புஜங்காசனம் (Bhujangasana)

புஜங்கம் என்பது பாம்பு எனப்படும். புஜங்காசனம் என்றால் நல்ல பாம்பு படம் விரித்தாடும் போது இருக்கும் ஒரு நிலை பாம்பின் உடல் நிலையைப் போன்று நம் உடலிலும் கம்பீரமாகப் பாய்ந்து செல்லும் சக்தியும் முதுகெலும்பு உறுதியுடன் கூடிய வளையும் தன்மையும் கிடைக்க வேண்டுமென்பதற்காக நம் முன்னோர் இந்த ஆசன முறையைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

விரிப்பின் மேல் குப்புறப் படுத்துக் கொண்டு இரண்டு குதி கால்களையும் ஒன்று போல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

புஜங்காசனம் பயிற்சி செய்யும் முறை :

விரிப்பின் மேல் குப்புறப் படுத்துக் கொண்டு இரண்டு குதி கால்களையும் ஒன்று போல் சேர்த்துக் கொள்ள வேண்டும். உள்ளங்டிககடிள மார்புக்கு நேராக விரிப்பில் ஊன்றிக் கொண்டு முகவாய்க் கட்டையையும் விரிப்பின் மேல் படும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு சுவாசத்தை மெதுவாய் விட்டுக் கொண்டே கைகளை ஊன்றியவாறு தலையைத் தூக்கிப் பின்னுக்கு வளைக்கவும்.

புஜங்காசனம் பயிற்சி செய்யும் நேர அளவு :

பத்து முதல் பதினைந்து வினாடிகள் இரண்டு மூன்று முறைசெய்யலாம்.

புஜங்காசனம் பயிற்சியின் பலன்கள் :

இப் பயிற்சியானது உடலைத் தாங்கி நிற்கும் முக்கிய உறுப்பான முதுகெலும்புக்குச் சிறந்த பயிற்சியாக அமைந்திருக்கிறது. வயிற்று மார்புச் சதைகள் தளர்த்தி நீட்டப்பட்டு.மேல் முதுகு, கழுத்துச் சதைகள் மடக்கி இழுக்கப்பட்டு நல்ல இரத்த ஒட்டம் கிடைக்கிறது. 

அதனால் முதுகு, நரம்புகளும் அதைச் சேர்ந்த சதைக் கோளங்களும் வீரிய பலம் பெறுகின்றன. கழுத்துக்கு நல்ல பயிற்சி கிடைப்பதால் சுளுக்கு ஏற்படாது. கைகளுக்கு நல்ல வலிமை கிடைக்கின்றது. கூன் முதுகு நிமிர்ந்து நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

புஜங்காசனம் செய்யும் பயிற்சியாளர் கவனத்திற்கு :

இடுப்புக்கு மேலே உள்ள உடலின் பகுதி தரைக்கு மேலே செங்குத்தாக நிற்பதுதான் இந்த ஆசனத்தின் சரியான இலக்கணம் ஆனால் எடுத்த எடுப்பிலேயே நம் உடலை அந்த அளவுக்கு வசப்படுத்த இயலாதவர்கள் மெதுவாக முயற்சி செய்தால் முடிவில் வெற்றி கிடைக்கும்.

Previous Post Next Post