இடிதாங்கி -யை கண்டறிந்த மாமேதை Benjamin Franklin

 ஒரு மனிதன் தன் நேரத்தை முறையாக சிறுவயதிலிருந்து பயன்படுத்தி வந்தால் அவன் உலக மாமேதைகளில் ஒருவராக திகழலாம் என்பதை தன் வாழ்க்கையின் மூலம் பளிச்சென்று வெளிப்படுத்திய சிலரில் அமெரிக்கா தந்த உத்தம உழைப்பாளி மாபெரும் சிந்தனையாளர் , பத்திரிகையாளர் , சிறந்த விஞ்ஞானி , சிறந்த இலக்கியவாதி . மக்கள் பயன்படுத்தும் பல கண்டுபிடிப்புகளை வழங்கிய கண்டுபிடிப்பாளர் . அமெரிக்க நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய விடுதலை வீரர் , சிறந்த அயல்நாட்டு தூதுவர் என பல்வேறு திறமைகளுக்காக உலக மக்களால் பாராட்டிப் போற்றப்படுபவர் Benjamin Franklin ஆவார் . அமெரிக்கா வழங்கிய அற்புத மாமனிதரான Benjamin Franklin தந்தை மெழுகுவர்த்தி தயாரித்து வியாபாரம் செய்து குடும்பம் நடத்தும் ஜோன்ஸா Franklin

இடிதாங்கி -யை கண்டறிந்த அமெரிக்க மாமேதை | Benjamin Franklin | பற்றிய தகவல்கள் | இதோ உள்ளே

அவர்களுக்கு முதல் மனைவி மூலம் நான்கு குழந்தைகள் பிறந்தன . இரண்டாவது மனைவி அபையாகபோல்கர் மூலம் 14 குழந்தைகள் பிறந்தன . நியூ இங்கிலாந்தில் போஸ்டன் நகரில் வாழ்ந்த அக்குடும்பத்தில் 15 - வது பிள்ளையாக பிறந்தார் Benjamin . வீடு நிறைய பிள்ளைகள் இருந்தாலும் அவர்களில் இவர் சுறுசுறுப்பாகவும் , அதிக குறும்புத்தனங்கள் செய்பவராகவும் இருந்தாலும் எந்தப் பொருளையும் ஆழ்ந்து நோக்குபவராகவும் இருந்தார் . தன் சிறுவர் கூட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்துவதில் ஆர்வமுடையவராய் திகழ்ந்தார் . தன் அக்காள்கள் . அண்ணன்கள் சொல்லிக் கொடுப்பதை கவனமாய் கேட்டு அதை அப்படியே சொல்லும் ஆற்றலை பெற்றிருந்தார் . பள்ளிக்கு செல்வதற்கு முன்பே நிறைய பாடங்களை தன் மூத்தவர்களிடம் கற்றுக் கொண்டார் . ஏழு வயதில் ஆரம்ப பள்ளியில் சேர்க்கப்பட்டார் . 

எட்டு வயதில் போஸ்டனிலுள்ள இலக்கண பள்ளியில் சேர்க்கப்பட்டார் . அங்கு லத்தீன் மொழி சொல்லிக் கொடுக்கப்பட்டது . பின்னர் அவரே விரும்பி இத்தாலி , ஸ்பானிஷ் மொழிகளைக் கற்றார் . 9 - ம் வயதில் கணக்கும் . எழுத்தும் கற்றுத் தரும் ஜீப்ரௌனல் பள்ளியில் சேர்ந்தார் . அங்கு அவர் கணிதத்தில் சிறந்தவராக மாறினார் . அவருக்கு கணிதம் மிகவும் பிடித்தமானதாக இருந்தது . அவரே புதிய புதிய கணிதங்களை உருவாக்கினார் . அவரின் கணிதத்திறனைக் கண்டு வியந்தனர் . ஓய்வு நேரத்திற்கு தந்தைக்கு உதவியாளராக இருந்தார் . அச்சிறுவயதிலேயே தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களை படிப்பதிலும் , புதியன கற்றுக் கொள்வதிலும் ஆர்வமாய் செயல்பட்டார் . தனது அண்ணன் ஜேம்ஸ் வைத்திருந்த அச்சுக்கூடத்தில் அச்சுப்பணிகளை கற்றுக் கொண்டார் .

அச்சமயத்தில் நிறைய நூல்களை படித்து அறிவை பெருக்கிக்கொண்டார் . ஜேம்ஸ் நவ இங்கிலாந்து செய்தி என்ற பத்திரிக்கையை நடத்தினார் . அப்போது  Benjamin னுக்கு 14 வயது . அப்பத்திரிக்கையில் வரும் கட்டுரைகளை படித்துவிட்டு தானும் அவ்வாறான கட்டுரை எழுத வேண்டும் என்று விரும்பினார் . எழுதவும் செய்தார் . தான் எழுதியது என்று தெரிந்தால் அண்ணன் பத்திரிக்கையில் வெளியிடமாட்டார் என்பதை உணர்ந்து பெயரின்றி எழுதி அனுப்பினார் . பெயரற்று வந்த கட்டுரை நன்றாக இருப்பதை படித்து அறிந்த ஜேம்ஸ் அக்கட்டுரையை வெளியிட்டார் . தன் கட்டுரை வெளி வந்ததில் மகிழ்ந்த Benjamin தொடர்ந்து எழுதினார் .

 அக்கட்டுரைகளும் வெளி வந்தன . தன் தம்பிதான் கட்டுரைகளை எழுதுகிறான் என்பதை அறிந்த ஜேம்ஸ் தம்பியை கட்டுரைகளை எழுதக்கூடாது என்று தடை விதித்தார் . அவர் எழுதிய கட்டுரை ஒன்று அரசுக்கு எதிராக ( அப்போது அமெரிக்கா இங்கிலாந்தின் அடிமை நாடாக இருந்தது . இருந்ததால் ஜேம்ஸ்க்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது . தன்னால் தன் அண்ணன் சிறை சாலைக்கு சென்றதில் வேதனைப்பட்டார் . 17 வயதில் வேலை தேடி நியூயார்க் சென்றார் . பல கஷ்டங்கள் பட்டார் . பல வேலைகள் செய்தார் . தனது சிறு சேமிப்பைக் கொண்டு எழுதுபொருள் கடையை துவக்கினார் .

 சுமாராக சென்றது . ஓய்வு நேரங்களில் எழுதினார் . நிறைய படித்தார் . தனது 26 வயதில் ஏழை " ரிச்சடின் பஞ்சாங்கமம் " என்ற நூலை எழுதி வெளியிட்டார் . அச்சுத்தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் . டிபோராரீடு என்ற பெண்ணை மணந்தார் . அவர் தனது நூலால் தான் வசித்த பிலாடல்பியா பகுதியில் பிரபலமானார் . சமூக நடவடிக்கைகளில் பங்கு கொண்டார் . ஜார்ஜ் வாஷிங்டன் போன்றவர்கள் அமெரிக்க சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருந்தனர் .

 Benjamin னுக்கு படிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் ஏழை எளியவர்களும் படிக்க வேண்டும் என்று முதன்முதலில் வாசக சாலையை துவக்கினார் . இது அமெரிக்காவின் முதல் வாசகசாலை . தெருவிளக்கு ஒளி உண்டு மூன்று பக்கங்கள் மறைக்கப்பட்டதை உணர்ந்த அவர் நான்கு பக்கமும் கண்ணாடிகளை பதித்து எல்லா பக்கமும் ஒளி தெரியச் செய்தார் . மக்களின் பாதுகாப்பிற்காக மக்கள் காவல்படை அமைத்தார் . அப்போதெல்லாம் வீடுகளில் குளிர்காய விறகுகள் பயன்படுத்துவார்கள் . இவர் ஸ்டவ் அடுப்பை உருவாக்கினார் . புதியன செய்வதில் ஆர்வம் காட்டினார் . அப்போது கிட்டப்பார்வை , தூரப்பார்வைக்கு தனித்தனி கண்ணாடிகள் உபயோகப்படுத்தினார் . இவர் ஒரே கண்ணாடியில் இருவேறுபட்ட லென்ஸ்களை பொருத்தி சாதனை செய்தார் .

மின்சாரத்தில் பாசிடிவ் , நெகடிவ் என்ற இரு தன்மைகள் இருப்பதை 1746 - ஆம் ஆண்டு ஆய்வு செய்து வெளியிட்டார் . மின்சார பாட்டரியை முதன் முதலில் தயாரித்தார் . மழை நாளில் மின்னலை கண்டார் . இடியால் பல வீடுகள் சேதமாவதை ணர்ந்தார் . மின்னலும் , மின்சாரமும் ஒன்றே கண்டுபிடித்து கூறினார் . இடியால் பெரிய பெரிய கட்டிடங்கள் உ என்று பாதிக்கப்படுவதை உணர்ந்த அவர் இடிதாங்கியை கண்டுபிடித்தார் . இந்த அரிய கண்டுபிடிப்பை கண்டு விஞ்ஞான உலகம் அவரை பாராட்டியது .

1771 - ஆம் ஆண்டு அவருக்கு பிரெஞ்சு அரசு அறிவியலுக்கான அகாடமி பரிசை வழங்கி சிறப்பித்தது . அவரின் செயல்பாடுகளால் அவர் புகழ் அமெரிக்கா மட்டுமல்ல , உலகெங்கும் பரவியது . அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் . தீவிரமாய் அமெரிக்கா விடுதலைக்காக போராடும் தியாகிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார் . அமெரிக்க விடுதலைக்காக பத்திரிக்கை மூலம் எழுச்சி கட்டுரைகள் தீட்டி மக்களுக்கு உத்வேகம் மூட்டினார் . அவரின் நீதிவழுவாத ஒழுக்க நெறிகளை பாராட்டினர் மக்கள் . அவர் பிலடெல்பியாவின் நீதிபதியாக ஆளுநரால் நியமனம் பெற்றார் . அவரின் அரிய சேவையை பாராட்டி நகர தலைவராகவும் தேர்ந்தெடுத்தனர் . பின்னர் அவர் பென்சில்வேனியா நகரத்தில் மேயராகவும் நியமிக்கப்பட்டார் .

 உள்நாட்டு கலவரத்தை பற்றி பேச தூதுவராக லண்டன் சென்றார் . அங்கு ஐந்தாண்டுகள் தங்கி நல்ல முடிவுகளோடு தாயகம் திரும்பிய அவருக்கு மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர் . அமெரிக்க சுதந்திரத்திற்காக போராடினார் . 1776 - ஆம் ஆண்டு அமெரிக்கா சுதந்திரமடைந்தது . தனது 70 வயதிலும் நாட்டின் ஆவணங்களை தயாரிப்பதில் தனது உழைப்பை வழங்கினார் . அமெரிக்க நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய அவர் டிசம்பர் மாதம் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளின் கமிஷனராக நியமிக்கப்பட்டார் . 1783 - ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கும் , பிரெஞ்சு அரசுக்கும் ஓர் உடன்படிக்கை ஏற்பட மூலகர்த்தாவாக செயல்பட்டு அதன் மூலம் அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார் . அவரின் சிறந்த சேவையை பாராட்டி பிரெஞ்சு மன்னர் 16 - ம் லூயி அவர்கள் அவருக்கு 400 வைரங்கள் பதித்த அரசு பதக்கத்தை வழங்கினார் .

அமெரிக்க மூத்த அரசியல் மேதையான அவரை அமெரிக்க அரசியல் சாசனத்தை தயாரிக்கும் குழுவில் முக்கிய உறுப்பினராக தேர்ந்தெடுத்து அவரை பெருமைப்படுத்தினர் . சிறந்த அரசியல் ஞானி சிறந்த சுதந்திர போராட்ட தியாகி சிறந்த பத்திரிக்கையாளர் சிறந்த புதியன கண்டுபிடிப்பாளர் சிறந்த இலக்கிய மேதை சிறந்த விஞ்ஞானி என பல துறைகளில் சாதித்தவர் . அமெரிக்காவின் முன்னேற்றமே தன் முன்னேற்றமென கருதியவர் . கடும் உழைப்பு , நேர்மை , ஒழுக்கம் . பிறர்நலம் பேணுதல் , நாட்டு முன்னேற்றம் என ஓயாது உழைத்த அப்பெருமகன் 1790 - ஆம் ஆண்டு , ஏப்ரல் மாதம் 17 - ம் நாள் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார் . இன்று அமெரிக்க மக்கள் அவரின் சாதனைகளை மறக்காமல் அவரை போற்றி வணங்கி வருகின்றனர் . தன் நாட்டிற்கு மட்டுமின்றி உலக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட அவரை என்றும் நினைவில் கொள்வோம் .

Previous Post Next Post