உலகெங்கும் கணினியை பயன்படுத்தும் 65% நபர்கள் Windows தான் பயன்படுத்துகிறார்கள் வருடத்துக்கு ஒருமுறை வெளியாகும் Windows பற்றிய தகவல்கள் பயனாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தும் அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும Windows 11 பற்றிய ஒரு சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது அதைப் பற்றி இந்த பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம்.

விண்டோஸ் 11 அறிமுகம் 6 ஆண்டுகளுக்கு பிறகு புதிய விண்டோஸ் வெர்ஷன்!

Windows11 செயல்பாடு

Windows XP Windows 7 Windows 8 Windows 10 வெளியிடும்போது புது செயலாக்கம் கொண்டிருந்தது அந்த வரிசையில் பார்த்தால் Windows 10 மற்றும் 11க்கு எந்த ஒரு பெரிய வேறுபாடும் இல்லை அதேபோல சிறிய மாற்றங்கள் மட்டுமே இப்போதைக்கு செய்திருக்கிறார்கள் வரக்கூடிய காலங்களில் இதில் புதிய செயலாக்கத்தை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது மேலும் Windows 10 மற்றும் 11 இடையில் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை கிட்டத்தட்ட ஒரே மாதிரியான செயல்பாட்டைக் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

Windows 11 வடிவமைப்பு

Windows 11 கான வடிவமைப்பு என்று பார்த்தால் இதுவரை பார்த்திராத ஒரு புதிய வடிவமைப்பை அறிமுகம் படுத்தி இருக்கிறார்கள் அதாவது ஒரு புதிய வகையான கிளாஸ் டிசைன் அறிமுகம் செய்திருக்கிறார்கள் அடுத்ததாக Windows 11 இல் ஒரு மிகப்பெரிய மாற்றம் START MENU ஆரம்பத்தில் எல்லா வகையான Windows இன்னும் பயன்படுத்தப்பட்ட MENU தற்போது வரை இருக்கும் Windows11 இல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் வலது பக்கம் இருந்த MENU தற்போது நடுப்பகுதியில் வைத்திருக்கிறார்கள் மேலும் Android இல் பயன்படுத்தப்படும் Widgets தற்போது Windows 11 இல் பயன்படுத்த போகிறோம் என்று தகவலில் குறிப்பிட்டிருக்கிறார்கள் ஆனால் இது எந்த அளவிற்கு பயன்பாட்டில் இருக்கப்போகிறது என்று வந்ததற்கு பிறகு தான் தெரியும் அடுத்ததாக Windows Management Control அதிகப்படியான நபர்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் பயன்படுத்தும் பொழுது multitasking பயன்பாட்டை மிக எளிமையான முறையில் கொண்டு வந்திருக்கிறார்கள். 

மேலும் நமக்கு பிடித்த வகையில் multitasking screen னை வடிவத்திற்கு எப்படி வேண்டுமானாலும் வகைப்படுத்தி வைத்துக்கொள்ளலாம் Windows 11 இல் இருக்கும் கூடுதல் சிறப்பு Windows11 இல் அடுத்து வருவது மொபைலில் சாதாரண பயன்படுத்தப்படும் Android apps எளிய முறையில் Windows11 இல் பயன்படுத்த முடியும் என்று சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது இதில் முக்கிய குறிப்பாக Google play store வர இருக்கும் Windows 11 இல் பயன்படுத்த முடியாது அதற்கு மாற்றாக Amazon app store மூலமாகவே நாம் ஆண்ட்ராய்டு செயலியை பயன்படுத்த முடியும் என்று தெரிவித்திருக்கிறார்கள். 

இறுதியாக நீங்கள் விண்டோசை பணம் கொடுத்து அல்லது நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் default ஆக இன்ஸ்டால் செய்து கொடுத்து இருந்தார்கள் என்றால் உங்களுக்கு ஒரு சில நாட்களில் அப்டேட் வந்துவிடும்.

Previous Post Next Post