Henry Ford: இன்று உலகில் ஆயிரக்கணக்கான மாடல் கார்கள் சாலைகளில் ஓடுகின்றன. ஆனால் உலக அளவில் இன்றும் ஹென்றி ஃபோர்டு உருவாக்கிய மாடல் கார் மூலம் அவரை கார்களின் தந்தை என்றே கூறலாம். ஹென்றி ஃபோர்டு விஞ்ஞானி இல்லை என்றாலும் காரை விஞ்ஞான முறைப்படி தயாரித்து வெள்ளோட்டம் விட்ட மேதை அவர். 

கார்களின் நாயகன் விஞ்ஞானி Henry Ford

இன்று உலகெங்கும் ஓடும் அழகிய ஃபோர்டு காரின் ஆதிகர்த்தாவான ஹென்றி ஃபோர்டு அமெரிக்காவிலுள்ள மிக்சிகன் மாநிலத்தில் வில்லியம் ஃபோர்டு மேரிலிட்கோகாட் தம்பதியர்க்கு 1863-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 30-ம் நாள் பிறந்தார். பெரிய பண்ணையார் குடும்பத்தில் தலைமகனாக பிறந்தார். இவருக்கு கீழ் ஐந்து பேர் பிறந்தனர்

பெரும் பணக்காரர் வீட்டு பிள்ளையாக இருந்தாலும் தன் பண்ணையில் சிறு சிறு வேலைகள் செய்வதில் ஆர்வமுள்ளவராக இருந்தார். அவர் சிறுவயதிலேயே இயந்திரங்களின் மேல் அளவுக்கு மீறிய பற்று வைத்திருந்தார் வயலில் டிராக்டர் இயங்குவதை ஆர்வத்தோடு பார்ப்பார்
கடிகாரங்களை பழுது பார்ப்பார் அவற்றின் இயக்கங்களை மணிக்கணக்கில் பார்ப்பார். அப்போது அவருக்கு 15 வயது. நீராவியால் ஓடும் நகரும் டிராக்டர் வாகனத்தை மனிதர்கள் அமர்ந்து செல்லும் வாகனமாக மாற்றினால் எப்படி இருக்கும் என்று சிந்தித்தார்
தன் 16 வயதில் பெட்ராய்ட் நகரில் ஒரு கனரக தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தார்

Man of cars scientist Henry Ford his history and works

HenryFord  காரை கண்டுபிடித்தார்

அங்கு இயந்திரங்களின் இயக்கங்களை உன்னிப்பாய் பார்ப்பார் இயந்திரங்களின் பழுதுகளை ஆர்வத்தோடு நீக்குவார். மூன்று ஆண்டுகள் கடினமாய் உழைத்த அவர் மீண்டும் மிக்சிகன் திரும்பினார். தன் பண்ணை வீட்டில் பொழுதுகளை வீணாக கழிக்காமல் இயந்திரங்களை இயக்குவதிலும், அதை பழுது பார்ப்பதிலும் கழித்து வந்தார். புதிய புதிய கருவிகளை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டினார்

1893 ஆம் ஆண்டு சிக்காக்கோவில் நடந்த ஒரு கண்காட்சியில் அவர் உருவாக்கிய பெட்ரோலில் இயங்கும் தண்ணீர் பம்ப் இடம் பிடித்து பார்வையாளர்களை கவர்ந்தது பின்னர் மின்விளக்கை கண்டு பிடித்த தொழிற்சாலையில் தலைமை பொறியாளராக வேலைக்கு எடிசனின் சேர்ந்தார். இயந்திர பாகங்களின் செயல்பாட்டை அங்கு கற்ற பின்னர் அங்கிருந்து விலகி நகரும் காரை உருவாக்க முற்பட்டார்
பல்வேறு உதிரிபாகங்களைக் கொண்டும், பழைய உலோகங்களைக் கொண்டும் தன் பண்ணை வீட்டில் ஒரு பகுதி செங்கல் கூடாரத்தை அமைத்து 1896-ஆம் ஆண்டு, மே மாதத்தில் காரை வடிவமைத்தார். பிரேக் இல்லாத அந்த கார் மணிக்கு 10 மைல் வேகத்திலும், மணிக்கு 20 மைல் வேகத்திலும் செல்லுமாறு இரு வார்பட்டைகளை உருவாக்கி செயல்படுத்தினார். அதற்கு ஒரே இருக்கைதான். பெயர் குவாட்ரை சைக்கிள்

Man of cars scientist Henry Ford his history and works

பார்க்க சைக்கிள்போல இருப்பினும் நான்கு சக்கரங்கள் இருந்தன. இந்த காரை ஓட்டிப் பார்த்தார். ஓரளவு நன்றாக ஓடியது. புதுமையான இந்த காரைப்பார்த்து மக்கள் மிரண்டனர். எதிர்காலத்தில் தான் உருவாக்கப்போகும் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதை உணர்ந்த அவர் 1903-ஆம் ஆண்டு மிக்சிகனில் ஃபோர்டு மோட்டார் கம்பெனியை ஆரம்பித்தார். தனது கடுமையான உழைப்பால் சைக்கிள் மாதிரியான வடிவமைப்பிலிருந்து ஓட்டுனர் இருக்கை பின் பக்கம் இரண்டு இருக்கைகள் கொண்ட புதுமையான மாடல் டி காரை கருப்பு நிறத்தில் உருவாக்கினார். தான் உருவாக்கும் காரை செல்வந்தர்கள் முதல் சாமான்யர்களும் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று விரும்பியவர் தான் உருவாக்கிய காரை வெறும் 500 டாலருக்கு விற்பனை செய்தார். குதிரை வண்டி பயணத்திலிருந்து மக்கள் ஃபோர்டு உருவாக்கிய காருக்கு மாறினர்

Man of cars scientist Henry Ford his history and works

தனது கார் லட்சக்கணக்கில் விற்கும் என்பதை உணர்ந்து ஏராளமான கார்களை உருவாக்கினார். 18 ஆண்டுகளில் மில்லியன் கார்களை விற்றார். உலகின் பெரும் செல்வந்தர் ஆனார். சேர்த்த செல்வத்தை தான் மட்டுமே வைத்துக் கொண்டு ஆடம்பர வாழ்வு வாழாமல் 1936-ஆம் ஆண்டு மகனை தலைமை பொறுப்பில் அமர வைத்து ஃபோர்டு பவுண்டேஷன் என்ற பெயரில் பலருக்கு உதவும் அறக்கட்டளையை உருவாக்கினார். உலகெங்கும் ஏழை எளிய மக்களுக்கு இன்றும் அந்த அறக்கட்டளை உதவி வருகின்றது

Henry Ford பல நல்ல குணங்களைக் கொண்டிருந்தார் தனது தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்க்கு, நல்ல சம்பளம் கொடுத்தார். எல்லோரிடமும் அன்புடன் பழகினார். இவர் எடிசனின் மிகச்சிறந்த நண்பராக இருந்தார் அவரின் மாடல் கார்கள் இன்றும் உலகில் வலம் வருகின்றன. கடுமையான உழைப்பால் உலகின் பெரும் பணக்காரராக திகழ்ந்த அவர் 1947-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 7-ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். அவரின் புதுமையான கார்களும், பிறருக்காக அவர் செய்த நற்செயலும் என்றும் அவரை உலகோரால் வணங்கச் செய்யும். நன்றி வணக்கம் 🙏 

Previous Post Next Post