பனிக் காலத்தில் அழகு பராமரிப்பு

பொதுவாக பனிக்காலத்தில் அனைவரின் உடலும் வறண்டு போகும். சிலருக்கு உதடுகள் வெடிக்கும், கை கால்களில் மீன் செதில்கள் போல சருமம் வறண்டு செதில் செதிலாக காணப்படும். பனிக்காலத்தில் குளிர் காற்று வீசுவதால் அது சருமத்தின் இயற்கைத் தன்மையை குறைக்கிறது. அதனால் சருமம் எளிதில் வறண்டு விடும். எண்ணெய்த் தன்மை கொண்ட சருமத்தை உடையவர்களைக் கூட இந்த வறட்சி பாதிக்கும்.

பொதுவாக பனிக்காலத்தில் அனைவரின் உடலும் வறண்டு போகும். சிலருக்கு உதடுகள் வெடிக்கும், கை கால்களில் மீன் செதில்கள் போல சருமம் வறண்டு செதில் செதிலாக காணப்படும். பனிக்காலத்தில் குளிர் காற்று வீசுவதால் அது சருமத்தின் இயற்கைத் தன்மையை குறைக்கிறது.

மேலும் சருமத்திற்கு தேவையான ஈரத்தன்மை குளிர்க்காலத்தில் கிடைப்பதில்லை. இதனால் தோல் வறண்டு சுருக்கங்கள் ஏற்படுகின்றன. ஆகவே பனிக் காலத்தில் அழகை பராமரிப்பதற்கு சத்துடன் சூடான உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். 

பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு போன்றவற்றை பனிக்காலத்தில் அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. அரிசி, கோதுமை போன்ற உணவு வகைகளை பனிக்காலத்தில் அதிகம் சாப்பிட்டால் உடல் சூடு பாதுகாக்கப்படும்.

பனிக்கால அழகுக் குறிப்புகள்

பனிக்காலத்தில் சோப்பு பயன்படுத்தக் கூடாது. அதிகமாகும் ஏனெனில் சோப்பினால் உடலின் வறட்சித்தன்மை கடலை மாவு, பாசிப்பயறு மாவு இரண்டையும் சம அளவு கலந்து அதனுடன் ஆரஞ்சுப் பழத்தோலை காயவைத்து பொடியாக்கிக் கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு கிரீம் போல் உடலில் பூசிக் குளித்தால் வறட்சித்தன்மை நீங்கி மிருதுத் தன்மை உருவாகும்.

ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி உடல் மற்றும் தலையின் மேற்பரப்புப் பகுதிகளில் நன்றாகத் தேய்த்து விட்டு இளம் சுடுநீரில் குளிக்க வேண்டும். சோப்பு உபயோகிக்க வேண்டும் என நினைப்பவர்கள் கிளிசரின் சோப்பை பயன்படுத்தலாம். 

மேலும் சோப்பை அக்குள், இடுக்குப் பகுதிகளில் மட்டும் பயன்படுத்தினால் போதுமானது. பனிக்காலத்தில் வாரம் இரண்டு முறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். குளிக்கும் நீரில் சிறிதளவு 'யூடி கோலான்' சேர்த்தால் உடலுக்கு உற்சாகம் கிடைக்கும். கடலை மாவு தேய்த்துக் குளித்தால் அந்த மாவின் வாடையையும் யூடி கோலான் போக்கி விடும்.

பன்னீர், கிளிசரின் இரண்டையும் கலந்து தூங்கச் செல்லும் போது கால் பாதங்களிலும், கை விரல்- களிலும் தேய்த்துக் கொண்டால் சருமம் மிருதுவாகி அழகுறும். பனிக்காலத்தில் நகங்களிலும், கால் பாதங்களிலும் மருதாணி தேய்ப்பது நல்லது.

குளித்து விட்டு ஏதாவதொரு "மாய்ஸ்சரைஸ்சரிங்” கிரீம் தடவிக் கொள்வது நல்லது. இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னால் உதடுகளில் வெண்ணெய் (அ) பாலாடையைத் தேய்த்து மெதுவாக வருடிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உதடுகளில் வெடிப்பு ஏற்படாது.

பனிக்காலத்தில் பாதங்களில் ஏற்படும் வெடிப்பைப் போக்க தேங்காய் எண்ணெய், பசு, நெய், தேன், மஞ்சள் பொடி ஆகியவற்றை கலந்து வெடித்த பகுதிகளில் தேய்க்கலாம்.

Previous Post Next Post