கச்சிதமான, அழகான உடலமைப்பை பெறுவதற்கான சில குறிப்புகள்:

பொதுவாக பெண்கள் இளம் பருவத்தில் தங்கள் அழகிற்கு காட்டும் அக்கறையை திருமணம் முடிந்தவுடன் காட்டுவதில் தவறி விடுகிறார்கள். இதனால் உடற்கட்டு தாறுமாறாகி விடுகிறது. இவ்வாறு நூற்றுக்கு எழுபது சதவீதம் பேர் செய்வதுண்டு. இதற்கு காரணம் பெண்களின் அலட்சியப் போக்கு தான்.

பொதுவாக பெண்கள் இளம் பருவத்தில் தங்கள் அழகிற்கு காட்டும் அக்கறையை திருமணம் முடிந்தவுடன் காட்டுவதில் தவறி விடுகிறார்கள். இதனால் உடற்கட்டு தாறுமாறாகி விடுகிறது. இவ்வாறு நூற்றுக்கு எழுபது சதவீதம் பேர் செய்வதுண்டு. இதற்கு காரணம் பெண்களின் அலட்சியப் போக்கு தான்.

"உடற்பயிற்சி செய்தால் உடலைக் குறைத்து அழகிய கட்டுக்கோப்பான உடலைப் பெறலாம்" என்று சொன்னால், "எனக்கு அதற்கெல்லாம் நேரம் கிடையாது" என்று சிலர் சொல்வார்கள். அநேக பெண்கள் தாங்கள் பருத்த உடலைப் பெற்றிருப்பது தெரிந்தும் உடலைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். என் உடல் இப்படித் தான் என்ற தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பார்கள்.

பொதுவாக, பெண்கள் குண்டாவது பிரசவத்திற்கு பிறகு தான். பிரசவம் ஆனதும் பெண்களுக்கு கொழுப்பு நிறைந்த உணவுகளையும், மருந்துகளையும் கொடுக்கி-றார்கள். கூடவே ஓய்வு என்ற பெயரில் நிறைய நேரத்தை தூங்கியேச் செலவிடுகிறார்கள். உடலில் தாய்க்கு சேரும் கொழுப்பைக் குறைக்க அவளது குழந்தை தயாராக இருக்கிறது. இதற்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

தாய் குழந்தைக்கு ஒன்றரை வயது வரை தாய்ப் பால் கொடுத்தால், தாயின் கொழுப்பில் பெரும் பகுதி குறைந்து விடும். வேலைக்குச் செல்லும் பெண்கள் பெரும்பாலோருக்கு தாய்ப்பால் கொடுக்க முடிவதில்லை.

முன்காலத்தில் மூன்றுமுறை சாப்பிடும் பெண்கள் அம்மியில் மசால் அரைத்தார்கள். ஆட்டு உரலில் மாவு ஆட்டினார்கள். தினமும் துணி துவைத்தார்கள். அவர்கள் சாப்பிட்ட அளவுக்கு வேலை பார்த்தார்கள்.

ஆனால் இப்போது மசால் அரைக்க மிக்ஸி, மாவு அரைக்க கிரைண்டர், துணி துவைக்க வாஷிங் மெஷின் இப்படி எல்லா வேலைகளையும் இயந்திரத்தின் தலையில் கட்டி விட்டு, பெண்கள் மூன்று முறை சாப்பிடுவது தேவையா? சிந்தியுங்கள்.

தற்போது சில பெண்கள் மூன்று நேரம் மூக்கு முட்டச் சாப்பிட்டு விட்டு, இடையிடையே நொறுக்குத் தீனி- யையும் ஒரு கை பார்த்து விடுகின்றனர். பெண்கள் தங்களின் உடல் உழைப்பு குறையும் போது அதற்குத் தக்கபடி உணவையும் குறைக்க வேண்டும். 

நான்கு எட்டு வைத்து நடப்பதையே பலர் பெரிய விஷயமாக நினைத்து விடுகிறார்கள். "நம்மால் நடக்க முடியாது. ஆட்டோவைக் கூப்பிடு'' என்கிறார்கள். "சாப்பிடுவதற்கு கேன்டீனுக்குப் போக வேண்டாம். இங்கே மேஜைக்கே டீயையும், வடையையும் கொண்டு வந்து விடு" என்கிறார்கள்.

கடினமாக வேலை பார்க்கும் ஒரு பெண், உட்கார்ந்து வேலை பார்க்கும் பெண்ணின் சாப்பாட்டு அளவு போல் மூன்று மடங்கு சாப்பிட்டாலும் அவளது உடல் குண்டாகாது. அதே நேரத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் இடைவேளையில் கடடைல தின்றால் கூட எடை கூடிவிடும். தினமும் ஒரு பிளேட் உருளைக் கிழங்கு சிப்ஸை, தொடர்ந்து இரண்டு மாதம் சாப்பிட்டால், உடலில் இரண்டு கிலோ எடை கூடி விடும்.

ஒரு பெண்ணுக்கு எவ்வளவு எடை தேவையோ அந்த எடை அவளது 30 வயதில் கிடைத்து விடுகிறது. 30 வயதுக்குப் பிறகு அதே எடையைப் பராமரிக்கின்ற அளவுக்கு மட்டும் சாப்பிட்டால் போதும். அதே பெண்ணுக்கு நாற்பது வயது ஆகும் போது அவள் உடலுக்கு சக்தி குறைவாக தேவைப்படுகிறது. அதனால் சாப்பிடும் உணவின் அளவைக் குறைத்து விட வேண்டும். இல்லாவிட்டால் உடல் குண்டாகும்.

உடல் குண்டானால் என்ன? எடை கூடும். நடக்க சிரமமாக இருக்கும். அவ்வளவு தானே? என்று நினைத்து தப்புக் கணக்கு போட்டு விடக் கூடாது. உடல் சோர்வு, சுவாச சிக்கல், இதய நோய்கள், மலச்சிக்கல் போன்றவை எல்லாம் தோன்றும். முக்கியமாக அதிக சதையின் காரணமாக உடல் அழகு கெட்டு விடும். இந்த உடல் கோளாறுகள் எல்லாம் தோன்றாமல் இருக்க செய்யும் வேலைக்குத் தகுந்த படி உணவு உண்ண வேண்டும். 

உடலைக் கட்டுக்கோப்பாக பராமரிக்க சில குறிப்புகள்:

உடல் குண்டானவர்கள் மெலிந்து விட வேண்டும் என்பதற்காக ஒரேயடியாக உணவை வெறுத்து பட்டினி கிடக்கக் கூடாது. உடலில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க உணவின்  அளவைக் குறைக்க வேண்டும். நன்கு வியர்க்கும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

சாப்பிட்டவுடன் ஒருபோதும் தூங்கி விடக் கூடாது. சாப்பிட்டு முடிந்த இரண்டு மணி நேரம் கழித்தே படுக்கச் செல்ல வேண்டும். சாப்பாடை வேகமாக சாப்பிடக் கூடாது. அதேப்போல வாய் நிறைய அமுக்கிக் கொண்டும் சாப்பிடக் கூடாது.

சற்று நிதானமாக சிறிது நேரம் எடுத்து மென்று, சுவைத்து சாப்பிட வேண்டும். குண்டாவர்கள் பால் சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும். அதே நேரத்தில் ஆடை நீக்கிய பால், கொழுப்பு நீக்கிய சூப் போன்றவற்றைச் பருகலாம். எண்ணெய்யில் வறுத்த - பொரித்த உணவுகளைச் சாப்பிடக் கூடாது.

இடைப்பட்ட நேரங்களில் நண்பர்களிடம் பேசிக் கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, டி.வி. பார்த்துக் கொண்டோ உணவுப் பொருள்களைக் கொறிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். கூல்டிரிங்ஸ், காபி, போன்றவற்றை அடிக்கடி குடிப்பதைத் தவிர்த்து விட்டு இளநீர், பழச்சாறு பருகும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, சாஸ், இனிப்பு பல காரங்கள் சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும். உடல் குண்டாக இருப்பவர்கள் இவற்றை அறவே நிறுத்தி விட வேண்டும். உடல் எடையை மாதம் ஒருமுறை கணக்கிட்டு வர வேண்டும். மேலும் உயரத்துக்கு தகுந்தாற் போல உடல் எடையைப் பேண வேண்டும்.

Previous Post Next Post