கண் பராமரிப்பு

ஒவ்வொருவருக்கும் கண் என்பது மிக மிக முக்கிய உறுப்பாகும். எனவே கண்களை நாம் அதிக கவனத்துடன் கவனித்துக் கொள்ள வேண்டும். பொதுவாக ஒருவரின் முக அழகு அவர்களின் கண்களைப் பொருத்தே அமையும். எனவே அழகான கண் அமைவது நம் முகத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது. கண்களின் ஆரோக்கியமே அழகை மேம்படுத்துகிறது.

ஒவ்வொருவருக்கும் கண் என்பது மிக மிக முக்கிய உறுப்பாகும். எனவே கண்களை நாம் அதிக கவனத்துடன் கவனித்துக் கொள்ள வேண்டும். பொதுவாக ஒருவரின் முக அழகு அவர்களின் கண்களைப் பொருத்தே அமையும். எனவே அழகான கண் அமைவது நம் முகத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது. கண்களின் ஆரோக்கியமே அழகை மேம்படுத்துகிறது.

பொதுவாக கோடைக் காலத்தில் அதிக உஷ்ணத்தின் காரணமாக சிலருக்கு கண்கள் சிவந்து காணப்படும். மேலும் தூசு விழும் பொழுது கண்களை அதிகமாக கசக்குபவர்களுக்கு கண் சிவப்பாகி தண்ணீர் கொட்டும்.

இவ்வாறு செய்வது கண்ணுக்கு கெடுதலாகும். எனவே கோடை காலத்தில் கண்களை அதிகக் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும். வெளியில் சென்று வரும் பெண்கள் வீட்டிற்கு வந்த உடன் கண்ணையும் முகத்தையும் சுத்தமான நீரினால் நன்கு கழுவ வேண்டும். அப்போது தான் கண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

கண்களின் அழகை விரும்பும் பெண்கள் நன்றாகத் தூங்க வேண்டும். நன்றாக தூங்காவிடில் கண்கள் சிவப்பாக இருக்கும். தூங்கும் போது ஏழு, எட்டு மணி நேரம் கண்களை அடைத்தே வைத்திருப்பதால் ஈரத் தன்மை கண்களுக்கு கிடைக்கும். இதனால் சிவப்பு நிறம் மாறும். தூக்கம் குறைந்தால் ஈரத்தன்மை கண்களுக்கு கிடைக்காது. அதனால் வறட்சி ஏற்பட்டு கண்கள் சிவந்து விடும். மேலும் கண்ட கண்ட  ஷாம்பை உபயோகிப்பதால் கூட கண்ணின் தன்மை கெட்டு விடும். 

சிலருக்கு காலையில் கண் இயற்கை நிறத்திலும், மாலையில் சிவப்பாகவும் இருக்கும். அடிக்கடி மேக்-அப் சாதனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு சில தருணத்தில் காலையில் எழும் போதே கண் சிவந்து காணப்படும். சிலர் அதிக நேரம் டி.வி. பார்த்தாலோ, புத்தகம் வாசித்தாலோ கண்களுக்கு கெடுதல் ஏற்படும். அதே நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாத சூழ்நிலையில் புத்தகம் வாசித்தால் கண்களுக்கு சோர்வு ஏற்பட்டு பார்வை குறைவு ஏற்படும். கண்ணில் வெளிச்சம் படும்படி வாசிக்கக் கூடாது. புத்தகத்தில் வெளிச்சம் படும்படி இருக்க வேண்டும். பயணம் செய்யும் போது படிக்கக் கூடாது.

பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் கண் நோய்கள் ஏற்படும். இதனால் கண்ணின் வெண்பகுதி சிவப்பு நிறமாகி விடும். பிறகு கண்ணிலிருந்து சீழும் அடிக்கடி வெளிவரும். கண் நோய் ஒரு தொற்றுநோய். இது மற்றவர்களையும் எளிதில் பாதிக்கும். ஆதலால் கண் நோய் உள்ளவர்கள் ஆரோக்கியமாய் இருப்பவர்- களின் பொருட்கள், டவல்கள் போன்றவற்றைப் பயன் படுத்தக் கூடாது. குறிப்பாக பெண்களுக்கு கண் நோய் இருக்கும் போது அடுத்தவருடைய அழகுப் பொருள்களை எடுத்து அலங்காரம் செய்யக் கூடாது.

கான்டாக்ட் லென்சுகளை பயன்படுத்தும் பெண்கள் ஹேர்ஸ்பிரே செய்யும் போது லென்சுகளைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் ஸ்பிரேயில் உள்ள ரசாயனப் பொருள் லென்சில் தங்கி பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கெட்டியான அளவில் மஸ்கரா பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் மஸ்கரா கெட்டியாக இருந்தால் அது உருகி கண்ணுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல் தான் ஐ ஷேடோ போடும் போதும் கெட்டியாக அப்பிக் கொண்டு இல்லாதவாறு செய்ய வேண்டும். மேலும் அடுத்தவர்களின் ஐ-லைனர், மஸ்கரா போன்ற மேக்-அப் பிரஷ்களை உபயோகிப்பது, கண் நோய்களுக்கு வழி வகுத்து விடும். எனவே அதனை தவிர்த்தல் நலம்.

பொதுவாக அழகுக்கு ஆசைப்படும் பெண்கள், கண்ணுக்கு அதிக மேக் - அப் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அதிக அளவு மேக்-அப் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே கண்களுக்குள் மேக்-அப் போடும் வேலை வேண்டவே வேண்டாம்.

மேலும் கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் பெண்கள், எம்பிராய்டரி வேலை செய்யும் பெண்கள் போன்றோர் தொடர்ந்து அதிக நேரம் கண்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது. அப்படி வேலை செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால் சிறிது நேரம் சன்னல் வழியாக வெளிப்பகுதியைப் பார்த்து (அ) மரம், பூஞ்செடிகளைப் பார்த்து, பார்வையில் ஓரளவு அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

கண் பார்வைக்கேற்ற உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். வைட்டமின் 'ஏ' சத்து நிறைந்த உணவான கிரை, கேரட், பச்சை மற்றும் மஞ்சள் நிற காய்கறிகள், பால், பால்வகைப் பொருட்கள், மாமிசம் ஆகியவற்றில் இந்தச் சத்து உள்ளது.

கண் சோர்வை அகற்றுவதற்கான சில வழிமுறைகள்:

கண்களை மூடிக்கொண்டு, இரு கைகளையும் கண்களின் மீது குவித்து, சிறிது கூட வெளிச்சம் தெரியாமல் இருட்டாக இருக்கும் படி செய்து, அந்த இருட்டிலேயே விழிகளை மட்டும் மேல், கீழ், பக்கவாட்டில் என்று அசைத்து பயிற்சியளிப்பதன் மூலம் கண்களின் சோர்வை அகற்றலாம். கண்களுக்கு சோர்வு ஏற்படும் நேரங்களில் பத்து நிமிட நேரத்துக்கு கண்களை நன்றாக மூடி அமைதியாய் உட்கார்ந்திருந்து விட்டு பிறகு மீண்டும் வேலைகளை கவனிக்கலாம்.

கண் இமைகளின் மீது ஓர் ஈரத் துணியை வைத்துச் சிறிது நேரம் ஒத்தியெடுத்தால், கண்கள் குளிர்ச்சி பெறுவதுடன் கண்களுக்கு ஏற்பட்ட சோர்வு நீங்கும்.

கண்களில் மை தீட்டுவதற்கு முன்பு கண்ணுக்குள் துளியளவு இளநீரோ பன்னீரோ விட வேண்டும். அப்போது கண்ணுக்குள் லேசான எரிச்சல் ஏற்படும். அப்படியே ஒரு நிமிடம் கண்களை அடைத்து திறந்தால் கண்ணுக்கு குளிர்ச்சியும், பிரகாசமும் ஏற்படும்.

கண்களுக்கு கண்ட கண்ட மைகளை போடக்கூடாது. வீட்டில் தயாரிக்கும் கண்மையே சிறந்தது.

வீட்டில் கண்மை தயாரிக்கும் முறை:

ஒன்றரை மீட்டர் நீளம், அரை மீட்டர் அகலம் கொண்ட வாழை மட்டை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். குலை வாழையின் உட்பகுதி மட்டையாக இது இருக்க வேண்டும். துணியை இறுக்கி, முறுக்கி தேங்காய் எண்ணெய்யில் முக்கிக் கொள்ளுங்கள். அதில் தீ வையுங்கள். எரியும் ஜோதியில் மேல் பகுதியில் வாழை மட்டையைக் கவிழ்த்துப் பிடியுங்கள். திரி எரிந்து முடியும் போது வாழை மட்டையில் கரி நன்றாக பற்றிப் பிடித்திருக்கும். அதனை அப்படியே எடுத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து, கண்மையாகப் பயன்படுத்துங்கள்.

Previous Post Next Post