வியர்வை நாற்றம்

வெளித் தோற்றத்திற்கு அழகாக, ஸ்டைலாக இருப்பது முக்கியமல்ல. உடலில் துர்நாற்றங்கள் ஏற்படா- வண்ணம் சருமத்தை பராமரிப்பதே முக்கியமான விஷயம். கண்ணிற்கு அழகாக தோற்றமளித்து அருகில் வரும் போது துர்நாற்றத்தால் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுவது மிகவும் வருந்தத் தக்க விஷயம். இந்த வியர்வை நாற்றத்தால் வாழ்க்கையில் பல சிக்கல் தோற்றுவிக்கப் படுகின்றன.

வெளித் தோற்றத்திற்கு அழகாக, ஸ்டைலாக இருப்பது முக்கியமல்ல. உடலில் துர்நாற்றங்கள் ஏற்படா- வண்ணம் சருமத்தை பராமரிப்பதே முக்கியமான விஷயம். கண்ணிற்கு அழகாக தோற்றமளித்து அருகில் வரும் போது துர்நாற்றத்தால் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுவது மிகவும் வருந்தத் தக்க விஷயம். இந்த வியர்வை நாற்றத்தால் வாழ்க்கையில் பல சிக்கல் தோற்றுவிக்கப் படுகின்றன.

வியர்வை நாற்றம் ஏற்படுவதற்கான காரணங்கள்

பொதுவாக நம் உடலில் ஏற்படும் துர்நாற்றத்திற்கு நம் மனம் மற்றும் உடல் இரண்டுமே காரணமாகும். நம் மனதில் ஏற்படும் பலவகை உணர்ச்சிகளின் காரணமாக வியர்வை நாற்றம் ஏற்படுகிறது. அதிக சந்தோஷம், அதிக துக்கம், அதிக பதற்றம், அதிக செக்ஸ் உணர்வு போன்றவை ஏற்படும் போது மனநிலை கட்டுப் பாட்டை மீறுகிறது. இந்நேரம் சுரப்பிகள் வேகமாய் செயல்பட தொடங்குகின்றன. அந்தச் செயல்பாட்டால் நிறமோ, மணமோ இல்லாத திரவங்கள் வெளியே வருகின்றன. அந்த திரவத்தில் பாக்டீரியாக்கள் சேருகின்றன. அதன் கூடவே வியர்வையும் சேருவதால் நாற்றம் உருவாகிறது.

மேலும் நாம் உண்ணும் உணவைப் பொறுத்தும் சுரக்கும் சுரப்பிகளின் நாற்றம் ஏற்படுகிறது. கிராம்பு, ஏலக்காய், கருவாபட்டை, வெங்காயம், பூண்டு மற்றும் சில வகை மீன்களை அதிகம் சாப்பிட்டால் உடல் திரவத்தின் நாற்றம் அதிகமாக இருக்கும். குண்டுப் பெண்களிடம் பாக்டீரியாக்களின் செயல்பாடு அதிகமாய் இருப்பதால் அதிக நாற்றம் ஏற்படும். நீரிழிவு நோய் உள்ளவர்களிடமும் பாக்டீரியாக்களின் அதிக செயல்பாடு காரணமாக துர்நாற்றம் அதிகம் ஏற்படும்.

வியர்வை நாற்றத்தைக் கட்டுப்படுத்த செய்ய வேண்டியவை

கீரைகள், ஆரஞ்சுப்பழம், அன்னாசிப்பழம் ஆகியவற்றை நிறையச் சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள நார்ச்சத்து திரவ உற்பத்தியைக் குறைக்கும் தன்மை கொண்டதால் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கப்படும். உடலில் அதிக வியர்வையுள்ள பகுதிகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவி பவுடர் பூசிக் கொள்ள வேண்டும். நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். பாக்டீரியாக்களின் செயல்பாட்டை குறைக்க தினமும் இரவும் பகலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

உடலை மட்டும் சுத்தமாக வைத்தால் போதாது. உடையிலும் சுத்தம் தேவை. முக்கியமாக உள்ளாடைகள் அதிக சுத்தமானதாக இருக்க வேண்டும். இல்லையெனில் சொறி, சிரங்கு, அரிப்பு போன்ற சரும நோய்கள் ஏற்பட்டு அவ்விடங்களில் சிவந்தும் தடிப்பு ஏற்பட்டும் எரிச்சலை உண்டாக்கும்.

காட்டன் துணிவகைகள் வியர்வையை உறிஞ்சி எடுக்க ஏற்றவை. ஆதலால் பெரும்பாலும் காட்டன் துணிகளையே உடுத்துதல் நலம். மனதை எப்போது அமைதியாக வைத்திருங்கள். உணர்ச்சிகளை எப்பொழுதும் எல்லை மீற விடக் கூடாது.

பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பையே உபயோகிக்க வேண்டும். உள்ளங்கால் பகுதி சிலருக்கு அதிகமாக வியர்க்கும். அவ்வாறானவர்கள் காற்று படும்படியான செருப்பு- களையே அணிய வேண்டும். இறுக்கமான ஷூக்களை அணியக் கூடாது. ஷூ அணியும் போது சாக்ஸ்களைத் தினமும் துவைத்து அணிய வேண்டும். பிளாஸ்டிக், ரப்பர் செருப்புகளை அணியக் கூடாது.

கை, கால்களை சுத்தமான நீரால் சோப் உபயோகித்துக் கழுவி, சுத்தமான துண்டால் துடைத்து விரல்களுக்கிடையில் பவுடர் பூச வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உடல் நாற்றத்திலிருந்து விடுதலை பெறலாம்.

Previous Post Next Post