Vodafone Idea இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஒரே நிறுவனமாக உருவாக்கப்பட்டு அதன் பிறகு குறைந்த விலையில் பல ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்கள் புதிய சலுகைகள் மற்றும் ஆஃபர்களை அறிமுகப்படுத்தி வருகிறது இதில் வோடாபோன் ஐடியா (vi) நிறுவனங்களும் ஒன்றாகும் இப்பொழுது புதிய ரீசார்ஜ் சலுகைகளைப் பற்றி பார்க்கலாம்.

Vodafone Idea(vi) ன் புதிய ஆஃபர் மற்றும் சலுகைகள்

புதிய ரீசார்ஜ் திட்டம்

1. ₹51 ரூபாய் ரீசார்ஜ் பிளான் 51 ரூபாய் ரீசார்ஜ் செய்யும்பொழுது 1ஜிபி டேட்டா மொத்தமாக 28 நாளைக்கு இலவசமாக கிடைக்கிறது அதனுடன் சேர்த்து ஆதித்ய பிர்லா ஹெல்த் இன்சூரன்ஸ் இலவசமாக 28 நாட்களுக்கு கிடைக்கிறது இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் 30 நாள் வரை செல்லுபடியாகும் இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் ஆனது நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் என்ற விகிதம் ஒரு மாதத்திற்கு 30,000 ரூபாய் வரை இலவசமாக ஹெல்த் இன்சூரன்ஸ் பயன்படுத்திக்கொள்ளலாம் இதற்கு எந்த ஒரு ஆவணமும் தேவையில்லை

2.₹59 ரூபாய் ரீசார்ஜ் பிளான் 59 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் பொழுது 30 நிமிடத்திற்கு லோக்கல் மற்றும் நேஷனல் ரோமிங் அழைப்புகளை எந்த ஒரு கட்டணமும் இன்றி இலவசமாக மேற்கொள்ளலாம் 28 நாட்கள் செல்லுபடியாகும்.

3. ₹65 ரூபாய் ரீசார்ஜ் பிளான்65 ரூபாய் ரீசார்ஜ் செய்யும் போது 130 ரூபாய் உங்கள் கணக்கில் டாக் டைமாக சேர்க்கப்படும் அனைத்து அழைப்புகளுக்கு 2.5p/sec வசூலிக்கப்படும் அதாவது ஒரு நிமிடத்திற்கு 1.50 பைசாவாக உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்படும்  அதனுடன் சேர்த்து Vi ஆப் மூலமாக ரீசார்ஜ் செய்யும் போது 100 எம்பி டேட்டா இலவசமாக 28 நாட்களுக்கு வழங்கப்படும்.

4. ₹95 ரூபாய் ரீசார்ஜ் பிளான் 95 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் பொழுது 74 ரூபாயாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது இந்த ரீசார்ஜ் பிளான் ஆனது அன்லிமிடெட் வசதியாகும் அனைத்து அழைப்புகளுக்கு 2.5p/sec வசூலிக்கப்படும் அதாவது ஒரு நிமிடத்திற்கு 1.50 பைசாவாக உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்படும் அதனுடன் சேர்த்து Vi ஆப் மூலமாக ரீசார்ஜ் செய்யும் போது 200 எம்பி டேட்டா இலவசமாக 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

5. ₹99, ₹109, ₹129 மற்றும் ₹149 ரூபாய் ரீசார்ஜ் பிளான் 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் பொழுது அனைத்து அன்லிமிட்டட் அழைப்புகள் 18 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மற்றும் 1ஜிபி மொத்தமாக மொபைல் டேட்டா 18 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

6.₹109 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் பொழுது அனைத்து அன்லிமிட்டட் அழைப்புகள் 20 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் 1 ஜிபி டேட்டா மொத்தமாக 20 நாட்களுக்கு வழங்கப்படுகிறது

7.₹129 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது அனைத்து அழைப்புகளும் இலவசமாக 24 நாட்களுக்கு பயன்படுத்தலாம் அதனுடன் சேர்த்து 2ஜிபி மொபைல் டேட்டாவை மொத்தமாக 24 நாட்களுக்கு பயன்படுத்தலாம்

8.₹149 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு இலவச அழைப்பு மற்றும் 2ஜிபி டேட்டா மொத்தமாக பயன்படுத்தலாம் அதுமட்டுமல்லாமல் Vi App மூலம் ரீசார்ஜ் செய்யும் போது 1 ஜிபி எக்ஸ்ட்ரா மொபைல் டேட்டா இலவசமாக கிடைக்கிறது.

9.₹148 ரூபாய் அன்லிமிட்டட் ரீசார்ஜ் பிளான்  148 ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 18 நாட்களுக்கு அனைத்து அன்லிமிட்டட் அழைப்புகளை  இலவசமாக பயன்படுத்தலாம் மற்றும் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா இலவசமாக 18 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

Previous Post Next Post