Scientist Michael Faraday

மின்சாரத்தை உருவாக்க கூடிய Dynamo வை கண்டுபிடித்த Michael Faraday அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் கண்டுபிடிப்புகள்
இன்றைய உலகம் மின்சாரத்தை அளவின்றி பயன்படுத்துகிறது என்றால் அதன் காரணகர்த்தா மைக்கேல் ஃபாரடே. இவரால் டிரான்ஸ்ஃபார்மர், Dynamo இவைகள் இரண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் மின்சக்தி ஆனது எட்டாக்கனியாகவே ஆய்விலேயே இருந்திருக்கும் இவரின் மின்சார தூண்டலை வைத்தே தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கை கண்டுபிடித்தார். 

Dynamo  electrical  உருவாக்கப்பட்ட சுவாரஸ்யமான வரலாற்று செய்திகள்  இதோ உள்ளே

உலகமே வியக்கும் மின்சாதனங்களை தன் அயாரத உழைப்பால் கண்டுபிடித்த ஃபாரடே பணக்கார குடும்பத்தில் பிறக்கவில்லை. மிகமிக ஏழ்மையான கொல்லருக்கு கருமானுக்கு லண்டனில் 1791-ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் பெற்றோருக்கு நான்கு பிள்ளைகள் பல நாட்கள் பட்டினியாலும், குளிராலும் குழந்தைகள் துயரத்தில் தவித்தன இவரின் தாய் நான்கு குழந்தைகளுக்கும் திங்களன்று ஆளுக்கு ஒரு ரொட்டியை தருவார்கள். அதை 14 துண்டுகளாக்கி தினமும் காலை, இரவு என இரண்டே வேளைகள் சாப்பிட்டு ஏழு நாட்களை கடத்துவார்கள் பிள்ளைகள். 
உள்ளூர் பள்ளிக்கூடத்தில் இரண்டு வருடங்கள் மட்டுமே ஃபாரடேவால் படிக்க முடிந்தது. காரணம் குடும்ப வறுமை. அந்த இருவருட காலத்தில் அவர் எழுத, படிக்க கற்றுக் கொண்டார்

முதன்முதலில் புத்தக வியாபாரியிடம் வேலைக்கு அமர்ந்தார். அங்கு அவர் பைண்டிங்குக்கு வரும் புத்தகங்களை ஓய்வு நேரங்களில் படித்தார். அவருக்கு விஞ்ஞான நூல்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. மார்செட் என்பவர் எழுதிய விஞ்ஞான பேச்சு என்ற நூலை திரும்ப திரும்ப படித்து அறிவியல் அறிவை வளர்த்துக் கொண்டார். மேலும் என்சைக்ளோபிடியா பிரிட்டானிகா என்ற நூலிலும் மின்சாரம் பற்றிய பகுதியை படிக்க படிக்க அதன் மேல் அதிக ஈடுபாடு ஏற்பட்டது. அதை பற்றிய நூல்களை தேடி தேடிப் படித்தார் புகழ்பெற்ற விஞ்ஞானி ஹம்பிரி டேவி என்பவர் ராயல் இன்ஸ்டிட்டியூஷனில் சொற்பொழிவு ஆற்றுவதை அறிந்தார் அவரின் நான்கு சொற்பொழிவுகளை கேட்டார். தனது வாழ்க்கை லட்சியமே விஞ்ஞானம்தான் என்ற முடிவுக்கு வந்தார் டேவியின் சொற்பொழிவுகளை கேட்டு அதைப்பற்றி அவருக்கு எழுதி அனுப்பினார். இளைஞனின் விஞ்ஞான ஆர்வத்தை கண்டு தனக்கு உதவியாளராக சேர்த்துக் கொண்டார் தனக்கு சொர்க்கமே கிடைத்ததாக மிகவும் மகிழ்ந்தார். அவரிடம் செய்த வேலை என்ன? அவர் ஆய்வு செய்யும் பகுதியை பெருக்குவது, கண்ணாடி குடுவைகளை கழுவுவது, சுத்தமாய் துடைப்பது போன்ற வேலைகளை ஆர்வத்தோடு செய்வார்

ஃபாரேடயின் ஆர்வத்தை கண்டு தான் ஆய்வு செய்யும்போது கண்காணிக்கும்படி கூறின டேவியின் மேற்பார்வையில் பீட்ருட்டிலிருந்து சர்க்கரை எடுப்பதிலும்,  நைட்ரஜன் குளோரைடு தயாரிப்பதிலும் தன் திறமையை வெளிப்படுத்தினார்
ஒருமுறை ஆய்வு செய்யும்போது சில குடுவைகள் வெடிக்க டேவியின் கண்பார்வையில் கோளாறு ஏற்பட்டது பக்கத்திலிருந்த ஃபாரடேவிற்கும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டன பெரிய அளவில் இல்லை. தன் உதவியாளரான ஃபாரடேவை அங்கு தொடர்ந்து ஆய்வு செய்ய டேவி சிபாரிசு செய்ய மிகுந்த ஆர்வத்தோடு ஆய்வை மேற்கொண்டார் ஃபாரடே அவருடைய தீவிரமான ஆய்வை கண்ட ராயல் கழகம் அவருக்கு பதவி உயர்வையும், மாதம் ஐநூறு டாலர் சம்பளமும் வழங்கியது.

Dynamo  electrical  உருவாக்கப்பட்ட சுவாரஸ்யமான வரலாற்று செய்திகள்  இதோ உள்ளே

தனது கண்டுபிடிப்புகளை விஞ்ஞான மலர் என்ற காலாண்டு இதழில் கட்டுரைகளாக எழுதினார். குறிப்பாக மின்சாரத்தை பற்றிய அவரின் கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றது .
மின்சாரத்தை பற்றி தீவிரமாக  ஆராய்ந்தார் அவர்
மின்சக்தியை காந்தத்தின் மூலம் பெறலாம் என்பதோடு மின் சக்தியை உற்பத்தி செய்கின்ற Dynamo என்ற சாதனத்தை கண்டுபிடித்தார்
இந்த Dynamo இன்றுவரை மோட்டார் வாகனங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது தொடர்ந்து வெள்ளமாய் செல்லும் மின் சக்தியை ஓரிடத்தில் நிறுத்தி அவைகளை (அணைபோல்) வேண்டியபோது 
வேண்டிய இடத்திற்கு மாற்றி அனுப்பும் டிரான்ஸ்ஃபார்மரையும் உருவாக்கினார்

Dynamo  electrical  உருவாக்கப்பட்ட சுவாரஸ்யமான வரலாற்று செய்திகள்  இதோ உள்ளே

இந்த இரண்டும் அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. ஓய்வறியாமல் உழைத்த அவரை உலக விஞ்ஞானிகள் மிகவும் போற்றினர், அதிகம் படிக்காத, தன் கடும் முயற்சியினால் உலகம் வியக்க கண்டுபிடித்த அவருக்கு இங்கிலாந்து அரசு 'சர்' பட்டம் வழங்கி கவுரவித்தது. 
ராயல் கழகம் அவருக்கு தலைவர் பதவியை கொடுத்து பெருமைப்படுத்தியது. 1821-ஆம் ஆண்டு, ஜூன் 12-ம் தேதி சாராபெர்னார்டு என்ற பெண்ணை மணந்தார். கணவனின் ஆராய்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தார் அப்பெண்மணி கணவர் சோர்வாய் இருக்கும்போதெல்லாம் அவருக்கு ஊக்கமூட்டினார் அவர்

தனது கண்டுபிடிப்புகளை சொற்பொழிவுகளாக மாற்றினார் கட்டுரைகளாக எழுதினார், அவரின் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் விஞ்ஞான உலகத்திற்கு புதிய வேதங்களாக திகழ்ந்தன. மிக பெரிய விஞ்ஞானியாக போற்றப்பட்டாலும் அவர் எளிய மனிதராகவே வாழ்ந்தார். தன்னை சாதாரண மனிதனாக கருதினார். தாமஸ் ஆல்வா எடிசன் மின்விளக்கை கண்டுபிடிக்க ஃபாரடேவின் மின் ஆய்வே பயன்பட்டது. அயராது உழைத்த அம்மாமேதை 1867-ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 25-ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். தன்னை எளிய முறையிலேயே அடக்கம் செய்ய கேட்டுக்கொண்டபடி ஹைகேட் சிமெட்டரி என்ற இடத்தில் சாதாரண Michael Faraday புதைக்கப்பட்டார்

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே, திறமை இருக்கு மறந்து விடாதே என்ற பட்டுக்கோட்டையாரின் பாடலுக்கு ஏற்ப கடுமையான வறுமையிலும், உலகம் போற்றும் விஞ்ஞானியாக தன்னை உயர்த்திக் கொண்ட அவரின் வரலாற்றை படிக்கும் இளைஞர்கள் தங்கள் குடும்ப கஷ்டங்களை பாராமல் உழைத்தால் மேதையாகலாம், இதை ஃபாரடேயின் வாழ்வின் மூலம் அறியலாம்

எடிசன் என்றால் மின்விளக்கு .
ஃபாரடே என்றால் டைனமோ டிரான்ஸ்ஃபார்மர்
இரண்டு பேர்கள் உருவாக்கியவைகள் உலகம் உள்ளளவும் இருக்கும். அவர்கள் பெயர்கள் பேசப்படும் அம்மாமேதையை போற்றி வனங்குவோம் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம் 🙏

Previous Post Next Post