செயற்கை சுவாசக் கருவி அறிமுகம்:

பத்திரிகைகளில்... பிரபலமான அவர் நேற்று மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார் என்று படிக்கிறோம். மூச்சு போனால் மரணம்தான். இந்த மூச்சுத்திணறல் ஆஸ்துமா நோயாளிகளை படாத பாடுபடுத்தும். காரணம் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்புதான். 

இதயம் சரிவர வேலை செய்யவில்லை என்றாலும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடனே இதனை கவனிக்காவிட்டால் மரணம் நிச்சயம் மலை ஏற்றம்  செய்பவர்களுக்கும் விமானம் ஓட்டுபவர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்படும் பல்வேறு வகை நோய்களினாலும் மூச்சுத்திணறல் ஏற்படும். 

மூச்சுத்திணறல் சிறுவர் முதல் பெரியோர்வரை படாதபாடு படுத்துகின்ற நோய் இதனை குணப்படுத்த பல மருந்துகள் இருப்பினும் மூச்சுத்திணறல் ஏற்படுகின்றபோது ஆபத்துக்கு உதவுகின்ற வகையில் புதிய செயற்கை கருவியை பொருத்தி நோயாளியை காப்பாற்றுவார்கள். 

நுரையீரலின் பணியை அந்த கருவி அந்த நேரத்தில் செய்யும். ஆபத்திற்கு நுரையீரலின் பணியை செய்யும் உயிர்காக்கும் செயற்கை கருவியை கண்டுபிடித்த மாபெரும் விஞ்ஞானி Forrest Bird என்ற அமெரிக்கர் ஆவார்.

ஃபாரஸ்ட் மார்டன் பேர்ட் இளமைப்பருவம் (Forrest Morton Bird)  

1921 - ஆம் ஆண்டு , ஜூன் 9 - ம் தேதி பிறந்த இவரின் தந்தை போர் விமானத்தை இயக்குவதில் சிறந்தவர் ஆவார் சிறுவயதிலேயே Birdக்கு விமானத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது, Bird (என்றால் பறவை என்று அர்த்தம்) என்ற பெயரின் தாக்கமோ என்னவோ பறவைகள் பறத்தலையும் கூர்ந்து பார்ப்பார். 

செயற்கைபத்திரிகைகளில்... பிரபலமான அவர் நேற்று மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார் என்று படிக்கிறோம். மூச்சு போனால் மரணம்தான். இந்த மூச்சுத்திணறல் ஆஸ்துமா நோயாளிகளை படாத பாடுபடுத்தும். காரணம் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்புதான்.  சுவாசக் கருவியை கண்டுபிடித்த விஞ்ஞான மேதை Forrest Morton Bird வாழ்க்கை வரலாறு

தந்தையுடன் விமான தளங்களுக்குச் சென்று விமானங்களை ஆர்வத்தோடு பார்ப்பார். எதிர்காலத்தில் மிகச்சிறந்த விமான ஓட்டியாக திகழ வேண்டும் என்று தனக்குள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டார். 

தன் மகனுக்கு விமானத்திலுள்ள ஆர்வத்தைக் கண்ட அவரின் தந்தையார். அவனுக்கு விதவிதமான விமான மாடல் பொம்மைகளை வாங்கிக் கொடுத்தார். பறக்கும் பொம்மைகளை கண்டு மனமகிழ்ந்தார் Bird. 

ஒருமுறை முதன்முதலில் ( உலகிலேயே ) விமானத்தை கண்டுபிடித்த ஆர்வில் ரைட்டை கண்டு, தனது விமான ஆர்வத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டார் Bird. சிறுவனின் பேரார்வத்தை கண்டு ரசித்த ஆர்வில் .. எதிர்காலத்தில் விமானத்தின் பயன்களை அவனுக்கு விவரித்தார். அடிக்கடி தந்தையோடு விமானத்தில் பறந்ததால் தானும் விமானத்தை ஓட்ட வேண்டும் என்று விரும்பினார்.

பல்வேறு நமது நாட்டில் சைக்கிள் ஓட்டுவதற்கே 12 , 13 வயதில் அனுமதிக்கமாட்டார்கள் . ஆனால் Bird தன்னுடைய 14 - வயதிலேயே தனியாக விமானம் ஓட்டும் திறமையை பெற்றார் தந்தையின் ஊக்கத்தால் 16 வயதிற்குள் சகல விமானங்களையும் ஓட்டும் தகுதிகளை பெற்றதைக் கண்டு அவரின் தந்தையே வியந்தார். 

செயற்கை சுவாசக் கருவி பற்றிய ஆராய்ச்சி:

விமானங்களின் புதிய புதிய வடிவங்களை தானே உருவாக்கினார். கல்லூரியில் பயிற்சி பெற்ற அவர் 1941 - ஆம் ஆண்டு தனது 20 - ம் வயதிலேயே அமெரிக்காவின் விமானப் படையில் புதியதாக பணிக்கு சேரும் விமானிகளுக்கு விமானம் ஓட்டும் பயிற்சி ஆசிரியராக சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்பது சாதனை. 

விமானத்தில் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கையில் குறிப்பிட்ட உயரத்திற்குமேல் செல்கின்றபோது அவர்களுக்கு காற்றில்லா நிலை ஏற்பட்டு மூச்சுத்திணறல் சுவாசக் கோளாறு உண்டாவதை கண்டார். 

மூச்சுத்திணறலால் விமானிகளால் விமானத்தை இயல்பான சரியான முறையில் ஓட்ட முடியாது. விமானியின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதை உணர்ந்த அவர் மூச்சுத்திணறல் ஏற்படாமல் எவ்வளவு உயரத்திலும் நிலை தடுமாறாமல் விமானத்தை ஓட்ட விமானிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படாமல் தடுக்கும் கருவியை கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணினார். 

நுரையீரலில் ஏற்படும் பாதிப்பால்தான் மூச்சுத்திணறல் உருவாகிறது. இதனை தடுக்க முயற்சி செய்ய வேண்டும் என சிந்தித்தார். உடனே செயலில் இறங்கினார் மனித உடம்பின் செயல்பாடுகளை அறியவும், குறிப்பாய் சுவாசத்துக்கு முக்கியமான உறுப்பான நுரையீரலை பற்றின அறிவை பெற மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு மனித உடல் நோய்கள் அதனால் ஏற்படும் விளைவுகளை நன்கு கற்றார் பின்னர் சுவாசக் கோளாறை தடுக்கும் விதமான கருவியை முதன்முதலாக 1947 - ஆம் ஆண்டு தன் 26 வயதில் கண்டுபிடித்தார். 

கழுத்தில் மாட்டிக் கொண்டு செயல்படும்படியாக அக்கருவி அமைக்கப்பட்டிருந்தது. அக்கருவியை மற்றவர்க்கு பொருத்திப் பார்ப்பதைவிட தானே சுய சோதனை செய்து கொள்வதே சிறந்தது என்பதை உணர்ந்த அவர் தான் கண்டுபிடித்த செயற்கை சுவாச  கருவியை தானே மாட்டிக் கொண்டு ஆகாயத்தில் பறந்தார். 

குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் செல்லும்போது ஏற்படும் மூச்சுதிணறல் பாதிப்பு இக்கருவியின் மூலம் தடுக்கப்பட்டது. எப்போதும் போல சுவாசம் இருந்தது . தன் கண்டுபிடிப்பு மூச்சு திணறலால் பாதிக்கப்படும் விமானிகளுக்கு மட்டுமின்றி. நுரையீரல் நோயால் அவதிப்படும் பொது மக்களுக்கும் உதவும் என்பதை உணர்ந்தார். 

நெஞ்சுவலியாலோ, நுரையீரல் பாதிப்பாலோ, இதய நோயாலோ அல்லல்படுவோர்க்கு ஏற்படும் மூச்சுத்திணறலை பாதிக்கப்பட்ட அச்சமயத்திலேயே உயிர்காக்க உதவும்படியான மருத்துவ கருவியாகவும் பயன்படுத்தப்பட்டது. இதை மருத்துவ உலகமும் ஏற்றுக் கொண்டது.

சாதனை

இவர் தான் தயாரிக்கும் மூச்சுத்திணறலுக்கு பயன்படும்படியான கருவிக்கு ' மார்க் 7' (Mark 7) என்று பெயர் சூட்டினார். இதே பெயரில் விற்பனையும் செய்தார். இக்கருவியை உபயோகப்படுத்தி பல மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன விமானிகளும் இதனை பயன்படுத்தி தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்கின்றனர். பலவீனமான நுரையீரல்கள் வலுப்பட்டு தானே இயங்க 1980 - ல் வெண்டிலேட்டர் என்ற உபகரணத்தையும் உருவாக்கினார்.

 மேலும் தனது ஆராய்ச்சி மூலம் பிறக்கும் குழந்தைகள் மூச்சு திணறினால் அவர்களை காப்பாற்றவும் 1992 - ல் ஒரு கருவியை கண்டுபிடித்தார் மனித உயிர்களை காக்கும் கருவிகளை தயாரித்த பேர்டை என்றென்றும் நாம் நினைவில் கொள்வோம் நன்றி வணக்கம்.

Previous Post Next Post