பரிணாம வளர்ச்சியின் தந்தை Charles Darwin

 இந்த உலகமானது மூன்று பக்கங்கள் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் ஆனது என்பார்கள். அதேபோல மூன்று பக்கங்கள் மதவாதிகளாலும், ஒரு பக்கம் அறிவாளிகளாலும் நிரம்பியிருக்கிறது. உலகை இறைவன் படைத்து, மனிதர்களை படைத்தார் என்பது மதம். ஆனால் அறிவாளி உலகம் தானாக உருவாகியது.

பல கோடி வருடங்களுக்கு பிறகு பல்வேறு பரிணாம வளர்ச்சியால் குரங்கிலிருந்து மனிதன் வடிவமானான் என்கிறது மனிதன் குரங்கில் இருந்து வந்தான் என்று டார்வினுக்கு முன்னால் சிலர் சொல்லியிருந்தாலும் இவரே அதை ஆராய்ந்து வலியுறுத்தி கூறியதால் உலக மதவாதிகள், சில அறிவியல் அறிஞர்கள் அவரை கேவலமான மிருகமாக திட்டி தீர்த்தனர் காலப்போக்கில் அவரின் வழிதோன்றல்களின் ஆராய்ச்சியின் மூலம் அது உண்மை என்றே நிரூபணமாகியது.

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான charles darwin இங்கிலாந்திலுள்ள குஸ்பரி என்ற ஊரில்12.2.1810-ஆம் ஆண்டு பிறந்தார். 

பரிணாம வளர்ச்சியின் தந்தை சார்லஸ் டார்வின்
தந்தையார் பெயர் ராபர்ட் இவரின் முன்னோர்கள் அறிவியல் அறிஞர்களாக திகழ்ந்தவர்கள் இவரின் பாட்டனார் ஏராஸ்மஸ் (1731-1802) மிகசிறந்த வைத்தியர் கவிதை, தத்துவம், உயிரினங்களின் ஆய்வு போன்ற பது துறைகளில் சாதித்தவர், குறிப்பாய் தாவரவியலில் இவரின் உறவினர்கள் ஆய்வாளர்களாக திகழ்ந்தனர். 

இவரின் தந்தையார் மருத்துவர். தாவரவியல் ஆய்வாளர். பிராணிகள் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டவர். பிள்ளை நடக்க ஆரம்பித்ததும் டார்வினை அழைத்துக் கொண்டு சாலைகளில் நடக்கையில் சாலையோர தாவரங்களைப் பற்றியும், விலங்குகளைப் பற்றியும் சொல்லிக் கொண்டே வருவார்
தந்தையின் கூர்மையான அறிவை இளம் வயதிலேயே தனக்குள் பதித்துக் கொண்டார்.  பிற்காலத்தில் உயிரினங்களின் ஆய்வுக்கு தந்தையின் உயிரினங்களின் ஈடுபாடே மிகவும் பயனுள்ளதாக அமைந்தது
ஐந்து, ஆறு வயதிலேயே அவர் புழு, பூச்சிகள் வண்டுகளை பிடித்து ஆய்வு செய்வார். இது தந்தைக்கு பிடித்தமானதாக இல்லை. 

எட்டு வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பாடங்களை படிப்பதை விட தாவரங்களை உயிரினங்களை பற்றி படிப்பதும், அவைகளை பற்றி சிந்திப்பதுமே அவருக்கு விருப்பமாக இருந்தது ஒன்பதாவது வயதில் பட்சர் பாடசாலையில் சேர்க்கப்பட்டார் பள்ளி வாழ்க்கையை வெறுமையற்ற பள்ளி வாழ்க்கை என்றார் மகன் அறிவியலை, கணித பாடங்களை படிக்காமல் தாவரங்கள் பூச்சிகள், உயிரினங்கள் பற்றி படிப்பதில் ஆர்வம் காட்டுவதைக் கண்டு வேதனைப்பட்டார். 

உயிரினங்கள் பற்றிய நூல்களையே விரும்பி படித்தார் charles darwin, பதினாறு வயதில் மகனை தன்னைப்போல மருத்துவம் படிக்க அனுப்பினார். அவருக்கு மருத்துவ படிப்பில் விருப்பமே இல்லை. அவரை 1825-ல் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ஸ்காட்டிஷ் மெடிக்கல் ஸ்கூலில் தந்தையின் வற்புறுத்தலுக்காக உயர் மெடிக்கல் கல்வியை கற்க சென்றார். 
அங்கு அறுவை சிகிச்சை செய்வதைக் கண்டு அந்த பயங்கரம் பிடிக்காமல் அந்தப் படிப்பையும் விரும்பாமல் வெளியே வந்துவிட்டார் charles darwin. தந்தை கனவு அடிப்பட்டு போனது 1828-ல் சமயம் பற்றி படிக்க கேம்பிரிட்ஜ் சென்றார். அந்த படிப்பும் அவரை கவரவில்லை அலுப்பாக இருந்தது. 

இந்த நிலையில் தாவரவியல் ஆசிரியர் ஜான் எஸ், ஹென்ஸ்லோ என்பவரின் தாவரவியல் சொற்பொழிவைக் கேட்டு அவரிடம் நட்பானார்
இருவரும் தாவரங்கள் பற்றி நீண்ட நேரம் உரையாடுவார்கள். டார்வினுக்கு தாவரவியலில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. அதனால் charles darwin அரிய வகை தாவரங்களை சேகரித்து வந்தார்.

குடும்ப கௌரவத்திற்காக பி.ஏ.தேறினார் பின்னர் அவர் கவனம் முழுவதும் தாவரங்கள் - உயிரினங்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டது. வான்ஹம்போல்டின் பெர்சனல் நெரேட்டிவ் ஹேர்ஸ்செல்லின் ஸ்டரி ஆப் நேச்சுரல் பிலாசபி என்ற இரு நூல்களை மிகவும் ஆழ்ந்து படித்தார். இந்த நூல்களே தன்னை உயிரினங்களின் ஆய்விற்கு தூண்டின என்று ஒரு முறை கூறினார் charles darwin
பேராசிரியர் ஹென்ஸ்லோவிடமிருந்து கப்பலில் (எச்.எம்.எஸ்.பீகிள்) ஐந்தாண்டு ஆய்விற்கான அழைப்பு கடிதம் வர, மிகவும் ஆர்வத்தோடு கப்பல் பயணம் மேற்கொண்டார். 1831 டிசம்பர் 27 மீகிள் கப்பலில் தனது ஆய்வு பயணத்தை மேற்கொண்டார். 

இக்கப்பல் பயணத்தில் அவர் அதிசய தாவரங்களையும், அதிசய மிருகங்களையும், புழு, பூச்சிகள் வண்டுகளை கண்டு அதிசயித்தார். இந்த பயணத்தில்தான் அவர் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை பற்றி சிந்தித்தார். தான் கப்பலிலிருந்து சேகரித்தவைகளை இங்கிலாந்திற்கு அனுப்பி அவைகளை பற்றிய குறிப்புகளையும் எழுதினார். அந்த குறிப்புகள் புவியியல் மற்றும் தாவர, உயிரின ஆய்வாளர்களை வியக்க வைத்தன. 1836-ல் தனது பயணம் பற்றி தி வாயேஜ் ஆப் த பீகிள் என்ற நூலை எழுதி வெளியிட, அந்த நூல் மிகுந்த வரவேற்பை பெற்று அவருக்கு பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தது. 

அதில் அவர் புதிய புதிய தாவங்கள், உயிரினங்கள் பற்றிய புதுமையான தகவல்களை கொடுத்தது. அறிவியல் உலகிற்கு புதிய வாசலை திறந்துவிட்டது எனலாம். புவி பற்றிய அவரின் ஆய்வை பாராட்டிய புவிசார் மையம் அவரை 1838-ல் அம்மைய செயலாளராக தேர்ந்தெடுத்தது. 1839-ல் எம்மா என்ற பெண்ணை மணந்தார்

கணவரின் ஆய்வுக்கு பேருதவி புரிந்தார் அவர். charles darwin தனது இருபது வருட உயிரின ஆய்வுகளை தொகுத்து 1859-ஆம் ஆண்டு, நவம்பர் 24-ம் தேதி "உயிரினங்களின் தோற்றம் என்ற உலகையே புரட்டி போட்ட அற்புதமானதொரு ஆய்வு நூலை வெளியிட்டார், இந்த நூல் மதவாதிகளிடையே பெரும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொடுத்தது. charles darwin வார்த்தைகளால் தாக்கப்பட்டார். 

மனிதனை கடவுள் படைக்கவில்லை. உலகம் தோன்றிய காலத்திலிருந்து பல கோடி ஆண்டுகளுக்கு பின் பருவ மாற்றங்களால் உயிரினங்களின் தோற்ற வளர்ச்சியால் குரங்கிலிருந்து பிறந்தான் என்ற அவரின் ஆய்வால் அவருக்கு இறைவனை நிந்திக்கும் கெட்ட விஞ்ஞானி என்ற பெயர் ஏற்பட்டது.

காலப்போக்கில் charles darwin சொன்னதே உண்மை என்று விஞ்ஞான உலகம் ஏற்றுக் கொண்டது. மதவாதிகளின் பயமுறுத்தல்களை பற்றி கவலைப்படாமல் உயிரின தோற்ற ஆய்வில் ஈடுபட்ட அவர் 1871-ல் தி டிஸ்டண்ட் ஆப் மேல் என்ற அற்புதமானதொரு மனித பரிணாமத்தை பற்றிய நூலையும் வெளியிட்டார். இந்த நூலில் மனிதனின் வளர்ச்சி பற்றி தெளிவாக வெளியிட்டிருந்தார்.

மதவாதிகளின் மனித தோற்ற கதைகள் வெறும் கட்டுக் கதைகள் அவைகள் போலியானவைகள் என்ற அவரின் கூற்றை எதிர்த்த அவர்களே charles darwin ஆய்வு உண்மையானவை என ஏற்றுக் கொண்டனர். 

மனிதத் தோற்றம் ஒரு உயிரியிலிருந்து பல கோடி ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியால் உருமாற்றம் பெற்றதை அறிவியல் பூர்வமாக பல எதிர்ப்புகளிடையே சான்றுகளுடன் மெய்ப்பித்து விஞ்ஞான உலகிற்கு புதிய பாதையை அமைத்துக் கொடுத்த charles darwin 1882-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி மறைந்தார் வலிமையுள்ளவை வெற்றி பெறுகின்றன என உன்னதமான மெய்மொழியை கூறிய அவரின் வாழ்க்கையும் சொல்கிறது. 

அதாவது உண்மையான, உன்னதமான உயிர்ப்பான ஆய்வை மெய்ப்பித்தால் உலகம் ஏற்கும் என்பதே அது. மனித தோற்றம் பற்றிய அவரின் ஆய்வு மதமூட நம்பிக்கைகளை உடைத்தெறிந்து புதிய ஆய்வுக்கு வழி வகுத்துத் தந்தது. 

Previous Post Next Post