Thomas Alva Edison :கலிலீயோ, கெப்ளர், பிதாகரஸ், ஜன்ஸ்டீன், நியூட்டன் மார்கோனி, லூயி பாஸ்டர். கேல்பாரடே. சர்.சி.வி ராமன், ரூதர் போர்டு, ரூடால்ஃப் டீசல், சந்திரசேகர். சர் ஐகதீஸ்சந்திரபோஸ், ஆல்வா எடிசன் என்று உலகில் இதுவரை சாதித்த விஞ்ஞானிகளில் உங்களுக்கு பிடித்த விஞ்ஞானி யார் என்று உலகிலுள்ள மாணவர்களிடம் கேட்டால் நூற்றுக்கு 90 சதவீத பேர்கள் குறிப்பிடும் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன்தான்.

இதை எவரும் மறுக்க மாட்டார்கள். சுமார் 1096 கண்டுபிடிப்புகளை உலகிற்கு அளித்த அவரை பள்ளியில் சேர்த்த சில மாதங்களில் அவரின் தாயை அழைத்த ஆசிரியர் "உன் மகனின் மூளையில் களிமண்தான் இருக்கிறது. இவனுக்கு சொல்லி கொடுப்பதைவிட எருமைக்கு சொல்லித்தரலாம். முட்டாள் பையன். இவனை வைத்து என்னால் மேய்க்க முடியாது அழைத்து செல்லுங்கள்" என்று எடிசனின் தாயாரிடம் கூற அவரின் தாய் "என் மகனை சாதனையாளர் ஆக்கி காண்பிக்கிறேன்” என்று அழைத்துச் சென்றார்கள்.

Scientist The path traversed by Thomas Alva Edison is his history

Thomas Alva Edison  கடந்து வந்த பாதை

முட்டாள் என்று சொல்லப்பட்ட எடிசன் உலகம் உள்ளளவும் மக்களால் நினைக்கப்படுவார். அவரை முட்டாள் என்று கூறிய ஆசிரியரையோ இந்த உலகிற்கு தெரியாது. பகலில் சூரியன் இயற்கை தந்த சீதனம். இரவில் வெளிச்சம் விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் வழங்கிய சீதனம். தன்னுடைய கடுமையான உழைப்பால் ஆம் அவர் தான் சாகும்வரை தனது 14 வயதிலிருந்து தினமும் 16 மணி நேரங்கள் உழைத்தார் விளக்கை கண்டுபிடிக்க தினம் 22 மணி நேரங்கள் கடுமையாக உழைத்திருக்கிறார். 

பலருக்கு தினமும் 22 மணி நேரங்களை டி.வி முன் அமர சொன்னால் மகிழ்ச்சியாக ஒப்புக்கொள்வார்கள் அவரே அத்தனை மணி நேரங்களை தொழிலகத்திலேயே கழித்திருக்கிறார்
உழைப்பு உழைப்பு உழைப்பு இதைத்தவிர வேறெதையும் அறியாத அந்த மாமேதை 1847-ம் ஆண்டு அமெரிக்காவின் மெலான் என்ற சிற்றூரில் சாமுவேல் எடிசனுக்கும், நான்சி எலியட்டுக்கம் மகனாக பிறந்தார். அப்பிள்ளையை வறுமைதான் வரவேற்றது. பிள்ளை வறுமையில் வளர்ந்தார். என்றாலும் சுறுசுறுப்பாக இருந்தார். பள்ளி போனார். மூன்றே மாதத்தில் முட்டாள் என்று துரத்தப்பட்டார். அவரின் தாய் தன் பிள்ளைக்கு வரலாறு, விஞ்ஞான பாடங்களை சொல்லிக் கொடுத்தார் பையனுக்கு விஞ்ஞான புத்தி, அப்பாடங்களை விரும்பி படித்தார்
குடும்ப கஷ்டத்தைப் போக்க 14 வயதில் ரயில் நிலையத்தில் பேப்பர் விற்றார். அவரே பேப்பர் நடத்தினார். ஓடும் ரயிலில் ஒரு போகியரி பரிசோதனை கூடம் அமைத்து ஓய்வு நேரத்தில் ஆய்வுகளை செய்தார்

Thomas Alva Edison மின்விளக்கை கண்டுபிடித்தார்

ஒருமுறை ரயில்வே அதிகாரியின் மகனை காப்பாற்றியதற்காக அவருக்கு அவர் தந்தி அடிக்கும் முறையை கற்றுக் கொடுத்தார். அதை முழுமையாக கற்றார் 
அந்த வேலைபோன நிலையில் நியூயார்க் வந்தார். அலைந்து திரிந்து ஒரு வேலையை பெற்றார். ஸ்டாக் எக்சேன் கம்பெனியில் ஓடாத மிஷினை ஓட வைத்ததால் அவருக்கு பெரும் தொகை கிடைத்தது. அதை வைத்து தொழிற்சாலை அமைத்தார்.
Scientist The path traversed by Thomas Alva Edison is his history

தொழிற்சாலைக்குள் நுழைந்த நாளிலிருந்து கடும் உழைப்பே அவரின் தொழிலானது. மக்களுக்கு பயன்படும் கருவிகளை தினம் தினம் கண்டுபிடித்துக் கொண்டே இருந்தார் சைக்ளோஸ் டைல் மிஷின், கிராமஃபோன் மின்உற்பத்தி செய்யும் டைனமோ, பேசும் படக்காட்சி என்று பல கண்டுபிடிப்புகளை உருவாக்கினாலும் தனது மூன்று வருட உழைப்பில் 1879-ம் ஆண்டு மின்விளக்கை அவர் கண்டுபிடித்தார். 

அவரின் கண்டுபிடிப்பால் இரவு வெளிச்சமானது. இன்று உலகம் ஒளி வெள்ளத்தில் மகிழ்ச்சியாய் இருக்கிறது என்றால் அவரின் கடும் உழைப்புதான். அவரின் பெரும்பாலான கண்டுபிடிப்புகளை அவர் அமைத்த மென்லோ பூங்காவில் கண்டுபிடித்ததே. ஓய்வறியாமல் உழைத்த அந்த மாமேதை தனது கண்டுபிடிப்புகளுக்காக பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றிருக்கிறார்

படிப்பதிலும், உழைப்பதிலும் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த அம்மேதையை போன்றே இன்றைய மாணவ செல்வங்கள் கடுமையாய் உழைத்து நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்
பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த அந்த மாமேதை தன் 84-ம் வயதில் 1931, அக்டோபர் 18-ம் தேதி நியூஜெர்ஸியிலுள்ள வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானர்.

அவர் மறைந்த அன்று அமெரிக்கா முழுவதும் ஒரு நிமிடம் விளக்கு அணைக்கப்பட்டு அம்மாமேதைக்கு அஞ்சலி செய்யப்பட்டது
படைப்புக்கு வேண்டியது ஆக்கும் உள்ளெழுச்சி ஒரு சதவீதம் வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம் என்ற அவரின் வாக்கை வேதவாக்காக கொண்டு உழைப்போம் உயர்வு பெறுவோம் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்
நன்றி வணக்கம் 🙏 

Previous Post Next Post