"கொரோனாவிற்கு முன்பு வரை ஆங்கில மருத்துவம்படிக்க ஆசைப்பட்ட இளைய தலைமுறையினர், கொரோனாவிற்கு பிறகு சித்த மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறார்கள். ஏனெனில் கொரோனா வைரஸ் தாக்கமும், அதற்கு தீர்வாக அமைந்த கபசுர குடிநீரும், சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை சிறப்பாக வெளிக்காட்டியிருக்கிறது. அதனால் பலரும் சித்த மருத்துவத்தை பின்பற்ற தொடங்கி இருப்பதுடன், தங்களது குழந்தைகளையும் சித்த மருத்துவம் படிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்" என்று உற்சாகமாக பேசத் தொடங்குகிறார்கள், சித்த மருத்துவர்கள்.

"கொரோனாவிற்கு முன்பு வரை ஆங்கில மருத்துவம்படிக்க ஆசைப்பட்ட இளைய தலைமுறையினர், கொரோனாவிற்கு பிறகு சித்த மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறார்கள். ஏனெனில் கொரோனா வைரஸ் தாக்கமும், அதற்கு தீர்வாக அமைந்த கபசுர குடிநீரும், சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை சிறப்பாக வெளிக்காட்டியிருக்கிறது. அதனால் பலரும் சித்த மருத்துவத்தை பின்பற்ற தொடங்கி இருப்பதுடன், தங்களது குழந்தைகளையும் சித்த மருத்துவம் படிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்" என்று உற்சாகமாக பேசத் தொடங்குகிறார்கள், சித்த மருத்துவர்கள்.

திருவண்ணாமலையை சேர்ந்தவரான இவர், சித்த மருத்துவர். மருத்துவம் பயில ஆசைப் படும் அரசுப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வழிகாட்டியாக செயல்படுவதுடன், பல பள்ளிக்குழந்தைகளின் மனதில் சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை ஆழமாக விதைக்கிறார். கூடவே மாதந்தோறும் இலவச மருத்துவ முகாம்களை நடத்துவதோடு சித்த மருத்துவம் தொடர்பான படிப்புகள், பணி அனுபவங்கள்... போன்றவற்றை விளக்கி, மாணவ - மாணவிகளுக்கு தெளிவு கொடுக்கிறார். அவர், சித்த மருத்துவக் கல்வி மற்றும் அது தொடர்பான சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். . 

சித்த மருத்துவத்திற்கு இளைய தலைமுறையினர் மத்தியில் வரவேற்பு இருக்கிறதா?

3 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, இப்போது சிறப் பான வரவேற்பு கிடைத்திருக்கிறது. கொரோனா வைரஸ்தான், அதற்கான காரணம். கொரோனாவை கண்டு மருத்துவ உலகமே விழிபிதுங்கியபோது, சித்த மருத்துவர்கள் அதை மிகவும் அனாயாசமாக கையாண்டு, தீர்வு வழங்கினர். சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்பட்ட 'கபசுர குடிநீர்'தான், இன்றளவும் சிறப்பான மருந்தாக திகழ்கிறது. இதன் காரணமாக, சித்த மருத்துவத்தின் மீது இளைய தலை முறையின் கவனம் பதிந்திருக்கிறது. நிறைய மாணவர்கள், தாமாகவே முன்வந்து சித்த மருத்துவம் படிக்கிறார்கள்.

ஆங்கில மருத்துவத்திற்கு இணையாக சித்த மருத்துவம் கவனம் பெறாதது ஏன்?

ஆங்கில மருத்துவத்திற்கு வழங்கப்படும் முக்கியத்துவம், சித்த மருத்துவத்திற்கு வழங்கப்படுவதில்லை. அதேபோல, சினிமாவிலும் ஆங்கில மருத்துவத்தின் தாக்கம்தான் அதிகமாக இருக்கிறது. இவை அனைத்தையும் தாண்டி, நம் வீட்டிலும் ஆங்கில மருத்துவத் தின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது. குழந்தைகளுக்கு சளி-காய்ச்சல் என்றால், பெற்றோர் ஆங்கில மருத்துவத்தை தான் நாடுகிறார்கள். வீட்டு வைத்தியம், நாட்டு வைத்தியம், கை வைத்தியம் எல்லாம் நம் வீடுகளில், புழக்கத்தில் இருந்தவரை சித்த மருத்துவமும், சித்த மருத்துவ படிப்புகளும் குழந்தைகளின் மனதில் உயிர்ப் போடுதான் இருந்தன. அந்த 'பந்தம்' விட்டுப்போன பிறகு தான், சித்த மருத்துவம் மீதான ஈர்ப்பு குறையத் தொடங்கியது.

சித்த மருத்துவம், ஆங்கில மருத்துவத்திற்கு . இணையானதா?

நிச்சயமாக. இதுவும் ஐந்தரை ஆண்டுகால மருத்துவ படிப்பு தான். இதற்கும், 'நீட் தேர்வு' கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இணையாகதான், சித்த மருத்துவ படிப்பும் இருக்கும். ஆனால் சித்த மருத்துவத்தில் கூடுதலாக, சித்தர்களின் மருத்துவ பாடல் குறிப்புகளை படிக்க முடியும். நோய் பாதிப்புகளையும், அதை குணப்படுத்தும் மருந்து தயாரிப்பையும் அனுபவப்பூர்வமாக கற்றுக்கொள்ள முடியும். ஒரு நோய்க்கு நீங்களே மருந்து தயாரித்து கொடுத்து குணமாக்கும் ஆனந்த அனுபவம், சித்த மருத்துவத்தில் மட்டும்தான் கிடைக்கும்.

சித்த மருத்துவத்தின் தனிச்சிறப்பு என்ன?

சித்த மருத்துவத்தில் 'தற்காலிகம்' என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. நோயின் மூல காரணியை கண்டறிந்து, நிரந்தரமாக குணப்படுத்துவதுதான் சித்தத்தின் தனிச்சிறப்பு. அதேபோல, சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் மருந்துகள், நோய் காரணிகளை கொல்லுமே தவிர, பக்க விளைவு களை உண்டாக்காது. இதை ஆங்கில மருத்துவத்தில் எதிர்பார்க்க முடியாது.

சித்த மருத்துவம் படிக்க 'தமிழ் மொழி பாடம்' அவசியமா?

ஆமாம். தமிழ் மொழி பாடம் சித்த மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும். இருப்பினும் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே சித்த மருத்துவம் படிக்க முடியும் என்பதில்லை. தமிழ்நாட்டிற்கு சம்பந்தமில்லாத பல வடநாட்டவர்களும் சித்த மருத்துவம் படிக்கிறார்கள். தமிழ் மொழியை கற்றுக்கொடுக்க, சித்த மருத்துவத்தில் பிரத்யேக 'தமிழ் மொழி' பாடம் இருப்பதால், தமிழ் மொழி தெரியாதவர்களும் படிக்கலாம். தமிழ் ஞானம் நிரம்பியவர்களுக்கு, சித்தர்கள் பாடல்கள் நிறைய ஆச்சரியங்களைக் கொடுக்கும்.

சித்த மருத்துவம் படித்தவர்களுக்கு உலகளாவிய தேவை இருக்கிறதா? 

நிறையவே இருக்கிறது. சிங்கப்பூர், ஜப்பான், மலேசியா... போன்ற பல உலக நாடுகளை சேர்ந்தவர்கள், சித்த மருத்துவத்தால் ஈர்க்கப்பட்டு சிகிச்சை பெற தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள். வெளிநாட்டவர்களுக்கு சித்த மருத்துவத்தின் அடிப்படை பிடித்திருக்கிறது. அதாவது, நோய் பாதிப்பின் காரணங்களை விளக்கிக் கூறி, அவர்களது மனதையும், உடலையும் தயார்படுத்தி, அதிலிருந்து நிரந்தரமாக மீண்டு வர மருந்து கொடுப்பதை அவர்கள் விரும்புகிறார்கள். எந்த காரணத்தினால் நோய் உண்டாகிறது என்பதை தெரிந்து கொண்டு, அந்த வாழ்வியல் பழக்கத்தை மாற்றிக்கொள்கிறார்கள்.

சித்த மருத்துவ படிப்புகள் மூலமாக அரசு பணி களில் சேர முடியுமா?

முன்பைவிட, இப்போது அரசு துறைகளில் பணியாற்றும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது. அரசுப்பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளும் அதிகரித்திருக்கின்றன. இவை எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும்.

சித்த மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ-மாணவி களுக்கு உங்களுடைய அறிவுரை?

எல்லா மருத்துவ முறைகளிலும் காப்பாற்ற முடியாது என்று கைவிடப்பட்ட நிலையில்தான், இறுதி நம்பிக்கையாக சித்த மருத்துவத்தை நாடி பலர் வருகிறார்கள். நாமும், அவர்களை கைவிட்டுவிடக்கூடாது. அவர்களின் நோய் தன்மையை முழுமையாக உள்வாங்கி, இறை நம்பிக்கையுடன் மருத்துவம் செய்தால், நிச்சயம் நல்லதே நடக்கும். இப்படி, பலராலும் கை விடப்பட்ட நோயாளிகளை சித்த மருத்துவம் பல நூறு ஆண்டுகளாக காப்பாற்றி வருகிறது என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். சித்தமும், நித்தமும் சிறப்பாக அமையும்.

Previous Post Next Post