முதலாவதாக Virtual RAM என்றால் என்ன என்பதைப் பார்ப்போம் சமீப நாட்களாக வெளியாகும் மொபைல் ஃபோனில் அனைத்திலும் இந்த Virtual RAM இருக்கிறது என்று அதிகப்படியான மொபைல் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகிறார்கள் உண்மையாகவே இந்த Virtual RAM நமக்கு பயனுள்ளதாக இருக்குமா இதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக RAM எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 

நீங்கள் ஒரு ஸ்மார்ட் போனை ஒரே நேரத்தில் பல்வேறு செயலியை பயன்படுத்தும்போது செயலி அளவீட்டை மதிப்பீடு செய்து அதற்கு ஏற்றால் போல் RAM வேலை செய்யும் இதுவே RAM உடைய அடிப்படை வேலை ஆகும்.

Virtual RAM என்றால் என்ன எதற்காக பயன்படுகிறது

Virtual RAM எந்த இடத்தில் பயன்படுத்தப்படுகிறது

அன்றாட நேரங்களில் ஒரே செயலியை பயன்படுத்தும் பொழுது சாதாரணமாக RAM வேலை செய்யும் இதுவே ஒன்றுக்கு மேற்பட்ட செயலியை பயன்படுத்தும் பொழுது அல்லது மொபைலில் கொடுக்கப்பட்டுள்ள RAM உடைய அளவீட்டை தாண்டி ஒரே நேரத்தில் பல்வேறு செயலி பயன்படுத்தும் பொழுது மொபைல் உடைய வேகமானது குறையும். 

இந்த இடத்தில்தான் Virtual RAM பயன்படுத்தப்படுகிறது அதாவது குறைந்தபட்சமாக ஒரு RAM ல் 5 செயலிகளை ஒரே நேரத்தில் செயல்படுத்தும் பொழுது மொபைல் போனில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது இதுவே 5 இற்கு மேற்பட்ட செயலியை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் பொழுது மொபைல் போன் உடைய வேகமானது குறையும் இந்த வேகத்தை குறையாமல் பாதுகாப்பதற்கு தான் Virtual RAM பயன்படுகிறது.

நீங்கள் உங்களுடைய ஸ்மார்ட்போனில் இருக்கும் RAM அளவுகோலை மீறி செயலிகளை பயன்படுத்தும்போது உங்களுடைய ஸ்மார்ட்போனில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல் சாதாரணமாக போனை பயன்படுத்துவதற்கு தான் Virtual RAM பயன்படுகிறது உங்களுடைய ஸ்மார்ட்போனில் 5 செயலிகள் வரை பயன்படுத்த முடியும் என்றால் அதை மீறி நீங்கள் ஆறாவதாக ஒரு செயலியை பயன்படுத்தும் பொழுது உங்களுடைய ஸ்மார்ட்போன் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல் அந்த ஆறாவது செயலியானது இந்த Virtual RAM இல் செயல்பட தொடங்கும் இதுவே Virtual RAM உடைய அடிப்படையான வேலையாகும்.

Previous Post Next Post