தொலைக்காட்சிப் பெட்டி அறிமுகம்:

Biography of John Logie Baird - தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தவர் ஜான் லோகி பைர்டு  வாழ்க்கை வரலாறு(1888-1946)

இன்றைய வீடுகளில் இன்றியமையாத அதாவது மிக மிக மிக இன்றியமையாத ஒன்று எது என்றால் ... அது ... டி.வி ... என்ற தொ லைக்காட்சிப் பெட்டிதான். வீட்டிலுள்ளோரின் பெரும் பொழுது 'சின்னத்திரை' என்ற டி.வி.தான்... இன்று டி.வி. இல்லை என்றால் 'நான்' இல்லை என்ற அளவிற்கு மக்கள் மாறிவிட்டார்கள். டி.வி.யை பார்க்காத ஒருவரை வேற்றுக்கிரகவாசிகளைப் போல பார்க்கிறார்கள் மக்கள். இன்று உலகெங்கிலும் கோடிக்கணக்கான 'சேனல்'கள் தினமும் 'ஓடிக்' கொண்டிருக்கின்றன. உலகின் எந்த மூலையிலும் நடக்கும் நிகழ்ச்சியையும் உடனுக்குடன் 'நமக்கு' காண்பிக்கும் அதிசய தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்து சாதனை படைத்தவர் ஜான் லோகி பைர்டு என்பவராவார்.

இளமைப் பருவம்:

Biography of John Logie Baird - தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தவர் ஜான் லோகி பைர்டு  வாழ்க்கை வரலாறு(1888-1946)

ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள ஹெலன்பர்க் என்ற இடத்தில் 1888 - ஆம் ஆண்டு இவர் பிறந்தார். தந்தையார் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். குடும்பத்தில் வறிய நிலை ஏழ்மை நிலை என்றாலும் 'பிள்ளை ' நன்கு வளர்ந்தார். உள்ளூர் பள்ளிக் கூடத்தில் சேர்த்தனர். அங்கு நன்கு படித்தார் பைர்டு. படிக்கும்போதே புதுப்புதுக் கருவிகளை செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளி ... உயர்நிலைப் படிப்பை முடித்த அவர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் 'குடும்ப வறுமையை' மீறி சேர்ந்து விட்டார்.

கண்டுபிடிப்பு:

ஆனால் வறுமையின் காரணமாய் படிப்பை தொடரமுடியவில்லை. கல்லூரியை விட்டு வெளியே வந்த அவர் 'மோட்டார்' கம்பெனி ஒன்றில் சாதாரண ஊழியராய் சேர்ந்தார். ஓய்வு நேரங்களில் ஏதாவது செய்து கொண்டிருப்பார். வியாபாரமும் செய்து வறுமை'யை விரட்ட முயன்றார். ஆனால் முடியவில்லை. அவருக்கு பெரிய திரைபோல 'வீட்டிற்குள்' சிறிய திரை ஒன்றை அமைக்க தீவிரமாக ஆய்வு மேற்கொண்டார். உள்ளூரில் ஆய்வு செய்தால் ஒரு பிரயோசனமும் இல்லை என்பதால் 'லண்டன்' சென்றார். அங்கு பல இடங்களில் அலைந்து ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் மாடியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்தார் அங்கு தன் ஆய்வை மேற்கொண்டார்.

சதுரமான கண்ணாடி பெட்டியை உருவாக்கினார். பிம்பங்களை உருவாக்கும் 'ரிப்ளெக்ஷன்' கருவியை செய்தார். மேற்கொண்டு செய்வதற்கு கையில் பணமின்றி பலரிடம் கையேந்தினார். எவரும் உதவவில்லை... 'வீட்டிற்குள்' சினிமா தெரியுமாம்... யாரிடம் கதை அளக்கிறான் இவன்? என்று பலர் கேலி செய்தனர். உடுக்க நல்ல உடையில்லை. உண்ண நல்ல உணவில்லை... என்றாலும் தான் எடுத்த காரியத்தை முடித்தே ஆக வேண்டும் என்ற குறிக்கோளில் கவனமாய் இருந்தார். ஒருநாள் தனக்கு தெரிந்த ஒருவனை பக்கத்து அறையில் நிற்கச் சொன்னார். அவன் உருவம் மங்கலாக தெரிந்தது... என்றாலும் அவர் மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. 

தான் நினைத்த செயல் வெற்றி பெற்றுவிட்டதாக கருதினார். தனது 'கண்டுபிடிப்பை' பொதுமக்கள் முன்பாக காண்பிக்க வேண்டும் என்று விரும்பினார். 1925 - ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் ஒரு நாளில் பொதுமக்களையும், முக்கிய பிரமுகர்களையும் அழைத்து அவர்கள் முன் தனது' சின்னத்திரை'யின் பிம்பங்களை காண்பித்தார். சிலர் ஆச்சர்யப்பட்டனர். பலர்.. என்ன இது, ஒன்றும் தெரியவில்லையே என்று அவரை கேலி செய்தனர். அவரின் 'ஒளி' பரப்பு மங்கலாகவே தெரிந்தது.

தெளிவாக தெரிவதற்காக சில மாற்றங்களை செய்தார். தொன்னூறு சதம் வெற்றிகரமாக வேலை செய்தது. 1926 - ஆம் ஆண்டு, ஜனவரி 26 - ம் தேதி புகழ்பெற்ற இராயல் சொசைட்டியின் முக்கிய உறுப்பினர்கள் முன் தனது 'ஒளிபரப்பை' காண்பித்தார். படங்கள் தெளிவாக தெரிந்தன... மனிதர்கள் அசைந்தனர். சின்னத்திரை என்ற தொலைக்காட்சி பெட்டியின் உலகின் முதல் ஒளிபரப்பைக் கண்டு அதிசயமும், ஆனந்தமும் அடைந்தனர். இதை உருவாக்கிய பிதாமகன் பெயர்டை பாராட்டினர். 'வானொலி' மூலம் வெறும் 'ஒலி'யை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த மக்கள்... ஒலியுடன் 'ஒளி'யையும் பார்த்து பரவசப்பட்டனர். அவரின் சாதனையைக் கண்ட உலகப் புகழ் பெற்ற பி.பி.சி நிறுவனமானது பெயர்டின் 30 வரிசை டெலிவிஷன் முறையைப் பின்பற்றி 1929 - ஆம் ஆண்டு தன்னுடைய முதல் சோதனையை தொடங்கியது. 

அச்சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததில் திருப்தி அடைந்தாலும்... மேலும் இதனை சிறப்பாக செய்ய வேண்டும் என்று முனைந்தார். சுமார் ஏழாண்டுகள் உழைப்பில் 2.42 மீட்டர் திரையில் தியேட்டர் டெலிவிஷனை 1936 - ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி மக்களை மகிழ்வித்தார். அவரின் இந்த சாதனையை உலகமே வியந்து பாராட்டியது. வெறும் வெள்ளை நிறத்திரையை 'கலராக' மாற்றம் செய்ய விரும்பி செயல்பட்டார். இரண்டாண்டுகளில் 'கலர்' டிவியைக் கொண்டு வந்தார்.

மறைவு :

சிறு வயதிலிருந்தே புதியன கண்டுபிடிப்பதில் ஆர்வமாய் செயல்பட்டதால் தான் அவரால் உலகம் வியக்கும் உன்னதமான கண்டுபிடிப்பை கொடுக்க முடிந்தது. 1941 - ல் ஸ்டீரியோஸ்கோபிக் கலர் டெலிவிஷனையும் அறிமுகப்படுத்தினார். உலகில் சுமார் 500 முதல் 600 கோடி மக்கள் தொலைக்காட்சி என்ற டி.வி.யை தினமும் பார்த்து பொழுதை கழிக்கிறார்கள். அசையாத பொருளாய் இருந்தாலும் தனது ஒளி - ஒலியால் மக்களை ஒவ்வொரு குடும்பத்தோடு ஒன்றி வாழும் தொலைக்காட்சியை உலகிற்கு தந்த மாமேதை 1946 - ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார் என்றாலும்... அவரின் பெயர் ஒவ்வொரு தொலைக்காட்சி பெட்டியாலும் மறையாமல் வாழ்கிறது.

Previous Post Next Post