பிறை ஆசனம் (Pirai Asana)

பிறை என்றால் பாதி நிலவு, இந்நிலையில் உடலின் வெளிப்புற வளைவு நிலவின் அரைவட்டம் மாதிரி தெரிவதால் இப்பெயர்.

பிறை என்றால் பாதி நிலவு, இந்நிலையில் உடலின் வெளிப்புற வளைவு நிலவின் அரைவட்டம் மாதிரி தெரிவதால் இப்பெயர்.

பிறை ஆசனம் செய்யும் முறை :

முதலில் நின்றநிலையில் காலைச் சற்று அகலமாக வைத்துக் கொள்ளவும். பின்னர் கைகளினால் முதுகைப் பிடித்துக் கொண்டு மெதுவாக பின்னால் முடிந்த அளவிற்கு வளைய வேண்டும்.

இப்போது உடல் எடை முழுவதும் தொடையிலும் கால் விரல்களிலும் இருக்கவும். மெல்ல மெல்ல முதுகை சாய்த்து கைகளை கீழறக்கி கணுக்காலைப் பிடித்துக் கொள்ளவும். கண்களை திறந்து வைக்கவும்.

நேர அளவு :

பத்து முதல் பதினைந்து வினாடிகள் இருக்கவும், இதை இரண்டு மூன்று முறை செய்யலாம்.

பலன்கள் :

முதுகுத்தண்டு பலம் பெறும். முதுகின் கூனல் நிலை அகன்று நிமிர்ந்த மார்பு பெறுவீர்கள். நெஞ்சுக் கூடு நன்கு விரிவதால் மார்பும். நுரையீரலும் அகன்று சுவாச உறுப்பு கட்கு மிகுந்த பலம் கொடுக்கும்.

பயிற்சியாளர் கவனத்திற்கு :

முதலில் இந்த ஆசனம் செய்யும் பொழுது முழுவதும் வளைய வராது. ஆனால் பயிற்சியை விடாமல் தொடரத் தொடர சில நாட்களிலேயே ஒன்றாக இரு கால்களையும் கையினால் பிடித்த படி பின்னால் வளையும் நிலைகிட்டும். முழங்கால்கள் வளையாமல் பார்த்துக் கொள்க.

மூச்சு சாதாரணமாகவே இருக்கட்டும் ஆழமான மூச்சை உள்ளிழுத்து அவதிப்படாதீர்கள். பின்னால் வளையும் போது மூச்சை வெளி விட்டு சற்று நேரம் அதே நிலையில் இருக்கவும்.

Previous Post Next Post