இணையதள விற்பனையில் முன்னணியில் இருக்கும் உலகின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமான Amazon புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது Digital currency என்று சொல்லக்கூடிய Cryptocurrency பற்றி முழுமையாக அறிந்த நபர்கள் Amazon நிறுவனத்திற்கு தேவைப்படுகிறார்கள் என்று சில ஊடகங்கள் கூறுகிறது.

இந்த அறிவிப்பு வெளியானவுடன் bitcoin உடைய பங்கு சற்று அதிகரிக்க தொடங்கி இருக்கிறது இதன் கூடவே மத்த Cryptocurrency விட பங்கும் சற்றே உயர்ந்து இருக்கிறது மேலும் இதைப் பற்றி அதிகாரப்பூர்வமாக Amazon நிறுவனம் இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

Bitcoin மதிப்பு திடீர் அதிகரிப்புக்கு என்ன காரணம்
ஆனால் இந்த செய்தியை பற்றி bitcoin மீது ஆர்வம் உள்ளவர்கள் மத்தியில் இந்த தகவல் அதிகமாக பகிர தொடங்கியது மேலும் வருங்காலத்தில் Amazon நிறுவனம் bitcoin னை ஏற்றுக்கொள்ளும் என்று Amazon நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியிருக்கிறது.

Cryptocurrency இன் எதிர்காலத்தைப் பற்றிய ஒவ்வொரு செய்திகளும் bitcoin மீது ஆர்வம் இருக்கும் நபர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரிக்கிறது எது எப்படி இருந்தாலும் வருங்காலத்தில் Cryptocurrency உடைய தேவை அதிகரிக்கும் என்று இணையதள வல்லுனர்கள் மற்றும் பெரிய தொழில் நுட்ப நிறுவனங்கள் அவ்வப்போது தெரிவிக்கிறது.

Previous Post Next Post