அலெக்சாண்டர் ஃப்ளெமிங் (Alexander Fleming) இளமைப் பருவம்:

இன்று கோடிக்கணக்கான மக்களின் உயிர் வாழ்விற்கு முக்கியமான மருந்தாக இருப்பது Penicillin. இந்த மருந்து இல்லாத மருத்துவமனை உலகில் ஒன்று கூட இல்லை. தொற்றுநோய்களிலிருந்து மக்களை காக்கும் உயிர் மருந்தான  Penicillinனை கண்டுபிடித்த அலெக்சாண்டர் ஃப்ளெமிங் ஸ்காட்லாந்தில் லேக்ஹிமீல்ட் என்ற இடத்தில் வயல்கள் சூழ்ந்த அழகான இடத்தில் ஹயூக் ஃபிளமிங் கிரேஸ் ஸ்டிர்லிங் மார்டன் தம்பதிகளுக்கு ஆகஸ்ட் மாதம், 6-ம் தேதி, கிபி1881-ஆம் ஆண்டு பிறந்தார் பள்ளிப் பருவம் வந்ததும் லவ்டுவோன்மோர் ஸ்கூலில் சேர்ந்தார்.

இன்று கோடிக்கணக்கான மக்களின் உயிர் வாழ்விற்கு முக்கியமான மருந்தாக இருப்பது Penicillin. இந்த மருந்து இல்லாத மருத்துவமனை உலகில் ஒன்று கூட இல்லை.

 பின்னர் லண்டனிலுள்ள கில்மார்க் அகாடமியில் ஸ்காலர்ஷிப் பெற்று படித்தார். அடுத்து ராயல் பாலிடெக்னிக்கில் சேர்ந்து படித்தார். 16 வயதில் ஒரு கப்பல் நிறுவனத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். அவருக்கு இந்த பணியில் விருப்பமே இல்லை ஏதாவது ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே அவரின் ஆசையாக இருந்தது.

அந்த நிறுவனத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிந்த அவருக்கு மாமா ஜான் ஃபிளமிங் மூலம் குடும்ப சொத்திலிருந்து பங்கு வர வயதில் செயின்ட் மேரிஸ் ஆஸ்பிடல் அண்டு மெடிக்கல் ஸ்கூலில் எம்.பி.பி.எஸ் வகுப்பில் சேர்ந்த அவர் நன்றாக படித்து கிபி1906-ல் டிஸ்டிங்ஷன் பெற்று தேறினார்.

அலெக்சாண்டர் ஃப்ளெமிங் கண்டுபிடிப்பு:

கல்லூரி படிப்பு முடிந்ததும் அவருக்கு பிடித்தமான நோய் கிருமிகளை அழிக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்த புகழ்பெற்ற ஆய்வாளர் ஆலம்நாத் ரைட் என்பவரிடம் உதவியாளராக சேர்ந்தார். மனிதர்களின் நோய்களுக்கு காரணமானவை நோய் கிருமிகளே.

உடல் ஆரோக்கியமானவராக இருந்தாலும் அவர் உடலுக்குள் நோய் கிருமி நுழைந்து விட்டால் போதும் நோய் ஏற்பட்டுவிடுகிறது என்பதை ஆய்வில் கண்டார் அலெக்சாண்டர் ஃப்ளெமிங் இந்த சமயத்தில் ஜெர்மனி விஞ்ஞானியான பால் என்ரிக் என்பவர் பெண்களுக்கு ஏற்படும் பால்வினை நோய்க்கான மருந்தான ஸ்ல்வார்ஸன் என்ற மருந்தை கண்டுபிடித்தார் அலெக்சாண்டர் ஃப்ளெமிங் கிற்கும் மனித உயிர்களை காக்கும் மருந்தொன்றை கண்டுபிடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. 

ரத்தத்தை பரிசோதித்தால் மனித உடலில் எந்தவிதமான நோய் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிய முடியும் என்ற முறையை கண்டறிந்தார். நோய் கிருமிகள் என்பவை பாக்டீரியாக்களே என்பதை அறிந்த அலெக்சாண்டர் ஃப்ளெமிங் அதற்கான ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டார்.

தொற்றுகளுக்கும் நோய் மனித உயிர்களுக்கும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் அந்த கெட்ட பாக்டீரியாக்களை ஒழித்தால் உயிர்களை காக்கலாம் என்பதை உணர்ந்தார் அலெக்சாண்டர் ஃப்ளெமிங் முதல் உலக போரில் காயம் அடைந்தவர்களை காக்க கார்பாலிக் அமிலம், போரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்ஸைட் போன்ற மருந்துகளை கொடுத்து காயத்தை ஆற்றினர் என்றாலும் இவைகள் சரியான மருந்தல்ல என்றும், அவைகள் வெள்ளை அணுக்களை அழித்தும் விடுகின்றன என்றும் அம்மருந்துகளை ஆய்ந்து கூறினார். 

பலவித நோய்களால் உயிரிழக்கும் மனிதர்களை காக்க மருந்தொன்றை கண்டறிய ஒரு பரிசோதனை செய்தார் பலவகையான நுண்ணுயிர்களை தட்டுகளில் வளர்த்து அவைகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை சோதனை செய்து வந்தார் தன் மூக்கிலிருந்து வழிந்த நீரில் ஒரு சொட்டு நீரை பாக்டீரியாக்கள் உள்ள தட்டில் விட்டு பார்த்தார். சளி திரவத்தை சுற்றி பாக்டீரியாக்கள் அழிந்திருப்பதை அலெக்சாண்டர் ஃப்ளெமிங் கண்டார்.

மேலும் சீழ், உமிழ்நீர், கண்ணீர் இவைகளையும விட்டு பரிசோதித்தார். அப்போதும் பாக்டீரியாக்கள் அழிவதைக் கண்டார் இயற்கையாகவே அவைகளில் பாக்டீரியாக்களை அழிக்கும் நச்சுமுறிவும் இருப்பதை அறிந்தார். அந்த நச்சு முறிவு பொருளுக்கு லைசோசைம் என்று பெயர் வைத்தார் கிபி1928-ஆம் ஆண்டு காளான் வளர்த்த தட்டில் ஒரு அதிசயத்தைக் கண்டார். 

கொப்புளங்கள், மூக்கு, தொண்டை, மற்றும் தோல் இவற்றில் ஏற்படும் தொற்று நோய்களை உருவாக்கும் ஸ்டாபைலொகாக்கி எனப்படும் கிருமிகளை காளானானது அழித்திருப்பதை கண்டு அதிசயித்தார் இது மட்டுமின்றி அந்த காளானின் சாரம் வெள்ளை அணுக்களை சிறிதும் பாதிக்கவில்லை என்பதும், வேறு எந்த திசுவையும் ஒன்றும் செய்யவில்லை என்பதையும் அறிந்தார். 

காளானில் பரவியிருந்த பொருளுக்கு Penicillin என்று பெயர் வைத்தார். இதன் பெயரில் மருந்தை உருவாக்கினார் அம்மருந்தை கொண்டு பல நோய்களை குணமாக்கினார் இம்மருந்து மருத்துவ உலகில் மகத்தான மருந்து என்பதை அவர் உணரவில்லை.

மேலும் அதை பெரிய அளவில் தயாரிக்கும் எந்த எண்ணமும் அவரிடம் இல்லை. Penicillin என்ற உயர்ந்த மருந்தை பெரிய அளவில் செய்யலாம் என்ற எண்ணமானது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹோவார்டுப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகியோர் கொண்ட குழுவினருக்கு ஏற்பட்டது. அதை 14 ஆண்டுகள் ஆராய்ந்து செயல்படுத்தினர்.

மேலும்  Penicillin மருந்தால் ஏற்படும் ஒவ்வாமைக்கும் மருந்தை கண்டனர் அக்குழுவினர்  penicillin என்ற உயிர்காக்கும் மருந்தை கண்டுபிடித்த அலெக்சாண்டர் ஃப்ளெமிங் அதை பெரிய அளவில் உருவாக்க பாடுபட்ட ஹோவார்டுப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகிய மூவருக்குமாய் கிபி1945-ஆம் ஆண்டு உலகின் உயர்ந்த விருதான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அலெக்சாண்டர் ஃப்ளெமிங் மறைவு :

உலகம் உள்ளளவும் மக்களின் உயிர் காக்கும் மருந்தை கண்டறிந்த Alexander Fleming 31, அக்டோபர் மாதம், கி.பி1987-ஆம் ஆண்டு மறைந்தார் என்றாலும் Penicillin மருந்தை ஏற்றிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் உடலிலும் உயிராய் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இம்மருந்தால் சுமார் 30 கோடி மக்கள் பிழைத்து வாழ்ந்து கொண்டிருப்பதாக மருத்துவ ஆய்வு கூறுகிறது எனவே மருந்துகளின் ராணி Penicillin என்பதை மறந்து விடாதீர்கள் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம் 🙏 

Previous Post Next Post