அரோமா எண்ணெய்கள்

லெமன் கிராஸ் எண்ணெய் (Lemon Grass Oil) சிடார்வுட் எண்ணெய் (Cedarwood Oil), ஸ்பைக்நாட் எண்ணெய் (Spicknade Oil), லெமன் எண்ணெய் (Lemon Oil), டீ ட்ரி எண்ணெய் (Tea Tree Oil), சாதாரண நல்லெண்ணெய் ஆகியவை ஒவ்வொன்றும் 10 சொட்டுக்கள் வீதம் எடுத்து கலந்துகொண்டு மசாஜ் செய்து வந்தால் பொடுகு முழுவதுமாக நீங்கி விடும். இதனை தேய்த்து அன்றே தலைகுளிக்க வேண்டிய அவசியமில்லை. ஓரிரு நாட்கள் விட்டும் குளிக்கலாம்.

லெமன் கிராஸ் எண்ணெய் (Lemon Grass Oil) சிடார்வுட் எண்ணெய் (cidarwood Oil), ஸ்பைக்நாட் எண்ணெய் (Spicknade Oil), லெமன் எண்ணெய் (Lemon Oil), டீ ட்ரி எண்ணெய் (Teatree Oil), சாதாரண நல்லெண்ணெய் ஆகியவை ஒவ்வொன்றும் 10 சொட்டுக்கள் வீதம் எடுத்து கலந்துகொண்டு மசாஜ் செய்து வந்தால் பொடுகு முழுவதுமாக நீங்கி விடும். இதனை தேய்த்து அன்றே தலைகுளிக்க வேண்டிய அவசியமில்லை. ஓரிரு நாட்கள் விட்டும் குளிக்கலாம்.

இளநரையைக் குணப்படுத்துவதற்கான வழிகள் :

வைட்டமின் பி (B) மாத்திரையை (அ) வைட்டமின் பி (B) நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். நல்லெண்ணெய்யுடன் நெல்லிக்காய் சாற்றை கலந்து சூடாக்கி தேய்த்து குளித்து வர இளமையில் தோன்றும் நரையைத் தடுக்கலாம்.

பொதுவாக கூந்தல் பராமரிப்புக்கு மருதாணி பேக் மிகவும் பயனுள்ளது. மருதாணி ஒரு கப், தேங்காய் எண்ணெய், எலுமிச்சைச் சாறு சிறிதளவு, தேயிலை நீர் இவற்றை முதல் நாளே கலந்து வைத்து விட்டு அடுத்த நாள் இதை பேக் போட்டு 1 மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் இளநரை மறையும். (இது அதிக குளிர்ச்சி தன்மை உடையதால் சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் இதை உபயோகிக்கக் கூடாது)

தேங்காய் எண்ணெய்யில் மூங்கில் இலைகளைப் போட்டு 14 நாட்கள் ஊற வைத்து பின்னர் அந்த எண்ணெய்யை தினமும் தலைக்குத் தேய்த்து வந்தால் இளநரையைத் தடுக்கலாம்.

கரிசலாங்கண்ணி சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்து வர இளநரையைத் தடுப்பதோடு வயது கூடினாலும் நரை வருவதைத் தடுக்கலாம்.

வெற்றிலை, கறிவேப்பிலை, மிளகு, சீரகம், கசகசா, கற்பூரம் இவற்றை தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து கொதிக்க வைத்து அந்த எண்ணெயை மசாஜ் செய்வதற்கு பயன்படுத்தி வந்தால் நரை வருவதைத் தடுக்கலாம். மருதாணி இலை, நெல்லிக்காய்ச் சாறு, தேயிலை நீர், முட்டையின் வெள்ளைக் கரு இவற்றைத் தேய்த்து 2 மணி நேரம் கழித்து தலையை அலச நரை வருவதைத் தடுக்கலாம்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் திரிபலா நீரை பருகி வந்தாலும் இளநரை தடுக்கப்பட்டு நல்ல பலன் கிடைக்கும். (திரிபலா தூள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.) வெந்தயம், வால்மிளகு, சீரகம் இவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து தடவி வர இளநரை மறைந்து விடும்.

வெல்லம், பீட்ரூட், நாவல்பழம், சுண்டைக்காய், முருங்கைக் கீரை, முட்டை, பேரீச்சம்பழம், திரிபலா சூரணம் இவற்றை சாப்பிட்டு வந்தாலும் இளநரையைத் தடுக்கலாம். தினமும் ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் இளநரையை தடுத்து கருமையான முடியை பெறலாம்.

மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை ஆகியவற்றை வெயிலில் உலர்த்தி பொடி செய்து பொடியினை வெள்ளைத் துணியில் கட்டி எண்ணெயில் போட்டு அந்த எண்ணெய்யை உபயோகித்து வந்தால் முடி நரைப்பது தடுக்கப்பட்டு கூந்தல் கருப்பாக வளரும்.

செம்பட்டை முடியைக் குணப்படுத்துவதற்கான வழி முறைகள்:

வறட்சியான, செம்பட்டை நிறமுடைய கூந்தலை உடையவர்கள் ஆமணக்கு எண்ணெய்யைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் உண்டாகும். செம்பட்டை முடி மாறுவதற்கு, காலை உணவில் செம்பருத்திப் பூ தோசை செய்து சாப்பிடலாம்.

தினமும் தேங்காய்ப் பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை சரியாகும். நில ஆவாரை, மரிக்கொழுந்து இரண்டையும் அளவு எடுத்து நன்றாக அரைத்து சம தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் செம்பட்டை முடி மாறி கூந்தல் கருமை ஆகும்.

தலைக்கு குளிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னர் ஆமணக்கு எண்ணெய்யை தடவி குளித்தாலும் செம்பட்டை முடி மாறும்.  ஆலிவ் எண்ணெய்யைப் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

முடி உதிர்வதைத் தடுப்பதற்கான வழி முறைகள்:

ஒரு கப் தேங்காய்ப் பாலில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து அதை மயிர்க்கால்களில் படும்படி தேய்த்து அரைமணி நேரம் கழித்து சாதாரண நீரில் தலையை அலசி வர முடி உதிர்வது நிற்கும். நாட்டு(சிறிய) வெங்காயத்தை மைபோல் அரைத்து மயிர்க்கால்களில் படும்படி தேய்த்து குளித்தால் முடி உதிர்வதை கட்டுப்படுத்தும்.

50 கிராம் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து அயோடின் உப்பு 2 தேக்கரண்டியும், ஆமணக்கு எண்ணெய் தேக்கரண்டியும் கலந்து தேய்த்து 4 அரை மணி நேரம் ஊற வைத்து குளித்தால் முடி உதிர்வது நாளடைவில் தடுக்கப்பட்டு முடி நன்கு வளரும்.

துவரம்பருப்பை முதல்நாள் ஊற வைத்து மறுநாள் நீர் வடிய எடுத்து பால் சேர்த்து அரைத்து பேக் போட்டு அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் முடி கொட்டுவது நிற்கும்.

25 கிராம் குன்றிமணியுடன் 1 ஸ்பூன் வெந்தயத்தை பொடி கலந்து செய்து அதை தேங்காய் எண்ணெய்யில் 1 வாரம் ஊற வைத்து உபயோகித்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

பசுமையான கறிவேப்பிலையை பால்விட்டு அரைத்து பேக் போட்டு 1 மணி நேரம் கழித்து தலையை  வெறும் நீரில் கழுவி வர, முடி உதிர்வது தடுக்கப் பட்டு, முடி நன்றாக செழித்து வளரும்.

நாட்டு வெங்காயத்தை அரைத்து முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து தலைக்கு தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்து வர முடி உதிர்வது தடுக்கப்படும். தயிரை தலைக்குத் தேய்த்து ஊறிய பின் சீயக்காய் தூள் போட்டு தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

முடி உதிர்வதைத் தடுப்பதற்கான அரோமா எண்ணெய்கள்:

ஜூனிபர் பெரி எண்ணெய் (Juniffer Berry Oil) -5 சொட்டு, எலாங் எலாங் எண்ணெய் (Yalang Yalang Oil) - 7 சொட்டு, கட்சோலி எண்ணெய் (Kutcholy Oil) - 8 சொட்டு, ஆமணக்கு எண்ணெய் 10 கிராம், சாதாரண நல்லெண்ணெய் - 90 கிராம், இவற்றையெல்லாம் கலந்து தலை முழுவதும் பூசி மசாஜ் செய்து அன்றைய தினமோ (அ) மறுதினமோ தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

வழுக்கை வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்:

பெண்களிலும் சிலருக்கு தற்காலிகமாக வழுக்கை ஏற்படுவதுண்டு. இது முடி வட்ட வடிவத்தில் நிறைய உதிர்வதால் ஏற்படுகிறது. வழுக்கை விழ ஆரம்பித்ததும், உடனேயே அதனை சரிப்படுத்துவதற்கான வழிகளை கையாள வேண்டும். இல்லாவிடில் அதனைக் குணப் படுத்துவது கடினம். உடலில் அதிக உஷ்ணம், மன அமைதியின்மை போன்றவற்றாலும் வழுக்கை ஏற்படுவது உண்டு. சிலருக்கு பரம்பரை காரணமாகவும் வழுக்கை ஏற்படுவதுண்டு. வழுக்கையை சரிப்படுத்த சில வழி முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இலந்தை இலையை அரைத்து அதன் சாற்றை வழுக்கையுள்ள இடத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்யில் வெந்த யத்தைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு உபயோகித்து வந்தால் வழுக்கை விழுவதை கட்டுப்படுத்தலாம். வழுக்கை விழுவதற்கான காரணங்களில் புழுவெட்டும் ஒன்று. இதற்கு சோற்றுக் கற்றாழையை எடுத்து அதனுள் இருக்கும் சோற்றை மட்டும் எடுத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கை விழுவதை தடுக்கலாம். அரளிச் செடியினை கீறி பால் எடுத்து தடவி வர புழுவெட்டினால் ஏற்படும் வழுக்கைக்கு நல்ல பலன் கிடைக்கும்.

நாட்டு(சிறிய) வெங்காயத்தை அரைத்து மயிர்க் கால்- களில் நன்கு அழுத்தி தடவி ஊற வைத்து தலையை அலசினாலும் புழுவெட்டினால் ஏற்படும் வழுக்கைக்கு நல்ல பலன் கிடைக்கும். அதிமதுரத்தை எருமைப்பாலில் அரைத்து வாரத்திற்கு மூன்று முறை தடவி வர நல்ல பலன் கிடைக்கும். பூண்டை உலர்த்தி பொடி செய்து அதை தேனில் கலந்து வழுக்கையின் மீது பூசி வந்தால் முடி வளரும்.

முடி வளர்வதற்கான அரோமா எண்ணெய்கள்:

ரோஸ்மேரி என்கிற அரோமா எண்ணெய்யை 4. சொட்டு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தடவி வந்தால் முடி நன்றாக வளரும். லாவண்டர் எண்ணெய் (Lavender Oil) - 5 சொட்டு, லெமன் எண்ணெய் (Lemon Oil) - 15 சொட்டு, ரோஸ் மேரி எண்ணெய் (Rosemary Oil) 15 சொட்டு,  டீ ட்ரி எண்ணெய் (Tea Tree Oil) - 10 சொட்டு இவற்றை தேங்காய் எண்ணெய்யில் கலந்து தினமும் தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.

Previous Post Next Post