பிரபஞ்சத்தில் மில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் உள்ளது இதில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளது என்று இதுவரை ஆராய்ச்சியாளர்கள் கருதினார்கள் இந்நிலையில் அவ்வப்போது வான்வழி மண்டலத்திலிருந்து அர்த்தமற்ற ரேடியோ சமிக்கைகள் வருவது ஆராய்ச்சியாளர்களிடம் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

முதன்முதலில் பூமியில் பறக்கும் தட்டு எங்கே காணப்பட்டது கிபி 1440 ஆண்டு பண்டைய எகிப்திய மக்கள் முதல் பறக்கும் தட்டை பார்த்ததாக பாரம்பரிய ஓவியத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள் இதுவே மனிதர்களால் முதலில் கண்டறியப்பட்ட பறக்கும்தட்டு ஆகும்.

வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு மறைமுகமாக வருகிறார்களாம்

உலகமெங்கும் பறக்கும்தட்டு காணப்பட்டாலும் அமெரிக்கமக்களால் அதிகஅளவில் பறக்கும் தட்டு காணப்பட்டதாக தெரிவிக்கிறார்கள் இந்நிலையில் அமெரிக்க தொழிலதிபரான கென்னத் அர்னால்ட் 1947 ஆம் ஆண்டு தனது சிறிய விமானத்தில் விண்ணில் பறந்து கொண்டிருக்கும் போது அதிவேகத்தில் ஒரு பறக்கும் தட்டு அவரை கடந்து சென்றதாக கூறியிருக்கிறார்.

அதேபோல 2019 ஜூலை 15 ஆம் தேதி அன்று அமெரிக்க கப்பல் படையால் அதிகாரப்பூர்வ இணையத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டது அந்த வீடியோவில் ஒரு பறக்கும் தட்டு கடந்து செல்வது போல வெளியிடப்பட்ட வீடியோவில் பதிவாகி இருந்தது.

உண்மையில் வேற்று கிரகவாசிகள் பூமிக்கு அவ்வப்பொழுது வந்து செல்கிறார்களா இல்லை மறைமுகமாக மனிதர்களை கண்காணிக்கிறார்கலா பல்வேறு மக்களிடம் பல்வேறு கருத்துக்கள் உள்ளது ஆனால் விண்வெளி ஆராய்ச்சித் துறையை சேர்ந்த ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்க்கலாம்.

பிரிட்டனின் முதல் வின்வெளி வீராங்கனையான டாக்டர் ஹெலன் சேர்மன் கூறுகையில்  வேற்று கிரகவாசிகள் பூமியில் மறைமுகமாக வாழ்கிறார்கள் என்று தெரிவிக்கிறார் அவர் மேலும் கூறுகையில் வான் வெளி மண்டலத்தில் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளது அதில் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு வாழ்க்கைமுறையை கொண்டிருக்கும் ஏலியன் என்று அழைக்கப்படும் வேற்றுகிரகவாசிகள் நாம் அறிந்திராத மற்றும் கண்டிராத மூலக்கூறுகளால் உருவாகி இருக்கலாம் அதனாலேயே மனித கண்களுக்கு அவைகள் புலப்படாமல் இருக்கலாம் என்று தெரிவிக்கிறார்.

மனிதர்களாகிய நாம் கார்பன் மற்றும் நைட்ரஜன் மூலக்கூறுகளால் உருவாகியுள்ளோம் அதனால்தான் மற்ற உயிரினங்கள் நம் கண்களுக்கு தெரிகிறது வேற்றுக்கிரகவாசிகள் நாம் அறிந்திராத மூலக்கூறுகளால் உருவாகியிருக்கலாம் அதனாலேயே நம்மால் அவர்களை காண முடியாமல் போகலாம் என்று டாக்டர் ஹெலன் ஷர்மன் கூறுகிறார். இந்தக் கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக மேலும் ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது டாக்டர் ஹெலன் ஷர்மன் கூறுவது உண்மையாக இருக்கலாம் வேற்றுக்கிரகவாசிகள் நாம் அறிந்திராத வினோத வேதியல் கூறுகளால் உருவாகியிருக்கலாம் என்று தெரிவிக்கிறார்கள்.

Previous Post Next Post