யோகா என்பது எதற்கு?

இன்றைய நாகரீக உலகம் வன்முறைமிகுந்த உலகமாக மாறி விட்டது. அதில் மனிதன் தன்னுடைய அகவாழ்க்கையை மறந்துவிட்டு புறவாழ்க்கையில் முற்றிலுமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு விட்டான். மிக அதிகமான மருந்துகளையும், நச்சுப் பொருள் கலந்த உணவுகளையும் பயன்படுத்தி இயற்கையின் விதிமுறைக்கு மாறாக தானே தன் உடலை பாழ்படுத்தி கொண்டிருக்கிறான்.

இன்றைய நாகரீக உலகம் வன்முறைமிகுந்த உலகமாக மாறி விட்டது. அதில் மனிதன் தன்னுடைய அகவாழ்க்கையை மறந்துவிட்டு புறவாழ்க்கையில் முற்றிலுமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு விட்டான்.

இவ்வுலக இன்பங்களை ஒர் வரையறைக்கக் கட்டுப்பட்டு அனுபவிக்கலாம் அளவுக்கு மீறிய நிலையில் மனம் போன போக்கில் அனுபவிப்பதாலேயே நம் உடல் நலம் கெட்டு விடுகிறது.

இந்த உலகம் ஒரு இயந்திர உலகமாக மாறி வருகிறது, அதில் மனிதன் மெல்ல மெல்ல ஒரு இயந்திரமாக மாறி வருகிறான். நவீன விஞ்ஞானத்தின் மூலம் தன் பழுதுபட்ட நுரையீரல்கள். இதயங்களுக்கு பதிலாக இரும்பு நுரையீரல்கள்.. பிளாஸ்டிக் இதயங்கள் என்று பொருத்திக் கொண்டு விஞ்ஞாகத்தின் அடிமையாக வாழ்ந்து வருகிறான், இந்நிலையை மாற்றத்தான் மனிதனுக்கு யோகா தேவைப்படுகிறது.

உண்மையான ஆரோக்கியத்தையும். குறைந்த உணவில் நிறைந்த சக்தியையும் யோகாசனங்கள் தருகின்றன, யோகா சனங்களைத் தவறாமல் செய்து வருபவர்களுக்கு வியாதி அணுகவே அணுகாது.

நோய்களை குணமாக்கும் ஆசனங்கள்

நரம்புத் தளர்ச்சி :

ஹலாசனம். மத்ச்யாசனம். பஸ்சி மோத்தானாசனம். சர்வாங்காசனம், சிரசாசனம்.

ஆஸ்த்மா :

புஜங்காசனம், அர்த்தமத்சேந்திரா. சர்வாங்காசனம், பஸ்சிமோத்தனா, ஹலாசனம், விபரீதகரணி.

முகப்பரு. தோல் வியாதி :

ஹலாசனம், பஸ்சிமோத்தானா. மத்ச்யாசனம். சர்வாங்காசனம், பத்மாசனம்.

தீராத மலச்சிக்கல் :

ஹலசானம், பஸ்சிமோத்தானாசனம், உட்டியாணா, மயூராசனம். நௌலி. பத்மாசனம்.

மூலம் :

பஸ்சிமோத்தானா. சர்வாங்காசனம். சிரசாசனம். பத்மாசனம். கோமுகாசனம். மயூராசனம்.

வீர்யக் குறைவு விந்து நோய்கள் :

நௌலி. சிரசாசனம், தனுராசனம், சித்தாசனம், பத்மாசனம். பஸ்சிமோத்தானா, ஹலாசனம். சர்வாங்காசனம், உட்டியாணா, மத்ச்யாசனம்.

வயிற்று வலி, வயிற்றுப் போக்கு :

சர்வாங்காசனம், மத்ச்யாசனம், பஸ்சிமோத்தானா, ஹலாசனம், தனுராசனம், சலபாசனம்.

தொந்தி, ஊளைச் சதையைப் போக்க :

மயூராசனம், தனுராசனம், ஹலாசனம், பத்மாசனம், சர்வாங்காசனம், பஸ்சிமோத்தானாசனம்.

கீல்வாதம் :

தனுராசனம், சர்வாங்காசனம், பஸ்சிமோத்தானா, சலபாசனம், சிரசாசனம், புஜங்காசனம்.

அபெண்டிஸைடிஸ் :

சர்வாங்காசனம், மத்ச்யாசனம், ஹலாசனம், விபரீதகரணி, சிராசனம், பஸ்சிமோத்தானா. 

ஹெர்னியா (குடலிறக்கம்) :

சர்வாங்காசனம், விபரீத கரணி, மத்ச்யாசனம். 

டையபெடிஸ் (சர்க்கரை வியாதி) :

தனுராசனம், நெளலி, பஸ்சிமோத்தானாசனம், உட்டியாணா, ஹலாசனம், சர்வாங்காசனம், மத்ச்யாசனம், சலபாசனம். 

காக்காய் வலிப்பு :

சர்வாங்காசனம், பஸ்சிமோத்தானாசனம், சலபாசனம், ஹலாசனம், சிரசாசனம், மத்ச்யாசனம். தனராசனம் உட்டியாணா.

குஷ்டம் :

ஹலாசனம், மத்ச்யாசனம். பஸ்சிமோத்தானாசனம், தனுராசனம், சர்வாங்காசனம்.

தலைவலி நீங்க :

ஏகபாத ஆசனம். சிரசாசனம், அர்த சந்திராசனம். அர்ததிரிகோண ஆசனம், நின்ற தனுராசனம். பாதஹஸ்த ஆசனம்.

பெண்களுக்கு (சூதகக் கோளாறுகள் நீங்க) :

அர்த்தமத்சேந்திராசனம், விபரீதகரணி, சலபாசனம், நாடிசுத்தி, தனுராசனம், பஸ்சிமோத்தானாசனம், சர்வாங்காசனம், அர்த்த சிரசாசனம், ஹலாசனம். 

விரை வீக்கம். யானைக்கால் :

சர்வாங்காசனம், விபரீதகரணி, கருடாசனம், ஹலாசனம், பஸ்சிமோத்தானாசனம். மத்ச்யாசனம். வாதாயனசனம். திரிகோணாசனம்.

மஞ்சள் காமாலை :

பத்மாசனம், விபரீத கரணி, பஸ்சிமோத்தாசனம், சர்வாங்க ஆசனம், மத்சியாசனம், அர்த மச்சேந்திரா, ஹலாசனம், மயூரா.

Previous Post Next Post