போலியோ தடுப்பூசி உருவான வரலாறு.

சுமார் இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இளம்பிள்ளைவாதம் Polio நோய் உலகெங்கும் பல குழந்தைகளை நடக்க முடியாமல் முடக்கி விடும். காய்ச்சல், என்று குழந்தைகளுக்கு வரும். பல நாட்கள் தொடரும் பின்னர் நாளடைவில் கால்கள் சூம்பிப் போய் விடும். அக்குழந்தை காலம் முழுவதும் முடமாகி வாழ்க்கையை தொலைத்து கண்ணீரோடு வாழும்.

இந்த நோய்க்கு எதிராக உலக மருத்துவ விஞ்ஞானிகள் .... பல மருந்துகளை கண்டுபிடித்தாலும் இளம்பிள்ளை வாத நோய் வைரஸை தடுப்பூசி மூலம் ஓட்டிய பெருமை மருத்துவமேதை குழந்தைகளின் காப்பாளர் Jonas Edward Salk அவர்களையே சேரும்.

ஜோனாஸ் எட்வர்ட் சால்க் இளமைப்பருவம் மற்றும் அவரின் கண்டுபிடிப்புகள்.


Jonas Edward Salk was an American virologist and medical researcher who developed one of the first successful polio vaccines. He was born in New York

இவர் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் டேனியல் டோரா சால்க் தம்பதிகளுக்கு 1914 - ஆம் ஆண்டு அக்டோபர் 28 - ம் தேதி பிறந்தார். பெற்றோர்கள் எளிமையான உழைப்பாளிகள், படிப்பறிவு அதிகம் இல்லாதவர்கள். எனினும் தம் பிள்ளையை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள். பெற்றோரின் உளக்கிடக்கையை உணர்ந்த சால்க் நன்றாகப் படித்தார். மருத்துவத்தின் மேல் உள்ள ஆர்வத்தால், அவர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார் . சிறந்த மாணவராய் வெளியே வந்த அவர் 1947 புகழ்பெற்ற பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் மருத்துவராய் பணிபுரியத் தொடங்கினார். அங்குதான் அவர் குழந்தைகள் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு அதனால் ஏற்படும் காய்ச்சலால் .. அவர்களின் கால்கள் சூம்பிப் போவதைக் கண்டு வேதனை அடைந்தார். 

Polio இளம்பிள்ளைவாதத்திற்கான மருந்தைக் கண்டுபிடிக்க தீவிரமாய் இறங்கினார் ... அதற்காக அல்லும், பகலும் உழைத்தார். 1950 - ல் மருந்தைக் கண்டுபிடித்து இளம்பிள்ளைவாதம் ஏற்படும் நிலையிலிருந்த குழந்தைகளுக்கு கொடுத்துப் பார்த்தார். ஒரு பயனும் தெரியவில்லை. ரசாயனங்களை மாற்றி மாற்றி ஆராய்ந்தார். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் சுமார் 58,000 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர், 21,270 பேர்கள் முடக்கு வாதத்தால் உருக்குலைந்தனர், 3,145 பேர்கள் உயிரிழந்தனர். இந்த உண்மைகள் சால்க்கை மிகவும் பாதித்தது.

Jonas Edward Salk was an American virologist and medical researcher who developed one of the first successful polio vaccines. He was born in New York

மிகவும் தீவிரமாய் மருந்தை கண்டுபிடிக்க பாடுபட்டார். அந்த மருந்து தடுப்பூசி மூலம் செயல்படுத்த முடிவு செய்தார். 1955 - ஆம் ஆண்டு ஏப்ரல் 12 - ம் தேதி அவர் Polio-வை உலசிலிருந்து அப்புறப்படுத்தும் தடுப்பூசியைக் கண்டுபிடித்தார். மகத்தான இந்த தடுப்பூசியின் பயனை உலக மக்களுக்கு எடுத்துரைத்தார். சுமார் 1,800,000 சிறுவர்களுக்கு இத்தடுப்பூசியை போட்டு பரிசோதனை செய்ததில் ... பெரும் வெற்றி கண்டார் சால்க்.

அவரின் இந்த அற்புதமான தடுப்பூசியை மருத்துவ உலகம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது. சில வகை வைரஸால் காய்ச்சல் வந்து பாதிக்கப்படும் குழந்தைகள் பின்னர் Polio-வில் நடைப்பிணமாவதை சால்க்கின் தடுப்பூசி தடை செய்வதை கண்ட மருத்துவ உலகம் ... அவரை மிகவும் போற்றிப் பாராட்டியது இக்கண்டுபிடிப்புக்காக அவருக்கு 1956 - ஆம் ஆண்டு லாஸ்கேர் விருது வழங்கியது. அந்த மாபெரும் கண்டுபிடிப்புக்கு பின் அவர் கல்வித் துறையில் ஆர்வம் காட்டினார். 1960 - ல் கலிபோர்னியாவில் பயாலஜி உயிரியல் உயர் கல்விக்கான நிறுவனத்தை உருவாக்கினார். இவரிடம் ஒரு நிருபர் ... " மாபெரும் கண்டுபிடிப்பை உலகிற்கு வழங்கிய தாங்கள் ஏன் அதை உரிமை கொண்டாடவில்லை ? " என்று கேட்டார்.

ஆக்கவுரிமை எதையும் நான் விரும்பவில்லை. சூரியன் ஒளிதர உரிமை கொண்டாடுகிறதா என்ன? ஊனமில்லாத உலகை விரும்பிய அந்த மருத்துவ மேதையை ஒவ்வொரு தாய்மாரும் தெய்வமாய் வணங்க வேண்டும். இன்று நம் குழந்தைகள் எந்தவித காய்ச்சலாலும் பாதிக்கப்படாமல் இருக்கிறது என்றால் அவரின் 'தடுப்பூசி' தான் என்பதை அறிய வேண்டும். இவர் எச்.ஐ.வி. தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும் ஆர்வம் காட்டினார். 

Polio இளம்பிள்ளைவாத தடுப்பூசியை உலகிற்கு வழங்கிய அம்மாமேதை 1995 - ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார் என்றாலும் ஒவ்வொரு நாளும் உலகெங்கும் போடப்படும் Polio தடுப்பூசி மூலம் அவர் உலகம் உள்ளளவும் வாழ்ந்து கொண்டே இருப்பார் என்பது நிஜம்தானே. இதைப் பற்றிய கருத்துக்கள் கீழே பதிவு செய்யுங்கள் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்.

Previous Post Next Post