தங்கம் என்றாலே எல்லாருக்கும் அலாதி பிரியம் தான், இது மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. தங்கம் அழகுபடுத்தும் ஆபரணம் மட்டுமின்றி முதலீடு செய்வதற்கு சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. பொதுவாக பண்டிகை தினங்களில் தங்கத்தை வாங்குவது மங்களகரமானதாகவும் மகிழ்ச்சியை தருவதாகவும் பார்க்கின்றனர்.

அதனாலேயே பண்டிகை தினங்களில் பலரும் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். தங்கத்தின் விலை குறையும் போது மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக நகைக்கடைகளில் அலைமோதுகின்றனர்.
தங்கத்தை அணிகலன்களாக மட்டும் வாங்காமல் நாணயங்கள் தங்க கட்டிகள் காகித வடிவில் அல்லது தங்க பரிவர்த்தனை-வர்த்தக நிதிகள் (தங்க ETF) இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் தங்கம் வழங்கும் தங்கப் பத்திரங்கள் வடிவில் வாங்குகின்றனர். தங்கத்தில் செய்யும் முதலீடு பாதுகாப்பானதாகவும் லாபகரமானதாகவும் நமது எதிர்கால நிதி சிக்கல்களை சமாளிக்கும் வகையிலும் இருக்கிறது.
ஒருவர் எவ்வளவு தங்கம் சொந்தமாக வைத்திருக்கலாம்?
இந்தியாவில் தங்கம் வைத்திருப்பதற்கு எந்தத் தடையும் இல்லை அதேசமயம் தங்கம் வைத்திருப்பதற்கு சரியான ஆதாரம் மற்றும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஒரு நபரின் பாலினம் மற்றும் திருமண நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அவர் வைத்திருக்கும் குறிப்பிட்ட அளவு நகையை பறிமுதல் செய்ய முடியாது.
அதன் அடிப்படையில்
திருமணமான பெண் 500 கிராம் அதாவது 62.5 சவரன் தங்கத்தையும் திருமணமாகாத பெண் 250 கிராம் அதாவது 31.25 சவரன் மதிப்புள்ள தங்கத்தை வைத்துக்கொள்ளலாம்.
திருமணமான மற்றும் திருமணம் ஆகாத என இருதரப்பு ஆண்களுமே 100 கிராம் எடையுள்ள அதாவது 12.5 சவரன் தங்க ஆபரணங்களையும் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் வைத்திருக்கலாம்.
இந்த அளவு வைத்திருப்பவரின் தங்கத்தை வருமான வரித்துறையினர் சோதனையிடும் போது பறிமுதல் செய்ய முடியாது. மேலும் தங்கம் வைத்திருப்பதற்கு சரியான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் வைத்திருக்கும் பட்சத்தில் தங்கம் வைத்திருப்பதற்கு வரம்பு எதுவுமில்லை.
வருமான வரித்துறையின் சோதனையின் போது வரி செலுத்துவோரின் நகைகளை பறிமுதல் செய்வதிலிருந்து விடுவிப்பதற்காக மட்டுமே இந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தங்க முதலீட்டின் மீதான வரி செலுத்துவோர் வைத்திருக்கும் காலத்தைப் பொறுத்தது. தங்கத்தை 3 ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்தால் லாங் டெர்ம் கேபிடல் கெயின் மற்றும் ஷார்ட் டெர்ம் கேபிடல் கெயின் மூலமாக வரி விதிக்கப்படும்.
பணத்தின் அனுமதிக்கப்பட்ட வரம்பு எவ்வளவு?
தங்கத்தைப் போலவே பணத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் கைவசம் வைத்துக்கொள்வது மக்களின் விருப்பத்திற்குட்பட்டது. ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிடும் போது கையில் உள்ள பெருந்தொகை எப்படி வந்தது? யாருடையது? வருமானத்திற்கான
ஆதாரம் என்ன? (source of income) போன்ற ஆவணங்களை கைவசம் வைத்திருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு வருமான வரித்துறையினர் உங்கள் வீட்டில் இருந்து ஒரு கோடி ரூபாயை கண்டுபிடிக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்போது உங்களிடம் கிடைத்த பணம் எப்படி வந்தது என்பதற்கான முறையான ஆவணங்களை காண்பிக்க வேண்டும். வருமான ஆதாரத்தைக் காட்ட தவறும் பட்சத்தில் அந்த தொகை பறிமுதல் செய்யப்படுவதோடு 137 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் வாய்ப்புள்ளது. (Credit நித்ரா)