பாக்டீரியா அறிமுகம்:

இன்றும் உலகில் பல நாடுகளில் மக்கள் காசநோய்  காலரா, ஆந்த்ராக்ஸ் போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். 'காலரா'வை பெரும்பாலும் ஒழித்து விட்டதாக உலக நாடுகள் கூறினாலும் ஏழ்மையான மக்கள் வாழும் சுற்றுப்புறச்சூழல் காக்கப்படாத பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத மக்களிடம் மேற்கண்ட நோய்களை பார்க்கலாம். சமீபத்தில் 'ஆந்த்ராக்ஸ்' என்ற நோய் உலகையே ஆட்டிப் படைத்தது... காசநோய் இன்றும் மக்களைவிட்டு அசைய மறுக்கிறது. காரணமான மேற்கண்ட நோய்களுக்கு பாக்டீரியாக்'களை கண்டுபிடித்து, அதற்கு எதிரான பாதுகாப்பு முறைகளையும் உலக நலனுக்காக கூறிய மருத்துவமேதை ஹென்ரிச் ஹெர்மன் ராபர்ட் கோச் என்பவர் ஆவார். 

இன்றும் பல நோய்கள் பாக்டீரியாக்களின் தாக்குதலினால் ஏற்படுவதை பரிசோதனை'கள் மூலம் அறிகின்றோம். பின் மருத்துவம் பார்க்கிறோம். 

இளமைப் பருவம்:

Biography of Robert Koch-பாக்டீரியாக்களைக் கண்ட ராபர்ட் கோச் (1843 - 1910)

இவர் ஜெர்மனியில் 1843 - ஆம் ஆண்டு, டிசம்பர் 11 - ம் தேதி ஹனோவர் நகரத்தில் பிறந்தார். உள்ளூரில் பள்ளிப் படிப்பை முடித்த அவருக்கு தான் மருத்துவராக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். மேல்நிலைப் படிப்பை நல்லபடியாக முடித்த அவர் மருத்துவப் படிப்பிற்காக 'கோட்டிஞ்சன்' பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு மனித நோய்களைப் பற்றியும், அவற்றிற்கான காரணங்கள் பற்றியும் நன்கு படித்தார். படிப்பை முடித்த அவர் மாவட்ட மருத்துவ அதிகாரியாக வேலைக்கு சேர்ந்தார். அப்போதுதான் பல நோயாளிகளை (இன்ஸ்பெக்ஷன்) பரிசோதனை செய்கின்றபோது, அவர்களுக்கு வந்திருக்கும் நோய்களைப் பற்றி அறியமுடியாமல் தவித்தார். அதற்கான ஆய்வில் இறங்கினார். 

சில காலம் அதிகாரியாய் பணிபுரிந்து விட்டு, பெர்லின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு அவரது முழு கவனமும் சில நோய்களுக்கான காரணத்தை அறிய இருந்ததால் அதை ஆய்வு செய்தார். குறிப்பாக காலரா, காசநோய், ஆந்த்ராக்ஸ் நோய்கள் உண்டாக காரணத்தை அறிய ஆர்வத்தோடு இரவும், பகலும் உழைத்தார். அவரின் 'நோய் அறிதல்' பற்றிய ஆர்வத்தை அறிந்த பல்கலைக்கழகமானது தொற்று நோய் ஆய்வுக்கழகத்தின் இயக்குனராகவும் நியமித்தது.

பாக்டீரியா கண்டுபிடிப்பு:

முதலில் ஆந்த்ராக்ஸ் நோயை உண்டாக்கும் பாக்ரியா எது என்பதை கண்டறிய தீவிரமாக ஆராய்ந்தார். மனிதர்களுக்கும் , விலங்குகளுக்கும் இந்த நோய் தொற்று காரணமான பாக்ஸியா "பாசில்லஸ் ஆந்த்ராக்ஸ்" என 1876 - ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். இந்த பாக்டீரியாதான் அந்த நோய்க்கு முழுக்காரணம் என மருத்துவர்களிடம் நிரூபித்து காண்பித்தார். இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்று . குறிப்பிட்ட நோய்க்கு குறிப்பிட்ட பாக்டீரியாவே காரணம் என்று அவர்தான் முதல் முதலில் மருத்துவ உலகிற்கு எடுத்துரைத்தார்.

இதற்கு அடுத்து அவர் 'காசநோய்' பற்றி ஆராய புகுந்தார். இந்த நோயால் பல்லாயிரக்கணக்கானோர் உலகம் முழுவதும் இறந்து கொண்டிருந்தனர். இந்த நோய்க்கான பாக்டீரியா எது என கண்டுபிடித்து, அதற்கான மருந்தை தயாரித்தால்... நோயே இல்லாமல் செய்து விடலாம் என உணர்ந்து செயல்பட்டார். தீவிரமாக ஆறு ஆண்டுகள் உழைத்து காச நோய்க்கான காரணம் 'மைக்ரோ பாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ்' என்ற பாக்டீரியா என கண்டுபிடித்தார். இப்பாக்டீரியாவை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்கும்படி சக மருத்துவர்களை வேண்டிக் கொண்டார். அடுத்து காலரா நோய்க்கான பாக்டீரியாவை கண்டுபிடிக்க தீவிரமானார்.

சாதனை விருது:

கடுமையான உழைப்பின் விளைவாக 1883 - ஆம் ஆண்டு காலரா நோய்க்கான பாக்டீரியா... 'விப்ரியோ காலரா' என்பதைக் கண்டறிந்தார். உலகை அச்சுறுத்தும் மூன்று நோய்களுக்கான 'பாக்டீரியா'க்களை கண்டுபிடித்ததற்காக அவரை உலகமே பாராட்டியது. காசநோய்க்கான பாக்டீரியாவை கண்டுபிடித்ததற்காக அவருக்கு 1905 - ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை வழங்கி கௌரவித்தது. பாக்டீரியாக்களை கண்டறிய பயன்படும் உபகரணங்களை தானே உருவாக்கினார். 

அந்த உபகரணங்கள் இன்றும் பயன்பாட்டிற்கு உதவுகின்றன என்பதுதான் சாதனை. இன்று பல நோய்களுக்கு காரணமான பாக்டீரியாக்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு முன்னோடியாய், வழிகாட்டியாய் இருந்தவர் ராபர்ட் கோச் ஆவார். இன்று பாக்டீரியா தனித்துறையாக உருவாகி விட்டது. 

மறைவு :

ஆம் பாக்டீரியாலஜி என்று வளர்ந்திருக்கிறது. இந்த மனித சமூகத்திற்காக அல்லும், பகலும் உழைத்த அவரை 1910 - ஆம் ஆண்டு , மே 27 - ம் தேதி மரண தேவன்... அவரின் 66 வது வயது ) அழைத்துச் சென்று விட்டது கொடுமை... இன்று பலகோடி மக்களை ஆந்த்ராக்ஸ், காலரா, காசநோய் போன்ற கொடிய நோய்களிலிருந்து காப்பாற்றிய அவரை நாம் என்றென்றும் மறவாமல் வாழ்வதே பெருஞ்சிறப்பு.

Previous Post Next Post