சவாசனம் Shavasana (சாந்தி ஆசனம்)

சவாசனம் என்பது எந்த இயக்கம் இல்லாமல் பிணம் போன்று இருப்பது.

சவாசனம் பயிற்சி செய்யும் முறை :

விரிப்பின் மேல் மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கண்களை மூடிக் கொண்டு முகம் நிமிர்ந்தவாறு மேலே பார்க்கவும். கைகளை விரைப்பின்றிப் பக்கவாட்டில் சிறிது அகற்றி வைத்துக் கொண்டு உடலின் பாகங்கள் எல்லாம் உணர்வற்றவை போல் தளர்த்தப்பட்டிருக்க வேண்டும்.

விரிப்பின் மேல் மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கண்களை மூடிக் கொண்டு முகம் நிமிர்ந்தவாறு மேலே பார்க்கவும். கைகளை விரைப்பின்றிப் பக்கவாட்டில் சிறிது அகற்றி வைத்துக் கொண்டு உடலின் பாகங்கள் எல்லாம் உணர்வற்றவை போல் தளர்த்தப்பட்டிருக்க வேண்டும்.

சுவாசத்தைக் கட்டப்படுத்தாமல் அவசரமின்றி அதிநிதானமாக உள்ளிழுத்து வெளிவிடவும். வெளியேறுகிற ஆழ்ந்த சுவாசத்தில் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். அந்த நேரத்தில் மூச்சுக் காற்றின் உஷ்ணத் தன்மையை மூக்கு அறியக் கூடாது.

கீழ்த்தாடை தொய்வாக இருக்க வேண்டும். நாக்கு தொந்தரவற்று இருக்க வேண்டும். கண்களையும் அசைக்க கூடாது. முழுமையான உடலை தளர்த்தி நன்றாக சுவாசிக்க வேண்டும்.

ஓய்வு ஆரம்பிக்கும் போது கால், விரல், பாதம், கணுக்கால், குதிகால் தசை, முட்டி, தொடை, இடுப்பு, வயிறு, முதுகு, மார்பு, இதயம், கை, முன்கை, விரல், முகம், உதடு, கண், தலை, மூளை என்று படிப்படியாக வரவேண்டும். மனதிற்குள் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் காற்றில் மிதப்பது போல் கற்பனை செய்து கொண்டிருக்க வேண்டும்.

ஆசனம் முடிந்ததும் திடீரென எழுந்திருக்க கூடாது. உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் மனதால் தட்டி எழுப்பி விழிப்புக் கொடுத்து நிதானமாக முதலில் கால் விரல்களை அசைத்துப் பாதங்களையும் கால்களையும் பக்கவாட்டில் உருட்டி கைகளை மெதுவாக அசைத்து உடம்பைப் புரட்டி நிதானமாக எழுந்து உட்காரவும்.

பயிற்சி செய்யும் நேர அளவு :

பத்து முதல் இருபது நிமிடம் வரை இருக்க வேண்டும்.

பயிற்சியின் பலன்கள் :

இதனால் உடலின் சகல உறுப்புகளுக்கும் மனதிற்கும் நல்ல ஓய்வு கிடைக்கப் பெறுகிறது. மனக்கவலை கோபம் நீங்கி, பூரண ஆறுதல் கிடைக்கும். உலக வாழ்வில் உண்மையான சமாதானம், அமைதி, இன்பம் கிடைக்க வேண்டுமாயின் ஒவ்வொருவரும் சாந்தி ஆசனம் செய்ய வேண்டும்.

Previous Post Next Post