உத்தித பத்மாசனம் (Utthita padmasana)

உத்தித என்றால் மேலே என்று பொருள் பத்மம் என்றால் தாமரை என்று பொருள் இந்நிலை உயர்த்திய தாமரை நிலை.

உத்தித பத்மாசனம் செய்யும் முறை :

முதலில் பத்மாசனத்தில் உட்காரவும். உள்ளங்கைகளை அருகில் விரிப்பின் மீது வைக்கவும். கைகளை தரையில் ஊன்றி மெல்ல உடலை மேலே உயர்த்தவும்.

உத்தித என்றால் மேலே என்று பொருள் பத்மம் என்றால் தாமரை என்று பொருள் இந்நிலை உயர்த்திய தாமரை நிலை.

இவ்வாறு உடலை மேலே உயர்த்தும் போது உடல் உதறலோ, அல்லது தள்ளாட்டமோ இல்லாமல் உடல் ஆடாமல் நேராக இருக்க வேண்டும்.

கடைசி நிலையில் இயல்பான சுவாசத்தில் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் பயிற்சி செய்பவர்கள் தானாகவே மூச்சை இழுத்துப் பிடித்து கொள்வார்கள். பின்பு பழக பழக சாதாரண மூச்சில் இந்த ஆசனத்தை செய்யலாம். பயிற்சி முடிந்த பிறகு இரண்டு மூன்று முறை ஆழ்ந்த சுவாசம் எடுப்பது நல்லது.

நேர அளவு :

பத்து முதல் இருபது நிமிடங்கள் செய்யவும் இரண்டு மூன்று முறைசெய்யலாம்.

பலன்கள் :

மணிக்கட்டு, கைகள், வயிறு வலிமையடையும், தொப்பையைக் குறைக்கும்.

Read more : சப்த வஜ்ராசனம் செய்வது எப்படி?

Previous Post Next Post