம்பியல், மனவியல் பற்றிய ஆய்வில் தீவிரமாய் ஈடுபட்டார். நரம்பியல் பற்றிய ஆய்வுக்காக ஒரு உளவியல் மருத்துவமனையில் ஆய்வு மருத்துவராக சேர்ந்தார். 

உளநோய் மருத்துவர்

அங்கு மருத்துவத்திற்காக வரும் மக்களின் உடல் நோய்களோடு மனவியல் பிரச்சனையை கண்டு அவர்களுக்கு மருத்துவம் செய்தார். ஒருநாள் நடுத்தர பெண்மணிக்கு இசிவு நோய் ( கால், கை, வலிப்பு நோய் ) அடிக்கடி வருவதை கண்டு அவருக்கு தன் கணவனால் ஏற்பட்ட கடுமையான தாக்குதலால் மனதில் உருவான அதிகமான துன்பத்தால் இந்த நோயின் தாக்கம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்து அவருக்கு வாழ்க்கையின் பிரச்சனைகளை எடுத்து சொல்லி மருந்தைக் குறைத்து பேச்சின் அதாவது அன்பான ஆலோசனை மூலம் நோயை குணமாக்கினார்.

உளநோய் பற்றிய ஆராய்ச்சி :

மேலும் அம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் பேசி அவர்களின் நோய்களின் தன்மையை அறிந்து நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அங்கு அவர் கண்டது ... மனிதர்களிடையே ஒரு வித பயம் இருந்தது. அந்த பயம் அவர்களை ஆட்டி படைத்தது. அது மரண பயம். இப்பயம் ஏன், எப்படி உருவாகிறது என்று ஆய்வு நடத்தினார். 1895 - ஆம் ஆண்டு இசிவு நோய் பற்றி புகழ் பெற்ற நரம்பியல் நிபுணர் நோசப் பிராயருடன் இணைந்து எழுதி வெளியிட்டார். ஆண்களை விட பெண்களையே இந்த நோய் அதிகமாய் ஏன் பாதிக்கிறது என்பதை கண்டறிந்து எழுதினார்.

பெண்களுக்குள் உருவாகும் பல்வேறு மனநல பிரச்சனைகளால் நரம்புக் கோளாறுகள் ஏற்பட்டு, அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கின்றன. இதனால் ஏற்படுவது இசிவு நோய் என்பதை கண்டறிந்து எழுதினார். அடுத்து ஐந்தாண்டுகள் கனவுகள் பற்றி ஆய்வு செய்தார். கனவுகள் பற்றி கதைகளில், கவிதைகளில் எழுதப்பட்டு வந்திருந்தாலும் கனவுகள் எப்படி தோன்றுகின்றன? கனவுகளில் தோன்றும் தோற்றங்கள் எதனால்? ஏன் கனவுகள் உருவாகின்றன? என்பதைப் பற்றி ஆராய்ந்தார்.

மனிதர்களின் மனப்பிரச்சனைகளால் நிறைவேறாத ஆசைகளால் கனவுகளில் பல்வேறு தோற்றங்கள் ஏற்படுகின்றன. கனவுகள் பலரை பாதிக்கின்றன. அவைகளின் ஆபாசங்கள், தோற்றங்கள் மனிதர் வாழ்க்கையை சிதைக்கின்றன. பகலில் நமது வாழ்க்கையில் ஏற்படும் அன்றாட நிகழ்வுகள், கோபதாபங்கள் உறங்கும்போது கனவுகளால் பிரதிபலிக்கின்றன என்று கனவுகளின் தோற்றம், மாற்றம், மாயாஜாலங்கள், குணநலன்களை பற்றி ஆராய்ந்து 1900 - ல் கனவுகளின் உட்பொருள் என்ற உலகத்தையே குலுக்கிய நூலை எழுதி வெளியிட்டார்.

இந்த நூலை படித்த பலர் கனவுகள் நிகழ்த்தும் கோரங்களை கண்டு அதிர்ந்தனர். அடுத்து அவர் மனிதர்கள் ஒரு லட்ச ஆண்டு காலத்திற்குள் தோன்றி காட்டுமிராண்டிகளாய் வாழ்க்கையை துவக்கினார்கள் என்றாலும் இன்றும் அவர்கள் நாகரீக காட்டுமிராண்டிகளாய் தான் வாழ்கிறார்கள் என்றார்.

சிக்மண்ட் பிராய்ட் சாதனை

அவரின் இந்த வாதத்திற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது . 1902 - ஆம் ஆண்டு வியன்னாவில் மனவியல் விவாத சங்கத்தை ஆரம்பித்தார். இவரின் மனவியல் கோட்பாடுகள் பற்றி பேச அமெரிக்கா அவரை வரவேற்றது. அங்கு அவர் தொடர் சொற்பொழிவாற்றினார். மேலும் எவரும் அதிகமாய் சிந்திக்காத பாலியல் பற்றி ஆராய்ந்து வெளியிட்டார். 

பாலியல் உணர்ச்சி என்பது இளம் வயதில்தான் தோன்றுகிறது என்பது தவறு. அது குழந்தை பருவத்திலேயே உருவாகி விடுகிறது என்று கூற, இவரின் கூற்றை கேட்டு உலகமே ஆடிப்போனது. மேலும் மனிதர்களுக்குள் அடக்கப்பட்ட பாலுணர்ச்சியானது மனநோயை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது என்ற அவரின் கூற்று உலகை ஆட்டி படைத்தது. இது உண்மை என்பதை உணர்ந்து மருத்துவ உலகம் அவரை பாராட்டியது.

சிக்மண்ட் பிராய்ட் மறைவு :

மனித உள்ளத்தில் தோன்றும் பலவித பிரச்சனைகளை தன் வாழ்நாள் முழுக்க ஆராய்ச்சி செய்த அவரால்தான் இன்று மனவியல் துறை இமயமாக உயர்ந்து நிற்கிறது. பேய், பிசாசு, சூன்யம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் மனநோய்க்காரர்களை ஆட்டுவித்த அந்த போலி வைத்தியர்கள் இவரால் தூக்கி ஏறியப்பட்டார்கள். இன்று மேற்கண்டவைகளை நம்புகிறவர்கள் இருக்கிறார்கள்.

இவர் மனித குல முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். தன் தாடை எலும்பு புற்றுநோய்க்காக 30 முறை அறுவை செய்தும் அதற்காக கலங்காமல் உள்மனம், வெளிமனம், கனவுகள், பாலுணர்ச்சி பிரச்சனைகள், ஈகோ, உடைந்த மனம் என்று மனிதகுல நன்மைக்காக ஆய்வு மேற்கொண்ட மனவியல் மேதையான அவர் 1939 - ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார். மனித வாழ்க்கையில் மனித மன சூட்சமங்களை பற்றி ஆராய்ந்த மனவிஞ்ஞானியான அவரை என்றும் போற்றுவோம்.

Previous Post Next Post