முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் பற்றிய விவரங்கள்

மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன்பெறத் தேவையான தகுதிகள்

குடும்ப அட்டை குடும்ப ஆண்டு வருமானம் ரூ 72000 / -க்கு குறைவாக இருத்தல் வேண்டும் உங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து வருமான சான்று பெறவேண்டும்

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை பெறுவது எப்படி?

பழைய மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டையை மாற்றுவது எப்படி என்பதை பார்க்கலாம். 
குடும்ப அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து வருமான சான்றிதழுடன் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கும் காப்பீடு அடையாள அட்டை வழங்கும் மையத்தில் ( District Kiosk) சமர்ப்பித்து அடையாள அட்டைய பெற்றுக்கொள்ளலாம்
பழைய மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டையை தங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கும் காப்பீடு அட்டையில் வழங்கும் மையத்தில் சமர்ப்பித்து புதிய மருத்துவ அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800 425 3993 -ஐ தொடர்பு கொள்ளலாம்.

$ads={1}

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அடையாள அட்டை ஒரு வருடம் தான் செல்லுபடியாகுமா என்ற கேள்வி எழுந்தது ?

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடம் ரூ 1 லட்சம் வழங்கப்படுகிறது மற்றும் இக்காப்பீடு  அட்டையில் மீதம் உள்ள உறுதி அளிக்கப்பட்ட தொகையை பொறுத்து பயன்படுத்தலாம் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் அடையாள அட்டை பற்றிய விவரங்களை பார்க்கலாம் 
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்ட அடையாள அட்டையில் குடும்ப தலைவர் மற்றும் உறுப்பினர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கும் . 2 வயதுக்கு மேற்பட்டோரின் கைரேகைகள் பதிவு செய்ய வேண்டும் காப்பீடு திட்ட அடையாள அட்டை எண் வைத்து மீதம் உள்ள உறுதி அளிக்கப்பட்ட தொகை எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளப் பயன்படுகிறது

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் எந்தெந்த சிகிச்சைகள் பெறலாம் ?

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் 1027 சிகிச்சை முறைகள் உள்ளன . மற்றும் 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது , மேலும் பல்வேறு புற்று நோய்க்கு முறையாக கதிரியக்கம் , மருந்து சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியவை உள்ளன . இதில் 8 உயர் சிகிச்சை முறைகளும் அடங்கும் . அவை , இதய மாற்று அறுவை சிகிச்சை , நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை , இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை , சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை , கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை , உட்செவிசுருள் பதியம் , எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மற்றும் செவி திறன் மூளை தண்டு கருவி பொருத்துதல் . இந்த திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன் பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

இத்திட்டத்தில் என்னென்ன பரிசோதனைகள் செய்யலாம் ? 

இத்திட்டத்தில் 38 வகையான சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் உள்ளன . இது பற்றி இணையதளத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது உதாரணம் ( ECHO , USG , MRI , MRCP , CT , MAMMOGRAPHY , LFT , RFT , ANGIOCARDIOGRAM , THYROID PROFILE ETC. )

மருத்துவ பரிசோதனை முறைகளை இலவசமாக எங்கு செய்து கொள்ள முடியும்? 

முதலமைச்சர் காப்பீடு திட்ட இணைய தளத்தில் ஏறத்தாழ 420 மையங்கள் , அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவரிடம் இருந்து பரிந்துரை படிவம் பெற்று வருபவர்கள் மருத்துவ பரிசோதனை முறைகளை பயன்படுத்தலாம்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் அரசாங்க மருத்துவமனைகளில் மட்டும் பெறும் சிகிச்சைகள் எவை என்பதை பார்க்கலாம் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் 1027 சிகிச்சைகளில் , 158 சிகிச்சைகள் அரசு மருத்துவ மனைகளில் மட்டுமே வழங்கப்படுகின்றன. மருத்துவ காப்பீடு திட்ட வலை தளத்தில் www.cmchistn.com பட்டியலிடப்பட்டுள்ளன.

$ads={2}

மருத்துவக் காப்பீடு திட்டத்தில் செய்யப்படும் தொடர் சிகிச்சை முறைகள் எதனை என்பதை பார்க்கலாம்.

மருத்துவக் காப்பீடு திட்டத்தில் 154 தொடர் சிகிச்சை முறைகள் உள்ளன . Primary Package பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டும் பயன் பெற இயலும் . இணையதளத்தில் விரிவாக காணவும் அல்லது 1800 425 3993 கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர் சிகிச்சை பற்றிய விவரங்கள் பெறலாம் .

தாமதமின்றி சிகிச்சை பெற என்ன செய்ய வேண்டும் ?

இத்திட்டத்தில் பயனாளிகள் அவசர சிகிச்சைகள் விரைவில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது . மருத்துவமனை  தனியார், அல்லது, அரசு மூலம் அவசர அனுமதி பெற்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் . மிக அவசர சிகிச்சைகளுக்கு முதலில் சிகிச்சை பெற்று , பிறகு 24 மணி நேரத்துக்குள் காப்பீடு திட்ட அட்டையை கொண்டு சென்று இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வேறு எந்தெந்த உயர் தர சிகிச்சைகளுக்கு  பயன்படுத்தலாம் ?

இருதய மாற்று அறுவை சிகிச்சை மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, ஆகியவற்றிக்கு பயன்படுத்தலாம். தொலைபேசி உதவி மையங்கள்
இது தமிழக அரசின் கீழ் 24 மணி நேரம் செயல்படும் ஒரு சேவை மையமாகும் ஒரு நாளுக்கு சராசரியாக 600 மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன உதவி மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800 425 3993

Previous Post Next Post