திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்:

ஆன்மிகத்திலும் வரலாற்றிலும் புகழ்பெற்ற திருவண்ணாமலை. பஞ்ச பூதத்தலங் களில் ஒன்றாகவும் சைவக்குரவர்களால் பாடல் பெற்ற தலமாகவும் சிறப்புபெற்ற ஊராகும். இங்குள்ள அண்ணாமலையார் கோயில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு தொடர்ந்து சோழர்கள், பாண்டியர்கள், சம்புவ ராயர்கள், போசளர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்க மன்னர்கள், நகரத்தார்கள், குறுநில மன்னர்கள், ஜமின்தார்கள் என பல்வேறு அரசர்களின் பங்களிப்பு இக்கோயில் கட்டடக்கலை வரலாற்றில் உள்ளன.

ஆன்மிகத்திலும் வரலாற்றிலும் புகழ்பெற்ற திருவண்ணாமலை. பஞ்ச பூதத்தலங் களில் ஒன்றாகவும் சைவக்குரவர்களால் பாடல் பெற்ற தலமாகவும் சிறப்புபெற்ற ஊராகும்.

இக்கோயிலில் ஆயிரக் கணக்கான சிற்பங்களும், 430 கல்வெட்டுகளும் உள்ளன. இக்கோயிலில் 100க்கும் மேற் பட்ட சந்நிதிகள் உள்ளன. இறைஉருவங்கள், செப்புத்திருமேனிகள், ஓவியங்கள், அழகிய திருச்சுற்றுகள், தீர்த்தக்குளங்கள், ஆயிரங்கால் மண்டபம், வானுயர்ந்த கோபுரங்கள் இக்கோயிலின் சிறப்புகள் ஆகும். 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரமாண்டமாய் அமைந்துள்ளது இத்திருக்கோயில். கிருஷ்ணதேவராயர் கட்டிய கிழக்கு ராஜகோபுரம் 217 அடி உயரம், தமிழ் நாட்டில் இரண்டாவது உயரமான கோபுரம் ஆகும். இவை தவிர வல்லாள மகாராஜா கோபுரம், கிளிக்கோபுரம், அம்மணிஅம்மன் கோபுரம் ஆகியன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோபுரங்களாகும்.

இக்கோயிலில் அருள்மிகு அண்ணாமலையார் உடனமர் உண்ணாமுலை மூலவராக அமைந்துள்ளனர். மலைவலப்பாதையில் அமைந்துள்ள எழுத்து மண்டபம் ஓவியக் கூடமாகத் திகழ்கிறது. இவை தவிர கந்தாஸ்ரமம், பவழக்குன்று, ரமணாஸ்ரமம், மலைவலப்பாதை, அஷ்டலிங்கங்கள் ஆகியன பார்க்கத் தகுந்த இடங்களாகும்.

திருவண்ணாமலை படைவீடு கோயில்கள்:

படைவீட்டைத் தலைமை யிடமாகக் கொண்டு 13 மற்றும் 14- ஆம் நூற்றாண்டில் சம்புவராயர்கள் ஆட்சிபுரிந்தனர். இவர்கள் ஆட்சிப் பகுதி தற்போதைய வேலூர், காஞ்சி புரம், விழுப்புரம் மாவட்டங்கள் வரை பரவியிருந்தது. விஜயநகர பேரரசர் குமாரகம்பணாவின் படையெடுப் பின்மூலம் சம்புவராயர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது. சம்புவராயர்களைப்பற்றி அறிய 100- க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் துணை புரிகின்றன.

படைவீட்டைத் தலைமை யிடமாகக் கொண்டு 13 மற்றும் 14- ஆம் நூற்றாண்டில் சம்புவராயர்கள் ஆட்சிபுரிந்தனர்.

இவ்வூரில் உள்ள கோட்டைமலை வரதராஜர் கோயில், ரோணுகாம்பாள் கோயில், இராமச்சந்திரர் கோயில், சோமநாதர் கோயில், அம்மையப்ப ஈஸ்வரர் கோயில் ஆகியன புகழ்பெற்ற கோயில்களாகும். 1993-ஆம் ஆண்டு செய்யப்பட்ட அகழாய்வில் கோட்டை சிதைவு எச்சங்கள், ஆபரணங்கள், சிற்பங்கள் ஆகியன கண்டெடுக்கப்பட்டன. போளுர் - வேலூர் சாலையில் சந்தவாசல் ஊரிலிருந்து மேற்கே 8 கி.மீ தொலைவில் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் இயற்கை அரணோடு இவ்வூர் அமைந்துள்ளது.

தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில்:

விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்ட பெரியநாயகி அம்மன் கோயிலும் மலைமீதுள்ள பொன்மலைநாதர் ஆலயமும் மிகவும் புகழ்வாய்ந்தவை. இக்கோயில்களில் ஆயிரக்கணக்கான சிற்பங்களும், 60 கல்வெட் டுகளும் உள்ளன. கல் வெட்டுகளில் இவ்வூர் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து பல்குன்றக் கோட்டத்து மேல்குன்ற நாட்டு முருகமங்கலம் பற்றைச் சார்ந்த தேவக்காபுரம் என்று குறிக் கப்படுகிறது. விஜயநகர பேரரசர் காலத்தில் புகழ்பெற்ற வணிக நகராகவும், ஆன்மிக தலமாகவும் அக்காலத்தில் ஊரின் நிர்வாக அமைப்பாகவும் செயல்பட்டுள்ளது.

விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்ட பெரியநாயகி அம்மன் கோயிலும் மலைமீதுள்ள பொன்மலைநாதர் ஆலயமும் மிகவும் புகழ்வாய்ந்தவை. இக்கோயில்களில் ஆயிரக்கணக்கான சிற்பங்களும், 60 கல்வெட் டுகளும் உள்ளன.

பெரியநாயகி அம்மன் கோயில் மதில் சுவர், கல்யாணமண்டபம், மகா மண்டபம், கருவறை ஆகிய இடங் களில் சைவ, வைணவச் கதைச் சிற்பங்கள் எழிலுற அமைக்கப்பட்டுள்ளன. பெரியபுராண கதைச்சிற்பங்கள், விஷ்ணுவின் அவதாரச்சிற்பங்கள், தலவரலாற்றுச்சிற்பங்கள் போன் றவை காணத்தகுந்தவை ஆகும். இக்கோயிலுக்குப் பின்புறம் அமைந்துள்ள திருகா மேஸ்வரர் சமதே கோகிலாம்பாள் ஆலயமும் அதன் அருகில் சுமார் 500 அடி உயர மலையில் அமைந்துள்ள பொன்மலைநாதர் திருக்கோயிலும் சிற்ப எழில் கொண்ட கோயில்களாகும். இவ்வூர் போளுர் சேத்துப்பட்டு சாலையில் 14 கி.மீ.தொலைவில் உள்ளது.

நெடுங்குன்றம் இராமச்சந்திர பெருமாள் திருக்கோயில்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் புகழ்பெற்ற யோக இராமச்சந்திர பெருமாள் திருக்கோயில் நெடுங்குன்றத்தில் அமைந் துள்ளது. பெருமாள் இடது கையை இதயத் தின்மேல் வைத்தவாறும் அவருக்கு எதிரில் அனுமன் வேத மந்திரத்தைப் படித் துக்காட்டுவது மாதிரியும் சிற்பங்கள் அமைந்துள்ளன. மிகநேர்த்தியான வாயிற்காவலர்களின் சிற்பங்கள் அமைந்துள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் புகழ்பெற்ற யோக இராமச்சந்திர பெருமாள் திருக்கோயில் நெடுங்குன்றத்தில் அமைந் துள்ளது. பெருமாள் இடது கையை இதயத் தின்மேல் வைத்தவாறும் அவருக்கு எதிரில் அனுமன் வேத மந்திரத்தைப் படித் துக்காட்டுவது மாதிரியும் சிற்பங்கள் அமைந்துள்ளன.

இதனையடுத்து செங்கமலவல்லி தாயார் சந்நிதி அமைந்துள்ளது. இதன் எதிரில் அமைந்துள்ள முகமண்ட பத்தில் இராமாயண, தசாவதார சிற்பங்கள், கிருஷ்ணலீலை, கிருஷ்ணதேவராயர் சிற்பம் (கிருஷ்ண தேவராயருக்குத் தனிச்சிற்பம் அமைந்துள்ள குறிப்பிடத்தக்கதாகும்) அமைந்துள்ளன. விஜயநகர பேரரசர்கள் காலத்தில் கட்டப்பெற்ற இக்கோயில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளோடு வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்வெட்டுகளும் அமைந்துள்ளன. சேத்துப் பட்டு - வந்தவாசி நெடுஞ்சாலையில் சேத்துப்பட்டில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் அமைந் துள்ளது.

செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில்:

செய்யாற்றின் தென்கரையில் அமைந்துள்ள நகரம், திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற சைவத்தலம், இத்தலத்தின் மூலவர் வேதபுரீசுவரர், 

செய்யாற்றின் தென்கரையில் அமைந்துள்ள நகரம், திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற சைவத்தலம், இத்தலத்தின் மூலவர் வேதபுரீசுவரர்,

தாயார் இளமுலை யம்பிகை. ஞானசம்பந்தரால் ஆண் பனையை பெண் பனையாக மாற்றிய தலம் என்பர். வர லாற்றுச்சிறப்பு மிக்க கல்வெட்டுகளும், கலை கட்டடக்கலையில் முக்கியத்துவம் பெற்ற திருக்கோயிலாகும்.

திருமலை சமணர் ஆலயம்:

இம்மாவட்டத்தில் அமைந்துள்ள திருமலை புகழ்பெற்ற சமணத் திருத் தலமாகும், 22 வது சமணத்தீர்த்தங்கர ரான நேமிநாதரின் 18 அடி உயர உருவச் சிலையும் திருப்பாதங்களும் குந்தவை நாச்சியாரின் கல்வெட்டும் இக்குன்றில் அமைந்துள்ளன. குன்றிற்குக்கீழ் அமைந்துள்ள மகாவீரர் ஆலயத்தில் 5 அடி உயர சுதைச்சிற்பம், தீர்த்தங்கரர்களின் உருவங்கள், புகழ்பெற்ற பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள் அமைந்துள்ளன. 

இம்மாவட்டத்தில் அமைந்துள்ள திருமலை புகழ்பெற்ற சமணத் திருத் தலமாகும், 22 வது சமணத்தீர்த்தங்கர ரான நேமிநாதரின் 18 அடி உயர உருவச் சிலையும் திருப்பாதங்களும் குந்தவை நாச்சியாரின் கல்வெட்டும் இக்குன்றில் அமைந்துள்ளன

இக்கோயில். மனதிற்கு இனிமையான, காற் றோட்டமான இடத்தில் அமைந்துள்ளது இக்கோயில், போளூர் ஆரணி வழியில் வடமாதி மங்கலத்தில் இருந்தும், போளுர் தேவிகாபுரம் வழியில் மட்டப்பிறையூர் அல்லது கொம்ம னந்தல் வழியாகவும் செல்லலாம்.

மாமண்டூர் குடைவரைக் கோயில்:

தமிழகத்தில் அமைந்துள்ள பெரிய குடைவரைகளுள் ஒன்றாக கூறப்படுகிறது. நரசமங்கலம் மாமண்டூர் கிராமத்தில் உள்ள மலைக்குன்றில் 4 குடைவரைகோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்கள் மகேந்திரவர்மனும் அவரது பின்வந்த அரசர்களாலும் அமைக்கப்பட்டன. வலதுகோடியில் அமைந்துள்ளது முதல் மற்றும் இரண்டாம் குடைவரை முறையே விஷ்ணுவிற்கும் சிவனுக்கும் அமைக்கப் பட்டுள்ளது. 

குன்றின் மீது அமைக்கப்பட் டுள்ள 3-வது குடைவரை கருவறையில் இறை உருவங்கள் இல்லை. தென்கோடி யில் அமைக்கப்பட்டுள்ள 4வது குடைவரை முற்றுபெறாததாகும். வரலாற்றுச்சிறப்பு மிக்க மகேந்திரவர்ம பல்லவனின் பல பட்டப் பெயர்களை கூறும் பல்லவ கிரந்த கல்வெட்டு உள்ளது.

தமிழகத்தில் அமைந்துள்ள பெரிய குடைவரைகளுள் ஒன்றாக கூறப்படுகிறது. நரசமங்கலம் மாமண்டூர் கிராமத்தில் உள்ள மலைக்குன்றில் 4 குடைவரைகோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்கள் மகேந்திரவர்மனும் அவரது பின்வந்த அரசர்களாலும் அமைக்கப்பட்டன.

இம்மலைக்குன்றின் பின்புறம் அமைந்துள்ள சித்திரமேகத்தடாகத்தைப் பற்றிய குறிப்புள்ள 10 ஆம் நூற்றாண்டு கல் வெட்டு என வரலாற்றுப்பெட்டகமாக அமைந்துள்ளது இக்குன்றின் மீது வாலீஸ்வரர் கோயிலும், பைரவர் கோயிலும் அமைந் துள்ளது. குன்றின் வடகோடியில் சமணர் படுக்கையும் அது அமைந்துள்ள பாறையின் மீது திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகப்பழைய கி.பி. முதலாம் நூற்றாண்டு தமிழி கல் வெட்டும் அமைந்துள்ளது. வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் நரசமங்கலம் கிராமத்தில் இருந்து மேற்கே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

சீயமங்கலம் குடைவரைக் கோயில்:

அவனிபாஜன பல்லவனேஸ் வரம், சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்படு கின்ற குடைவரைக்கோயில் பல்ல வர் காலத்தில் குடைவரையாக மட் டும் இருந்தது. பிற்கால மன்னர் களால் அர்த்தமண்டபம், முக மண் டபம், கோபுரம் என விரிவுப்படுத்தப் பட்டுள்ளது. இயற்கையான சூழ லில் அமைந்துள்ள இக்கோயில் இறைவனின் பெயர் தூணாண்டார் ஆகும். இக்கோயில் தூணில் உள்ள நடராஜர் சிற்பம் தமிழகத் தில் முதல் நடராஜர் உருவம் என்று ஆய்வாளர்களால் குறிக்கப்பெறுகிறது.

அவனிபாஜன பல்லவனேஸ் வரம், சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்படு கின்ற குடைவரைக்கோயில் பல்ல வர் காலத்தில் குடைவரையாக மட் டும் இருந்தது.

30-க்கும் மேற்பட்ட கல் வெட்டுகளில் அரிய வரலாற்றுத்தகவல்களைக் கொண்டுள்ளன. இக்கோயிலுக்கு எதிரில் உள்ள குன்றில் சமணப் படுக்கையும் சிற்பமும் அமைந்துள்ளன. இக்கோயில். தேசூரிலிருந்து மேற்கே 2 கி.மி. தொலைவில் உள்ளது சீயமங்கலம்.

மடம் தடாகபுரீஸ்வரர் ஆலயம்:

சோழர்காலத்தில் கட்டப்பெற்ற இக் கோயிலின் மூலவர் பெயர் தடாகபுரிஸ்வரர் ஆகும். ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து பல் குன்றக்கோட்டத்து தென்னாற்றூர் நாட்டுக் குளத்தூர் என இக்கோயில் கல்வெட்டுகள் இவ்வூரைக் குறிக்கின்றன. இக்கோயில் இறை வன் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி.1072) திரு. அக்கினீஸ்வரமுடையார் என்றும், பின்னர் இரண்டாம் இராஜராஜன் காலம் முதல் (கி.பி. 1166) குளந்தை ஆண்டார் என்றும் தற்போது தடாகபுரிஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இவ்வூரில் உள்ள இராஜக்கல் பாறை, சறுக்கும் பாறை ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுகளில் ஊர்நிர்வாகம், கோயில் நிலதானம் உள்ளிட்ட பல தகவல்களைக் கொண்டுள்ளன. இக்கோயில் இராஜ கோபுரம் விஜயநகர பேரரசர்கள் சம்புவராயர்களை வென்றதன் நினைவாக எழுப்பப்பட்ட கோபுரம் ஆகும். இக்கோயிலில் ஆயிரம் லிங்கங்கள் கொண்ட சிறப்புமிக்க சகஸ்கர லிங்கம், கல்யாண மண்டபம், சிற்பங்கள், கல்வெட்டுகள் என அற்புதக் கோயிலாக ஊரின் நடுவே அமைந்துள்ளது. இது சேத்துப்பட்டு - வந்தவாசி சாலையில் ஏந்தல் கூட்டுரோட்டிலிருந்து 5கி.மீ. தொலைவில் உள்ளது.

கூழமந்தல் கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயில்:

இராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் அவரது ஞானகுருவான ஈசான சிவ பண்டி தரால் கட்டப்பெற்ற அழகிய கற்றளி கூழமந்தல் கோயிலாகும். கல்வெட்டுகளில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து காழியூர் கோட்டத்து ஆக்கூர் ஊர் அடுத்த பாகூர் நாட்டு நகரம் விக்ரமசோழ கங்கைகொண்ட சோழீஸ்வரம் என்று குறிப்பிடுகிறது. கிழக்கு பார்த்த கோயில் இரண்டு தளமுடைய அழகிய ஸ்ரீவிமானமும் அதனையடுத்த அர்த்த மண்டபமும் அடுத்தாற்போல் முகமண்டபத்துடன் அமைந்துள்ளது.

இராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் அவரது ஞானகுருவான ஈசான சிவ பண்டி தரால் கட்டப்பெற்ற அழகிய கற்றளி கூழமந்தல் கோயிலாகும். கல்வெட்டுகளில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து காழியூர் கோட்டத்து ஆக்கூர் ஊர் அடுத்த பாகூர் நாட்டு நகரம் விக்ரமசோழ கங்கைகொண்ட சோழீஸ்வரம் என்று குறிப்பிடுகிறது.

இங்குள்ள சிவனின் பெயர் கங்கை கொண்ட சோழீஸ்வரர் ஆகும். கருங்கற்களால் கட்டப்பெற்ற இக்கோயில் சோழர்கால கட்டுமானத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அழகிய விமானம், சிற்பங்கள், கல்வெட்டுத்தகவல்கள் என கண்ணைக்கவரும் வடிவில் அமைந் துள்ளது. தமிழக தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. வந்தவாசி - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் கூழமந்தல் கிராமத்தில் கிழக்கே 500 மீ தொலைவில் அமைந்துள்ளது.

பிரம்மதேசம் சந்திரமௌலீஸ்வரர் கோயில்:

வெம்பாக்கம் வட்டம் பிரம்மதேசம் ஊரில் பிற்காலப் பல்லவ மன்னனால் மணற்கல்லால் கட்டப்பட்ட 3 தளங்க ளுடைய சந்திரமௌலீஸ்வரர் என்ற அழகிய கற்றளி அமைந்துள்ளது. கல் வெட்டுகளில் இவ்வூரின் பெயர் ராஜ மல்லக் சதுர்வேதிமங்கலம், கரைக் கோட்டு பிரம்மதேயம் என்றும் இக்கோயில் இறைவரை திருப்போந்தை ஆண்டார் என்றும் குறிக்கப்பெறுகின்றது.

வெம்பாக்கம் வட்டம் பிரம்மதேசம் ஊரில் பிற்காலப் பல்லவ மன்னனால் மணற்கல்லால் கட்டப்பட்ட 3 தளங்க ளுடைய சந்திரமௌலீஸ்வரர் என்ற அழகிய கற்றளி அமைந்துள்ளது.

போந்தை என்றால் பனைமரம். பிரம்மதேசம் என்றால் நான்கு வேதங் களைக் கற்ற அந்தணர்களுக்கு தானமாக அளிக்கப்பட்ட ஊர் ஆகும். இவ்வூரில் பெருங்குறி மகாசபை என்ற மக்கள் சபை இருந்தது என்றும் இச்சபை இவ்வூரில் நிலதானம் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்பாகவும் செயல்பட்டுள்ளது.

முதலாம் இராஜேந்திர சோழன் இறந்த பின்னர் உடன்கட்டை ஏறிய மன்னரின் தேவியார் வீரமகா தேவியார் நினைவாக தாகம் தீர்க்க வேண்டி தண்ணீர் பந்தல் அமைத்த செய்திகள், இவ்வூரில் செயல்பட்ட மடங்கள், விழாக்கள் உள்ளிட்ட பல அரிய தகவல்களை இக்கோயி லிலுள்ள 90-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளால் அறியலாம். 

இவ்வூரில் அமைந்துள்ள மற்றொரு சிவாலயம் ருத்திர கோட்டீஸ்வர் ஆலயம் ஆகும், இக்கோயிலுக்கு இரண்டாம் குலோத்துங்கன் நேரடியாக வந்து நில தானங்களைச் செய்தவிவரம் இக்கோயில் கல்வெட்டுகளில் காணலாம். வெம்பாக்கம் வட்டம் காஞ்சிபுரம் - ஆற்காடு நெடுஞ்சாலையில் நாட்டேரி என்ற கிராமத்தின் அருகில் பிரம்மதேசத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

Previous Post Next Post