விரல், நகங்கள் பராமரிப்பு

விரல்கள் மற்றும் நகங்கள் சொரசொரப்பு நீங்கி பளபளப்பாக்க, நல்லெண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்யலாம். நகம் கருமையுடன் சொத்தையாகி இருந்தால் துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து பற்று போட்டு வந்தால் விரைவில் சொத்தை மறையும்.

உடலில் கால்சியம் சத்து குறைவதால் நகங்கள் பாதிக்கப்படுகிறது. கால்சியம் மாத்திரைகளையோ (அ) கால்சியம் சத்து நிறைந்த உணவுகளையோ உட்கொள்ள வேண்டும்.

நகங்களைச் சுற்றி தடித்த வலியிருந்தால் வெது வெதுப்பான நீரில் டெட்டால், பெப்பர்மின்ட் ஆயில் சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் வலி நீங்கி நகம் சுத்தமாகும். ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊற வைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.

வெற்றிலையில் சிறிதளவு சுண்ணாம்பு கலந்து அரைத்து நகத்தில் வைத்து கட்டினால் நகத்தைச் சுற்றி வரும் புண் (நகச்சுத்தி) குணமாகும். வெள்ளை ஜெலட்டின் (கால்சியம் சத்துள்ளது) இரண்டு ஸ்பூன் எடுத்து நான்கு ஸ்பூன் இளஞ்சூடான நீரில் கரைத்து விரல்களின் மீது பூசி தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து கழுவி வர நகங்கள் உடையாது.

முருங்கைக்கீரை, பப்பாளி, மாம்பழம், பேரீச்சம்பழம் போன்ற உணவு வகைகள் நகத்தை பாதுகாக்க உதவும். இளஞ்சூடான நீரில் துளசி மற்றும் புதினாவை போட்டு விரல்களை 10 நிமிடம் வைத்தால் கிருமிகள் இறந்து நகம் சுத்தமாகும்.

Previous Post Next Post