உடல் இயக்கத்தில், புரோட்டீன்களின் பங்கு மிக முக்கியமானது. அதேபோல உடல் ஆரோக்கியத்திற்கும், புரோட்டீன் அவசியமான ஒன்று. சரி..! புரோட்டீன் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா...?

உடல் இயக்கத்தில், புரோட்டீன்களின் பங்கு மிக முக்கியமானது. அதேபோல உடல் ஆரோக்கியத்திற்கும், புரோட்டீன் அவசியமான ஒன்று. சரி..! புரோட்டீன் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா...?

புரோட்டின் என்றால் என்ன?

நம் உடலுக்குத் தேவை யான சத்துக்களில் முதன்மையானது புரோட்டீன். இது புரோட்டி லோஸ்' என்ற கிரேக்க மொழி வார்த்தையில் இருந்து வந்தது. இதன் அர்த்தம், 'அடிப்படை அல்லது 'முதல் இடம். 1883-ம் ஆண்டில்தான் புரோட்டீன் என்ற வார்த்தை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. நமது உணவை சமநிலைப்படுத்தி நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பது இந்த சத்துதான். சராசரியாக ஒரு மனிதனுக்கு தினமும் 56 கிராம் புரோட்டீன் தேவை.

எந்த வயதில், எவ்வளவு ரோட்டீன் தேவை?

மூன்று வயது வரை 13 கிராம் புரோட்டின் அவசியம். 4 முதல் 8 வயது வரை 19 கிராம் புரோட்டீன் அவசியம். 9 முதல் 13 வயது வரை 13 அவசியம். 14 முதன் 34 கிராம் 18 வயது வரையுள்ள சிறுமிகளுக்கு 46 கிராம் புரோட்டீனும், 14 முதல் 18 வயது வரையுள்ள பையன் களுக்கு 52 கிராம் புரோட்டீன் சத்தும் அவசியம். 19 வயதைத் தாண்டிய பெண்களுக்கு 46 கிராமும், 19 வயதைக் கடந்த ஆண்களுக்கு 56 கிராமும் தேவை.

புரோட்டீன் நிறைந்த உணவுகள்

இறைச்சி, மீன், முட்டை, சீஸ், பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்கள், சோயா பீன்ஸ், பட்டாணி, துவரம் பகுப்பு, பாதாம் பகுப்பு, முந்திரி, பாதாம் நெய், சோயா பால்,' கோதுமை ரொட்டி, பசலைக்கீரை, சூரியகாந்தி விதை... இதில் அதீத புரோட்டீன் நிறைந்திருக்கும்.

புரோட்டீன் வகைகள்

நமது உடலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வகை புரோட்டீன்கள் உள்ளன. ஒவ்வொரு புரோட்டீனுக்கும் ஒரு குறிப்பிட்ட தேவையும் வேலையும் உண்டு. உதாரணமாக, தலைமுடி கெரோடின் என்ற புரோட்டீனால் ஆனது. அதேபோல நமது மொத்த உடல் எடையில் 18 முதல் 20 சதவீதம் புரோட்டீன்களால் ஆனது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் பெறப்படும் புரோட்டீன், பொதுவாக 2 அல்லது அதற்கும் குறைவான நாள் தான் உடலில் இருக்கும். அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சு என்பார்கள் அது புரோட்டினுக்கும் பொருந்தும்.நமது உடலுக்கும் வயதுக்கும் ஏற்றபடி அளவோடு சாப்பிடுவது நல்லது.

Previous Post Next Post